Monday, July 27, 2009

சொற்களை சுமந்தபடி

சொற்கள் குறைந்தால் கவிதை
கவிதையும் மறைந்தால் ஒன்றுமில்லை

ஒன்றுமில்லை என
சொல்ல இக் கவிதை

விதை வினை விளை
களை கலை விலை
நிலை நிலைத்து?
மலைத்து விடுத்து
சிடுத்து கடுத்து!


சீட்டு கட்டாய்
கலைத்து போடும் வாழ்க்கை
சுரக்காய் விரகாய் சுமந்தபடி
பல சமயம் குரங்காய்
பால்யம் கொறுக்கலுக்காய்

Friday, July 24, 2009

இதுவும் கடந்து போகும்




யாரிடமும் சொல்லிவிடதே என
அவளிடம் கெஞ்சினேன்
ஆபிஸில் நெருக்கமான சந்தர்ப்பத்தில்
அவளது பிட்டத்தில் கிள்ளியதை

அழுது சிவந்த அவள் அமைதியாய்
வெளியேறினாள் – மறுநாள்
அலுவலகத்தினுள் நுழைகையில்
எல்லோர் பார்வையும் என்மேல்.
கூசியது உடலும் மனமும்
வெளியேபோ என்று அனுபவ சான்றிதழும்
கொடுக்காமல் விரட்டியடித்தது எஜமானர் உலகம்
இது நடந்தது என் இருபத்தைந்தாவது வயதில்

நன்நடத்தை இல்லா இவன்
வேலையும் அற்று குடும்பத்தில்
மரியாதையும் அற்று சுற்றிதிரிந்தான்

தீராத வியாதியில் கணவனையும்
மோசமான வாஸ்துவால் வீட்டுபிரச்சனையும் தீர
காலில் வீழ்ந்துகிடந்தால் - என் நாற்பத்து ஏழாவது வயதில்
அதே அலுவலக தோழி.. ஆசிக்கூறி அனுப்பிவைத்தேன்
தாடியும் சீடர்களையும் பக்த கோடிகளையும்
வைத்துள்ள ஸ்ரீ ஸ்ரீ....... சாமியான நான்.

Wednesday, July 22, 2009

வாழ்வின் அதிசயத்தை வியந்தபடி




சில நாட்களாய் பல மணிநேரம்
தொலைபேசியில் தொடர்ந்து
அவளோடு பேசியபின்னும்
பேச வேண்டிய விஷயங்கள்
நிறைய மிச்சமிருந்தன

மனம் பொங்கி,
உள்ளுக்குள் சிரித்து
முகம் மலர – காரணி!
காதலா? அவளா?

சுகானுபாவனாய் சிந்தித்தே
பித்துபிடித்து கிடப்பது
எப்படி சாத்தியமாகிறது
ஏனிந்த சுய மோகம்!

வியாதி, மனம்,
உடல், ஆத்மா
கடவுள் அனைத்தையும்
கடந்ததோ இந்நிலை


தொடர்ந்து காதலிக்க ஆசை
வந்து மிரட்டுகிறது
ரொட்டி சுடும் கட்டையுடன்
மனைவியின் பிம்பம்

Monday, July 20, 2009

மனமென்னும் வெளியிலே


வார்த்தைகளை தேடி
வானத்தில் முழ்கி
தொலைந்து போனேன்

சதா தசையென்னும்
வாசனைகளில்
மூச்சு முட்டும்
ஆழ்ந்த மௌனமா

விரக்தியா புரியாமல்
கனத்த மனம்
கலைத்தால் நான்

அமைதி....
வார்த்தைகள்...
அமைதியான வார்த்தைகள்...
அமைதியான....
தியான...
மன....
ம....
...

Friday, July 10, 2009

வாரக்குறிப்புகள்

படிக்கவே இந்த ப்ராணன் போதாது
பின் எப்படி எழுத?

வர வியாழனாவது பாபா கோயிலுக்கு
போகனும்!

மனைவியிடம் உளறிக்கொட்டி
மாட்டிக்கொள்ள கூடாது

அனுஜன்யா, வீணாபோனவன் இவர்களைவிட
நல்லா கவித எழுதனும்!

சாருவ படிக்கறத விடனும்
சரக்கு அடிக்கறத விடனும்

என்னபன்னறது

முதல் சா மனசுக்கு ருசி
இரண்டாவது ச உடம்புக்கு சால்சா

எல்லோரடையும் அன்பு
(ஆனா நிறைய பேர் வெத்து பந்தா காட்றாங்களே)

__க்கவும்
குளிக்கவும் அவகாசம்

எப்போது சாத்தியமோ
அப்போது மழை!

சுளுக்கும் கொசுக்கடியும்
இல்லா கலவி

எல்லா கோப்பைகளும்
இந்திய கிரிக்கெட் அணிக்கே

குழந்தைகள் சாகாத போர்கள்

வியாதி இல்லா உடம்பு

// கடைசிவரை சுயமாய்
நீர்கழிக்கும் சுகம்

உறக்கத்தில் உயிர்பிரியும்
வரம் //

(வைர வரிகளை 100% ஒத்துப்போகிறேன்)

Thursday, July 2, 2009

வார்த்தைகளின் வழியே ஓடும் வார்த்தைகள்


சாத்திய கூறுகளின் வழியே
ஓடும் வாழ்க்கை

நின்று நிதானிக்க
கற்று தராத பெற்றோர்

எதையும் தவறாகவே
கற்றுதந்த வளர்கலை சுற்றம்

மனதில் எழுதி மறந்த
கவிதைகள் எத்தனையோ.....

கருவி வியாதி
வியாதி நீக்க கருவி –
வியாதி கருவி ?

பழச்சாருவை நக்கிய நாய்கள்
நிஜம் தெரியா முண்டம்

கிருஷ்ணனோ கிறுஸ்த்துவோ
அல்லாவோ புத்தனோ

வார்த்தைகளில் இல்லை வாழ்க்கை
புரிதலில்
அது புரியவே நிறைய ஒட

ஓடை நதி
கடல் - கூடல்
மடல் - குடல்
பசி - தினம்
ஒருவேளை ருசி
வேளையேனும்

வேலைவேனும்
வேலையில்லையெனில் வேலை
சொருக வழியில்லை
பிழையில்லை
வழியில்லை வாழ


காரின் பின்னால் வாசகம்
‘nobody touch u
When God within u’

சாத்திய கூறுகளின் வழியே
ஓடும் வாழ்க்கை
நின்று நிதானிக்க
கற்று தராத பெற்றோர்
பழியை போடு மற்றோர்
மேல்!