Friday, January 29, 2010

வம்சி புத்தகங்கள் வெளியீடு இடமாற்றம்

வம்சி புத்தகங்கள் வெளியீடு இடமாற்றம்


புத்தக வெளியீடு பலபேரை சென்றடையவேண்டும் அவ்வளவே. நண்பர்கள் உடனே எல்லோருக்கும் தெரிவிக்கவும். நன்றி

Wednesday, January 20, 2010

வெறுமையும் நானும் - பரவசம்

வெறுமை தரும் சூழல்
தாண்டிச் செல்கையில் சூழ்வெறுமை
கூட்டம் தேடி.. கூட்டம் அடைந்தும்
ஓம்காரம் தாண்டியும் குழந்தைவழிசெல்ல
துள்ளி விளையாடிய மழலை அமைதியாய்
கடலின் நுரைக்கும் அலைகளின் முன் தொட்டு
அவனுக்கென கைகோர்த்து திரும்பி பார்க்கையில்
எனக்கு பிடித்தவர் வெள்ளை தொப்பியுடன்
எழுந்து கொள்ள இரு பிரிவாய் நின்று சிறு நேரம்
பேசிக்கொண்டிருந்து கண்பார்வையில் மேலேறி சென்றனர்
திரும்ப வந்து துப்பாக்கியில் 4 பலூனை சுட்டு தீர்க்கையில்
திரும்பி வந்த ஷங்கரிடம் பேசிவிட்டு மிஸ்ட்டு கால் கேபிளுக்கு
டீக்கடை பார்த்துவிட்டு குழந்தையோடு வீடு திருப்புகையில்
வெங்கடேஷவரா போளி ஸ்டாலில் பருப்புபோளி
வாங்கும் பொழுது நியாபகத்தில் வந்து போனது
தண்டோராவின் இன்றைய பதிவு
வீடு வந்து ஆபிஸ் வந்து ப்ளாகை திறக்கையில்
வால் பையனின் ‘பொது புத்தி’ இப்படியாக
தொடர்கிறது வாழ்வு என்னும் மர்மப்புள்ளி
எனக்கு மட்டும் வெறுமையாய்
வெறுமைதரும் கனமற்று

Saturday, January 16, 2010

அலை சித்திரங்கள்
நுரைத்துவரும் அலைகள்
ஓயாமல் ஏதோ சொல்லிவிட்டுதான்
போகிறது வழக்கம்போல்,
புரியாமல் மௌனமாய்
பார்த்துவிட்டு கடந்துபோகிறேன்
ஒவ்வொரு முறையும்

வாழ்க்கை சித்தரத்தில்
எத்தனை மாயக்கோடுகள்

தொடக்ககோடும் முழுமைபெற்ற
கடைசிகோடும் மறந்துப்போய்
மௌனமாய் சிரிக்கும் ஓவியம்

Scene 153 short no:82 Take 2

நுரைத்துவரும் அலைகள்
ஓயாமல் கறைத்துவிட்டுதான் போகிறது
என்னுள் இருக்கும் அகங்காரத்தை
மௌனமாய் ஏற்று கடந்துபோகிறேன்

Wednesday, January 13, 2010

நான் இங்கே அவள் அங்கேஅவள் மடியின்
இதம் இல்லையெனில்
பிடி மரணம் என
காலன் சொல்லியிருப்பான்
அவளைத்தேடி துவங்குகையில்
வெண்பனியில் உறைந்திருக்கும்
அன்பின் நதியை சென்றடைந்தேன்
அவள் உடன் சென்றுவிட
மனம் துடித்தாலும்
தடுத்துக்கொண்டே இருக்கின்றன
உடன் சுற்றங்கள்

தனிமைபோர்வையில்
வழிந்துக்கொண்டிருக்கும்
எங்கள் உடல்கொண்ட மனங்களுக்கு
வார்த்தைகளே போதுமாய் இருக்கின்றன
மனச்சுமைகளை அடித்து நொறுக்க
செல்லமாய் சிணுங்கிக்கொள்ள
அன்புகொள்ள கட்டியிருக்கிக்கொள்ள
நினைவுக்கனவுகளில்

Monday, January 11, 2010

கேபிளை மூக்கில் குத்தவேண்டும், புத்தக கண்காட்சி மற்றும் நித்தியானந்தர்

(D.R.Ashok,பலாபட்டறை ஷங்கர்,வண்ணத்துபூச்சியார்சூர்யா(மெய்ஞானமூடில்), மீன்துள்ளியான், ஜாக்கிசேகர்,அப்துல்லா,காவேரி கணேஷ்,புலவர் புலி, சங்கர், தண்டோரா,மயில்ராவணன், எறும்பு ராஜகோபால்(அடுத்தபடத்தில் ஜாக்கியின் இடத்தை பிடிப்பவர்.. யூத்து..என் டர்ர்ர்ரு கவிஞர்..கேபிள் சங்கர்)
மேலும் பதிவர்களின் போட்டோ லிங்க, கேபிள் சங்கர், ஜாக்கி சேகர்.

