Monday, August 15, 2011

நீ




ஒரு புயல் போல
மின்னல் போல
கவனமற்ற நேரத்தில்
வந்தாய் நீ.

குறிக்கிறேன்,

கருங்காடு, சாம்பல்
பைக் குடைசாய்தல்
தென்னங்கீற்றில் சிக்கிய பட்டம்
பெஞ்சில் இரவு முழுவதும் ஆர்10
மறுநாள் மத்தியம் வரை ம.கா.நி
வால் பக்கம் தலைகொண்ட பாம்பு
கொத்தி கொள்கிறது பரஸ்பரம்

சாபம்
நீங்கிடாத சாபம்



ஒரிஜினல் இங்க
http://karuvelanizhal.blogspot.com/2011/08/blog-post.html

Thursday, May 5, 2011

பதிவர்களும் சில மேட்டர்களும்




இலக்கியவாதிகள்: comments are closed, இவர்கள் டீவியில் தலை காட்டுவார்கள்... அப்புறம் டீவியையே விமர்சிப்பார்கள். டீவியை பார்த்ததே இல்லையென சத்தியம் செய்வார்கள். உலகின் தலை சிறந்த கவிதையென்று ஒரு பெரிய சிறுகதையை கொடுத்து கான்சல் பண்ணுவார்கள். நான் அவர சொல்லல.. சும்மா பொதுவாதான் சொன்னேன். யாருக்கும் கமெண்ட் இட மாட்டார்கள்.

அடுத்த நிலை இலக்கியவாதிகள்: இவர்களின் comments box ஓப்பனில் இருக்கும் ஆனால் இவர்கள் தப்பி தவறி கூட மற்றவர்களுக்கு கமெண்ட் போட மாட்டாங்க... (அ சொல்லல)

பதிவர்களில் பிரபலம்: இவர்கள் ரொம்ப occasionalla மத்தவளுக்கு கமெண்டிடுவார்கள். அதுவும் - ஸ்மைலி ஆங் சூப்பர் - இத்தியாதிகள்.... 6 மாதத்திற்கு ஒரு முறை கமெண்டிடுவார்கள்.(நர்சிம்ம சொல்லல)

ரொம்ப பிரபல பதிவர்கள்: இவர்களும் யாருக்கும் கமெண்ட் போட மாட்டார்கள்.. தெருவில் நாம மரியாதைக்கு பேச முற்பட்டால் பெரிய லாடு லபக்கு தாஸ்ஸாட்டும் கிளம்பிவிடுவார்கள்... சில பிரபலங்கள் மதிச்சு பேசுவாங்கப்பா(அது அதிஷா தான்)

தைய்யா தக்கா பதிவர்கள்: இவர்கள் ஒரு குருப்பா அலைவார்கள்.. ஏமாந்த எவனாவது சாதரணமா எதாவது சொன்னாலும் ஊதிபெரிசு படுத்துவார்கள்... இவங்க குருப்பல பெரிய லெவல்ல கோல்மால் நடந்த பிறகு... I humbly request ன்னு பம்மாத்துவார்கள்.

புதிதாய் பிரபலமாகும் பதிவர்கள்: இவர்கள் ப்ளாக்ல கமெண்டு போட மாட்டார்கள்... ஆனால் சேட்டிங்கிள் வந்து பிச்சிட்டிங்க பிசஞ்ட்டீங்கனு பகருவார்கள்... கமெண்டு போட டைம்மில்ல என்பார்கள்.


ரவுடி பதிவர்கள்:
கடவுள் என்பன் யார்?. அவன் என்ன எங்க வூட்ல மாவாட்டினா, களை பறித்தானா என்று சவுண்டுவுடுவார்கள்.. அப்புறம் ஹோட்டல் வெச்சிட்டு செட்டில் ஆகிடுவாங்க... யார் அந்த வால் பதிவர்ன்னு கேக்ககூடாது.

மிகவும் பிஸியான பதிவர்கள்: எப்போதும் பிஸியா டீவிட்டர், பேஸ்புக், பஸ் என்று எப்போதும் பிஸியா இருப்பாங்க... அடிக்கடி போட்டோவ மாத்துவாங்க... கவித எழுதுவாங்க..(வாசு தண்டோரா என நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல.)

சுவையான பதிவர்கள்: ரொம்ப பிரமாதமா எழுதகூடியவங்க ஆனால் பாருங்க எழுதாமல் பண்ண வைச்சுடுது இயற்கை. அதுலயும் R.P.ராஜநாயஹமெல்லாம் தொடர்ந்து எழுதியிருந்தால் பெரிய இலக்கியவாதிங்க பிளாக்கே ஆட்டம் கண்டுபோயிருக்கும். இதுல லேடிஸ் காலேஜ் வாசல்ல போய் நிக்கற நேரத்தல ஒரு பதிவு எழுதலாம் இருந்தாலும் நேரமில்லைன்னு பதிவு எழுதறது இல்ல இந்த ஆஞ்சனேயா... சே சே அது அனுஜன்யா இல்லங்க. பட்டர்பிளை சூர்யாவின் உலக சினிமா காத்து வாங்குதுங்க. சுவையான பதிவர்கள் லிஸ்ட்ல என் பேர சேர்க்க சொல்லி நீங்கல்லாம் கத்தறது கதறது எல்லாம் எனக்கு கேக்குதுங்க. விடுங்க எனக்கு தற்புகழ்ச்சியெல்லாம் புடிக்காது.


