
வட்டங்களிலும் சந்திப்புகளிலும்
தடித்து போயிருக்கும் சாதிய இருள்மை
அதே கொடுமை தாங்காது இனமே
சிதைந்தும் நடுங்கி பிழைத்தல்
சில கட்டங்களுக்கு மேல் உயரமுடியாமல்
போகும் அவலம்
சோற்றுக்கும் வாடகைக்குமே
ஓடி வாழும்! நரக வாழ்க்கை
வாழ்வின் தொடரோட்டத்திற்கு அஞ்சி
கனவில் கூட வர மறுத்த இறுகிப்போன காமம்
தனிமையின் உச்சத்திலிருந்து
கதறிக்கொண்டிருக்கும் மனது
தவிக்கவிட்டு செத்து போன மனைவி
சாககூடமுடியாமல் கைகளில்
தேவதையை போன்றதோர் குழந்தை
தனித்தே இருக்கும் வேதனை, கோபம், கண்ணீர்
என்றேனும் அறியபடுத்துமா உங்களுக்கு
இந்த சாபமிட்ட வாழ்க்கையினை?
இத்தனை கசடுகள் நடுவினிலும்
வார்த்தைகளின் மேல் உள்ள காதலால்
அர்த்தப்பட முயற்சிக்கும் சொற்கள்
வந்துவிழும் கணங்கள் சுகமே.



