Sunday, March 25, 2012

ஜிங்கிலி ஜிங்கா ஜிங்க்கு or தனித்தியல்




வாழும் வனத்தில்
எத்தனை மிருகங்கள்
எனையும் சேர்த்து

சோர்ந்துவிடாமல்
துயரங்கள் கவனமாய்
பார்த்துக்கொள்கிறது

இருதயத்தின் கேவல்களை
கேட்டுக்கொண்டிருந்தால்
கேந்திரத்தின் மாயவெளி
எட்டாமல் மறக்கும்

கடைசி ஆணாய் வாழவிருந்தால்
சமையல் உன் கடவுள்
பெண்ணாய்? – காத்து படைப்பதனால்
அவளுக்கு திமிரே போதுமானது
போனாபோகிறது என
ஒரு ஆணை கொடுப்போம்
படைத்தலுக்கு எதிராய் வார்த்தைகள்
யான் பேசேன் என் ஈசனே!
ஈசானே