Saturday, May 15, 2010

அகவலோசை கவிதைகள்




ஞானம்
யோசித்து பார்க்கையில்
எளிதில் கைகூடுவதாகவும்
எளிதில் கைகூடாததாகவும்
ஒரே நேரத்தில் தோன்றுவது



ஏன் இப்படி வீணாய்
சுற்றி வருகிறது
கடிகாரத்தில் முள்




மனதில் எழுதி பாதுகாக்காமல்
விட்ட கவிதையொன்று
அழுதுக்கொண்டே
பின் தொடர்ந்தது
குழந்தையைபோல



பள்ளியும் கல்லூரியும்
கற்றுக்கொடுத்தது
கற்றுக்கொள்ளல் வகுப்பறைகளில்
இல்லையென்பதை!



வாழ்வின் அரசியலை
எளிதாய் கடக்க
உதவுகிறது
ஞானம்