Saturday, May 30, 2009

அன்பு... சுமையா?சுகம்மா? இரண்டுமா?


புத்திரன்
கொடியது கொடியது அன்பு கொடியது
தேள் கொட்டி பரவும் விஷமது
ஐந்து வயது குழந்தையை அதன்
தாயிடம் கொண்ட முறிவாள் பிரிந்து...
பிரிந்தே ஒவ்வொரு நொடி இறந்து...
நொந்து.... காலம் மறந்தே துடித்து..
கொடியது கொடியது அன்பு கொடியது
மார்பிளக்கும் விஷமது


சுமை
கிழிசல் சட்டை
சிறுமி ஒருத்தி
குழந்தையும் பையுமாய்
பேருந்து நிறுத்த
வெயில் மாலையில்

”வெய்ட்டா இருக்குமே
என்கிட்ட கொடு” என்றேன்
”வெய்ட்டுல்ல இது
என் தம்பி” என்றாள் வெடுக்கென்று

Saturday, May 23, 2009

நிலவு பார்த்தல் அல்லது நிலவு பாட்டு


வானத்தே பறக்கும்
ஒரு வட்ட நிலா
வென்மை தெறிக்க
ஆடி ஓடும் நிலா
பிள்ளையில்லாமல் நான்
பார்க்கும் சுகந்த நிலா
மைக்ரோ ஓவனில்
வைத்து சுட்ட நிலா
கல்யாண அப்பளம்
போல் பொறித்த நிலா
எத்தனை முறை பார்த்தும்
சலிக்காத நிலா
பால்யத்தின் குல்பியை
ஞாபகபடுத்தும் நிலா
இரவு தூக்கத்தை திருடி
விடியல் ஆதவனை
மறைத்த நிலா


(ஜென் கவிதைகளை எழுத உட்கார்ந்து... சுமாரான பாடல் தான் வந்தது...பின்ன சட்டில இருக்கறதுதானே அகப்பைல வரும்)

புலப்படாத உள்ளூறிய தடை தரும் வலி




பல சந்திப்புகளில்
காதலாய் கனிந்து நின்றோம்
"வரதட்சனை கொடுக்கமாட்டோம்" அவள்
"கவிஞன் இறந்துண்டு வாழ மாட்டேன்" நான்
"நகை சீருக்கு வழியே இல்லை" அவள்
"சுய சம்பாத்தியவாதி" நான்
கல்யாணமாகும் நெருக்கத்தில்
"சாதி என்ன?" வினவினாள்
சொன்னேன்...
இரு தினம் சென்று போனித்தாள்
"வீட்டில் வேண்டாம் என்கிறார்கள்" அவள்
ஊமையாகி நின்றேன்!
நட்பு வட்டத்தில் மிகுந்த தன்னம்பிக்கைவாதியாக
கருதப்பட்ட நான்!

Thursday, May 14, 2009

வேறு மழை - ஆதவன் தீட்சண்யா



மிஞ்சிப்போனா என்னசொல்லிற முடியும் உன்னால இந்த மழையைப் பத்தி

ஓதமேறுன கொட்டாய்ல கோணில மொடங்கியும் குளுர்ல நடுங்கியிருக்கியா

உங்கூட்டுப் பொண்டுக நமுத்த சுள்ளியோட சேந்தெரிஞ்சு கஞ்சிக் காய்ச்சியிருக்காங்களா கண்ணுத்தண்ணி உப்பு கரிக்க

ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்துசெத்த சொந்தத்த எடுக்க வக்கத்து பொணத்தோட ராப்பகலா பொழங்கித் தவிச்சதுண்டா

ஒழவுமாடொன்னு கோமாரியில நட்டுக்க ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு உயிர்ப் பதற அழுதிருக்கா உங்குடும்பம்

எதுக்கும் ஏலாம உஞ்செல்லப்புள்ளையோட சிறுவாட்டக் களவாண்டு சீவனம் கழிஞ்சிருக்கா

தங்கறதுக்கு வூடும் திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே ஒண்ணு தெரிஞ்சுக்கோ மழை ஜன்னலுக்கு வெளியதான் எப்பவும் பெய்யுது உனக்கு எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.


- ஆதவன் தீட்சண்யா
(visaiaadhavan@yahoo.co.in)

(மிகவும் ரசித்த கவிதை, நன்றி: கீற்று)
http://keetru.com/literature/poems/aadhavan_5.php





Wednesday, May 13, 2009

காதல்



1... உறவின் பிறர்
முனுமுனுப்புகள்
நம் மேல் தோலில்
அமரும் தூசிதுனுக்குகள்
பறவைகளின் எச்சம்பட்டு
அணில்கள் சாவதில்லை
2.... மாலைவேளையில்
அறிமுகமான
அந்த பறவையும் நானும்
காத்திருந்தோம்
ஆனால் நீ வரவில்லை
அதனால் என்ன
காத்திருக்க இன்னும்
நிறைய மாலைகள்
உள்ளன


(15 வருடங்களுக்கு முன்னால் படித்தது.... ஏதோ ஒரு சுவை, இத்தனை நாட்களாய் ஞாபகத்தில் தேக்கிவைக்கிறது.... யார் எழுதியது என்று தெரிந்தவர் யாரேனும் சொல்லலாம்)

மௌன நாடகம்



நினைவுகளை தினம்
போத்தல்களில் நிரப்புகிறேன்
முடிந்தவுடன் அவை
வெறுமையாய் புன்னகைக்கிறது
என்னுள்