Showing posts with label காதல் கிறுக்கு. Show all posts
Showing posts with label காதல் கிறுக்கு. Show all posts

Thursday, April 29, 2010

என் இனிய பொன் நிலாவே



நீ பேசி முடித்தபின்னும்
நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தேன் உன்னிடம்
இரவுகளின் வெளிச்சத்தில் மூழ்கி புரண்டு கொண்டிருந்தேன்
அடித்த மூன்று லார்ஜ்களும் பேச தொடங்கும்
முன்பே காணாமல் போயிருந்தன
எப்போது தூங்கினேனென்று தெரியவில்லை
கனவு வராத ஆழ்ந்த தூக்கம் - சொற்பமான பொழுதில்
சட்டென விடிந்தது - ஒருவேளை கருவானம்
வீழ்கையில் தூங்க ஆரம்பித்தேனோ..?

இனி வேலை வேலை என அலுவல்கள்
உன் நினைவுகளை விழுங்கி செல்லும்
மறுபடியும் இரவு வருகையில் உன் நினைவு வரும்
நீங்காத இதம்தரும் பொழுதுகள்

இயங்க வைப்பதும் இயக்கிவைப்பதும் காதல்தான்
புதிதாய் மனம் மலர
புத்துணர்வாய் உடல் மலர
காதல்
அல்லது
தவம்
தேவைதானோ என் அன்பே?

எல்லாம் கொடுத்த உனக்கான
பூச்செண்டு!

Wednesday, February 17, 2010

கண்டு கலந்து கற்க வா – காதல் - II





இரவின் நெடிய உறவுகளில்
உன் ஹிருதயம் மறைபொருளாய்
மறுநாள் தணியும் சுகம்
கனவில் நீகாண் உள்ளம் எனதாய்

உனது கனவில் வரும் நான்
உனைத்தானே பார்க்கிறேன்
என் கனவில் நீ வருவதை போல்
அதில் உன்னைதான் பார்க்கிறேன்

அப்படியென்றால் நிஜக்கனவு
கனவில்லை நிஜம்
கனவில் நிஜம்

தனித்தனி தீவுகளாயினும்
ஒரே பூமியில் தானே
எண்ண ஓட்டத்திற்கு
நெருக்கம் உண்டு

அரேபியதேசத்தில் மகனுக்கு
காய்ச்சல் என்றால்
கன்னியாகுமரியில் தாய்க்கும்
தகிக்கும் மனது

அது போலதான் நாம்
அது அன்பு – இது காதல்

இனி இரக்கம் என்பது
நமது வேட்டையில் இல்லை
இது காதல் கிறுக்கு
நீ என் காதல் சிறுக்கி

Wednesday, January 13, 2010

நான் இங்கே அவள் அங்கே



அவள் மடியின்
இதம் இல்லையெனில்
பிடி மரணம் என
காலன் சொல்லியிருப்பான்
அவளைத்தேடி துவங்குகையில்
வெண்பனியில் உறைந்திருக்கும்
அன்பின் நதியை சென்றடைந்தேன்
அவள் உடன் சென்றுவிட
மனம் துடித்தாலும்
தடுத்துக்கொண்டே இருக்கின்றன
உடன் சுற்றங்கள்

தனிமைபோர்வையில்
வழிந்துக்கொண்டிருக்கும்
எங்கள் உடல்கொண்ட மனங்களுக்கு
வார்த்தைகளே போதுமாய் இருக்கின்றன
மனச்சுமைகளை அடித்து நொறுக்க
செல்லமாய் சிணுங்கிக்கொள்ள
அன்புகொள்ள கட்டியிருக்கிக்கொள்ள
நினைவுக்கனவுகளில்

Saturday, August 15, 2009

விசித்திர நொடிபொழுதுகள்

மேல் உதடுகளும்,
கீழ் உதடுகளிலும் ஆழ்ந்து
பல மணித்துளிகள்
சேர்ந்திருந்தபோதும்
மறுநாள்
மனம்
சேராமல்
போவதென்ன?


கிறுக்கு
கவிதைகளின் வால் பிடிக்க
அவள் என் தோள் பிடிக்க
காதல் பீடிக்க
சடுதியில் காமம் பீறிட
சட்டென துளிர்ந்த வெட்கம்
உள்ளுக்குள்ளே பூ பறிக்க
முகர்ந்தே கண்ணம் கரைக்க
சாத்தானும் கடவுளும்
பாதி பாதியாய் எங்களுள்
புகுந்து பட்டையை கிளப்ப
இதோடு நான் நிறுத்த
அடையுங்கள் ஆசுவாசம்