இதய கூட்டுக்குள்ளிருந்து கலைத்து போட்ட வார்த்தைகள்இயந்திரத்தனமாய் வாழ்க்கை மாறுகையில்
கவிதை மறைகிறது வேறுமனம் வெறுமையாய்
சில்லரைகளின் முன் அய்யராவது ஆச்சாரியாவது
அபஸ்வரங்கள் மட்டுமல்ல கவிமனமும் காணாமல்தான் போகிறது
அதை உடைத்து வந்து உட்கார்ந்தாலும் வாழவின்
ஆதாரதேவைகள் அடித்து ஓடவைக்கிறது
இறைவா! அடுத்த ஜென்மத்திலாவது ஆரம்பத்திலேயே
எல்லாவற்றையும் கொடுத்துவிடு
சொகுசாய் உட்கார்ந்துக்கொண்டு
ஏழைகளை பற்றியும் ஏகாதிபத்தியத்தையும்
Atleast மாடியில் வடாம் போட்டதையும்
சியல்லோ காரை விற்றுவிட்டதையும்
பற்றியாவது எழுதி தொலைக்கிறேன்
காதலியும் மனைவியும்பொய் சொன்னேன் நம்பினாள்
ஒருநாள் உண்மையை சொன்னேன்..
’ஏய்! நீ பொய் சொல்ற’ என்றாள் காதலி
செத்து தொலைக்கிறேன் என்றேன்
’மொதல்ல இன்சுரன்ஸ் போடு’ என்றாள் மனைவி
காதலியையும் மனைவியையும் சமாளிக்க
இருவரையும் அன்பே என்றே அழையுங்கள்
அப்போதுதான் பெயர்மாற்றி
உளறி மாட்டிக்கொள்ளமாட்டீர்.
ரிலாக்ஸ் ப்ளிஸ்இராகவேந்திரர் ஷிரிடி ரமணர்
இப்ப ஜக்கி - யாரை வேண்டினால்?
துரத்தி வரும் இந்த தெரு நாயிடமிருந்து தப்பிப்பது!
தெளிவு என்பது
குழப்பங்களின் முடிவா?
குழப்பங்களின் தொடக்கமா?