9-1-10 வழக்கம் போல் லேட்டாக 7.55pmக்கு டிக்கெட் counter இடத்திற்கு சென்றேன். 5 ரூபாய் இல்லாத காரணத்தால் counter இடத்திலே நின்றுயிருந்தேன். பிறகு ஒருவர் பத்துரூபாய் நீட்டி ஒரு டிக்கெட் கேட்க சில்லறையில்லையென்றனர். அவர் இரண்டு டிக்கெட் எடுக்க ஒன்று இலவசமாக என்னிடம் கொடுத்தார் அந்த முகம் தெரியா அன்பருக்கு நன்றி. வாழ்க்கையில் இலவசமாக கிடைத்த முதல் பொருள். 8.10க்கு எல்லோரும் வெளியேறிக்கொண்டுயிருக்கும் போது ஞான் உள்நுழைய வழக்கம் போல் ஜொள்ளிலிட்டுக்கொண்டேதான். தண்டோரா.. கிழக்குன்னா எல்லோருக்கும் தெரியும்ன்னார். ஆனா நான் கேட்ட சில பல பேர்களுக்கு தெரியவில்லை.. அப்புறம் இரு மூரு போன்களுக்கு முறையே 420 அப்புறம் 402 என்று வழிகாட்ட நண்பர்களை சென்றடைந்தேன். வழக்கம்போல சற்று கல்லாய்த்துக்கொண்டு வெளியே வந்தோம். லக்கியும் அதிஷாவும் கலந்துக்கொள்ளாமல் ப்ரவுஷரில் மூழ்கியிருந்தார்கள் நிமிர்ந்துகூட பார்க்காமல்.(காரணம் பதிவு டைப் செய்து கொண்டிருக்கும்போதுதான் தெரிந்ததுக்கொண்டேன்). கேபிள் ’அந்த ஆளு’ என்று என் இஷ்ட எழுத்தாளரை பற்றி கூறினார். அடுத்தமுறை குவார்ட்டர் வாங்கிகொடுத்து மூக்கில் குத்தவேண்டும் என்று மனதில் குறித்துக்கொண்டேன். அவர் கையிலிருந்ததோ காலம் தப்பிய ஒரு இயந்திர புத்தகம். அவரது மார்டனஸ்ட் மற்றும் வெஸ்ட்ர்னிஸ்ட்டு ஒழுத்தாளரின் புத்தகம் அட ராமா. தண்டோராவின் கையிலிருந்த மூன்று நகுலன் புத்தகத்திற்கு குறி வைத்தேன். ரொம்ப உஷாரவே இருந்து தொலைத்தார். இனி படித்து தொலைவார்.
நண்பர்களை குடிக்க அழைத்தேன். யாரும் வரவில்லை என்பது ஆச்சரியம். (என்ன இலக்கியவாதி இவங்க) கடைசியில் ஆட்டோ ஓட்டுனரோடு சரக்கடித்து அன்றைய நாளை முடித்துவைத்தேன். ஆட்டோ 300 சரக்கு 167 = Rs.467.(மொத்தசெலவு)

வீட்டுக்கு வந்த பிறகு இன்னும் படிக்காமல் அடுக்கி வைத்துயிருக்கும் புத்தகங்கள் எனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது சித்தப்பு புக் ரிலிஸ் போது வாங்கிய கூடுதல் நாலு புத்தகங்களும் சேர்த்து. சித்தப்பு உங்க புத்தகம் படிச்சிட்டேன்.

மறுநாள்(10.01.09) மாலை நான்கு மணிக்கு நேரம்(மிகவும் அரிதாக 20 வருடங்களுக்கு ஒருமுறை) கிடைத்தது நேராக போன இடம் நித்தியானந்தரின் நிகழ்வுக்கு. ஓஷோ, ஜேகே, மஹாபெரியவர், விசிறி சாமியார் என்று சந்திக்க நினைத்தவர்களை ஒருவரைகூட பார்ததில்லை. இவரை பார்த்தது சந்தோஷமே. நித்தியானந்தரின் பேச்சு நன்றாகயிருந்தது. நடுநடுவே ஜோக் அடிச்சார்.(ஓஷோவின் நியாபகம் வராமல் இல்லை) ஏதோ ஒரு நல்ல உணர்வு இருந்தது. வரும்போது குடிக்க தோன்றவில்லை(அது முன் தீர்மானித்ததுதான்).(டாஸ்மாக் சாத்திவிட்டான் என்பது வேறுவிஷயம்) இரவு 3.30 மணிக்கு(அதிகாலை) தான் தூக்கமே வந்தது. நாளைல இருந்தது regulara செய்ய வேண்டியதை ரெகுலரா செய்யவேண்டும் என்ற வாழ்வின் தத்துவம் புரிந்தது. 16 வருட சரக்கு வாழ்க்கையில் ஒரு நாள் குடிக்காமலிருந்தது ஆச்சரியமே. அதுவே இந்த பதிவேழுத(உங்களை கொல்ல) தோன்றிய அறிய விஷயமும் கூட. வாங்கிய புத்தகம் பெயர் ’ஜீவன் முக்தி’. தள்ளுபடி விலை 150 அசல் ரூ.300. கழுத்து மாலை Rs.100(தட்ஸ் டூமச்)

பின்குறிப்பு: இரு நாள் சாயந்திரமும் பிஸியாக! இருந்ததால் சாட்டிங்கில் வரமுடியவில்லை என்று தோழிகளுக்கு(தோழர்களுக்கு: அது ரொம்ப முக்கியம்) தெரிவித்துக்கொள்கிறேன்.

