Sunday, December 25, 2011

ஏசுவே எந்தன் கர்த்தாவே



சொல்லிக்கொள்ளாமல்
ஞானஸ்தானம்
வாங்கினாள்
சகோதரி

முன்னம் சொல்லியிருந்தாள்....
ஆனால் அது
இன்றென பகரவில்லை

யேசுவே எந்தன் கர்த்தாவே
உனக்கு ஸோஸ்த்திரம்
நல்லவேளை நீங்கள்
எங்க சொந்தக்காராக இருக்கவில்லை
இல்லையெனில் எப்படி என் தங்கை
உன்னை நேசிப்பால்

கலியுக கர்ணன் கிருத்துவத்தையே ஏற்றிருப்பான்
துரியோதனை விடுத்து
சமய சங்(கி/கொ)லிகள் பாடாய் படுத்துகிறது

காசுகாக மாறுகிறார்கள்
என அச்சு பிச்சென
எல்லா இந்திய சாதியும் சொல்லுகிறது
ஆப்பிரிக்காவிலும் இப்படி சொல்லக்கூடும்...
என்ன செய்ய
ஏசுவே எந்தன் கர்த்தாவே என்னை ஆதரி

- இயேசு: என் கிருபை உனக்குப் போதும் – 2கொரி.12:9

Saturday, December 24, 2011

பிம்பங்களில் மறைந்துறங்கும் நாம்




முப்பத்தைந்து வருட தனிமை
தனிமை கொடுக்கும் வெறுமை
வெறுமை கொடுக்கும் பித்து
பித்துகொடுக்கும் சந்தோஷவெளி
வெளியுடைக்கும் சத்தக்காரர்கள்
பார்த்தவுடன் நகர்ந்துவிடல்
சாத்தயங்களை சாத்தியபடுத்த சாதுரியங்கள்
தொடரும் விளையாட்டுகள்
மர்மம் ஞானம் தந்திரம்
என பாயும் வாழ்க்கை
எல்லாம் கடந்து போ என எவன் உளறினாலும்
கடக்கும் நேரங்களில் கவனமாயிரு என எவன் உரைப்பான்