Friday, January 8, 2010

அகமகிழ்தல்மலர்ச்சியா இருந்தது
பேருந்தில் நண்பனை பார்த்ததும்
எடுத்தவுடன் சிலப்பதிகாரத்தில் ஆரம்பித்தான்
பேச்சுகள் இடம் மாறிக்கொண்டேயிருந்தது
ஜன்னல் வழி செல்லும் கிராமங்களாய்
சாருவும் ஜெயமோகனும் வந்துபோனார்கள்
ஓஷோ, ஜெகே, தர்க்கம் செய்தனர்
கவிதையில் தாகூர் நகுலன் என மாறி
டக்கென்று பிரமீளிடம் மையம் கொண்டோம்
நிறுத்தம் வரவே பிரியாவிடை பெற்று
நடக்க துவங்குகையில் ஏதோ உறைத்தது
மல்லாட்ட பையும் கரைச்ச நுங்குவும்
பஸ்ஸோடு போயிருந்தது

ஒன்றுக்கும் லாயக்கில்லை எனச்
சொல்லபோகும் வார்த்தைகளை
மனசுக்குள் முன்மொழிந்துக்கொண்டே
நடந்தது கால்கள் வீடுநோக்கி

பிறிதொரு ஆறு மணிநேர
பேருந்து பயணத்தில்
நண்பனை கண்டதும்
மலர்ந்து எழுந்தது நெஞ்சம்
இம்முறை அவன்
ரூஷ்ய புரட்சியில் ஆரம்பித்தான்

Thursday, January 7, 2010

உணவின் சுருதிபேதங்கள்
1. என் பேச்சை அவள்
எப்போதும் கேட்பதில்லை
மீன் குழம்புவையடி என்றால்
கடங்காரி வழக்கம்போலவே
தேன் குழம்பே வைக்கிறாள்


2. பரிமாறும் பூபோன்ற
சுடான இட்டிலியில்
கைவைக்கும்போதெல்லாம்
சட்டென அவள் கன்னம்
உணர்கிறேன்

கன்னத்தில் ஊறுகையில்
இட்லியின் ஸ்பரிசம் வந்தமைகிறது
அவளிடம் மட்டும் சொல்லுவதில்லை
இட்லியும் கன்னமும்
ஒன்றேயென

3. ஹட்சன் அண்ணபூரனா தயிர்கள்!
ஆவின் மற்றும் பிற பால்
வழி வந்த தயிர்சாதம்,
சரவணபவன்! கணேஷ்பவன்!
தயிர்சாதம், என
ருசி பேதங்கள்
எப்போதும் இட்டுச் செல்லும்
ஆச்சரியங்களை.... !

Sunday, January 3, 2010

தமிழ்மண விருதில் இரண்டாவது கட்டத்தில்
தமிழ்மணம் விருதுகள் போட்டியில் எனது பதிவு ’தந்தியற்ற வீணை’ இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. ஓட்டளித்த அனைத்து சகபதிவர்களுக்கும், நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். கவிதை போட்டி பிரிவில் நான் வரவில்லை பா.ரா(சித்தப்ஸ்) மற்றும் நர்ஸிம் போன்ற பெருமுதலைகள் ஒரு காரணம். ஆதலால் வேறோரு பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டயிருப்பது சந்தோஷத்தை தருகிறது.

பிரிவு: தலித் மக்களின் பிரச்சனைகள், மனித உரிமை, நிறவெறி (Racism) தொடர்பான கட்டுரைகள்

1. வாக்குமூலம்...... - வாக்குமூலம்.....
அவர்கள் !!
2. இந்தியன் (Hindusthani) - veerantamil
திரு. அம்பேத்காரின் சாதனையும் உலக புரட்சியின் வித்தும்
3. புகலி -
நான் ஒரு கறுப்பினத்தவன், நான் ஒரு கறுப்பினத்தவனாகவே இருப்பேன்
4. Ponnusamy - பொன்னுசாமி
ஷாருக்கானுக்கு ஒரு நியாயம்? தமிழனுக்கு ஒரு நியாயமா?
5. அறிதலில் காதல் - D.R.Ashok
தந்தியற்ற வீணை

6. செவ்வாய்க்கிழமை கவிதைகள் - Sai Ram
தலித்தை கொளுத்தினார்கள்
7. கனவுகளே - SUREஷ் (பழனியிலிருந்து)
விலைமகளே பரவாயில்லை
8. சொல்லும் செயலும் ஒன்றே - பி.ஏ.ஷேக் தாவூத்
சாதி ஒழிப்பு: இஸ்லாமே தீர்வு


அடுத்த கட்டத்திற்கு நகர நண்பர்களே ஓட்டளிக்க இங்கே.