சில கவிஞர்கள் பதிவு எழுதிட்டு கமெண்டு போடலன்னா உதைப்பேன்னு மிரட்டுவாங்க... அவங்க பேரா...? அட அவங்க என் நண்பருங்க.. அதனால உட்டுருவோம் அவங்க பேர.

போரடிச்சுடுச்சு...அட எனக்குதாங்க.. பிறகு வேறேதாவது தலைப்புல பாக்கலாம்.. பை.

Tuesday, March 1, 2011

வெட்கிச் சிரித்தாள்




விரல் பிடித்து
மலைமுகடுகளில்
மெதுவாக
சுற்ற வைத்து
கற்றுக்கொடுத்தாள்

நாலு வட்டத்திற்கு பின்
பொறுக்க இயலாமல்
மலைமேட்டினை
கடித்துவைத்தேன்

கடித்த வாயினை
சட்டென அறைந்துவைத்தாள்

வலிக்கும் உதடுகளால்
தடவி கொடுத்தேன்
கடித்த முகடுகளை

பிறகானது தலைப்பு

Friday, February 18, 2011

நெருக்கமான பின்பு படிக்க




இரவின் தூக்கத்தில்
விழித்திருக்கிறது நெடிய வானம்
பிரித்து பார்க்கையில்
வாழ்விலில்லை சுகந்தம்

வனமான வாழ்வு
சொல்லும் நிறைவுறாத தேடல்
தேடல் என்பதும்
நிறைவுறாத வானம்

வாழ்வே ஒரு கொடும் கனவு
புணர்தலும்
புரிதலும்
செறிவுறாத
சாலை நோக்கி நகரும்
தேகம்...

உயிரெடுப்பதும்
உடல் சுருங்குவதும்
கானக்கிடைக்காத தங்கம்
தகரமும் தங்கமும்
உயிர் உடைத்த
EQUIVALENT

புரிதலும்
சிதறுதலும்
ஒன்றே

Tuesday, December 14, 2010

சாரு - சரசம், சல்லாபம், சாமியார்

புத்தகவெளியீட்டில் அவரை பார்ப்பேன் என கிஞ்சித்தும் நினைக்கவில்லை. 90களில் அவரை ஒரு முறையாவது பார்ப்போமா என்று மனம் நாயாக அலைந்திருக்கிறது. நேரில் பார்த்தபோது(அதாவது ஒரு நாலைந்து rowக்கு பின்னே இருந்து பார்த்தேன்) பிறகு அவரை அருகாமையில் பார்த்தது நான்கைந்து வார்த்தைகளும் சில சொற்ப வினாடிகளும் - வாழ்வில் அற்புதமான கணங்கள். அவரும் ஆட்டோகிராப் போட்டுவிட்டு ஏதும் பேசாமல் ஒரு பார்வையோடு என் கை பிடித்து படியிறங்கி சென்றுவிட்டார். அவர் குஷ்பு என நீங்கள் நினைத்தால் அது தவறு. அவர் யார் என பின்னர் சொல்கிறேன்.

சாரு புத்தகத்தை யாரும் வாங்கவேண்டாம் எச்சரிக்கை.. அப்படி தறுதலையாக ஸாரி தவறுதலாக வாங்கியிருந்தால்.. தயவுசெய்து பிரித்து படிக்க ஆரம்பித்துவிடாதீர்கள்... அப்புறம் அந்த போதையை நிறுத்துதல் என்பது இயலாத விடயம். ’சரசம்-சல்லாபம்-சாமியார்’ என்ற புத்தகத்தை வாங்கிய கையோடு வீட்டுக்கு வந்து 2 தோசையை கிள்ளி போட்டுக்கொண்டு புத்தகத்தை படிக்க ஆரம்பிக்க(இரவு 11.30) அது விடியல் வரை துரத்திக்கொண்டே சென்றது.

இவர் சொல்லி நித்தியானந்தவை என்.எஸ்.பி நிகழ்ச்சியிக்கு பார்க்க போன பரிதாபமான ஜீவராசிகளில் நானும் ஒருவன். சென்றுவந்த மறுமாதமே அவர் தொலைக்காட்சிகளில் ரஞ்சிதாவுடன் காட்சி தந்து லோகத்தில் உள்ள குஞ்சுசுலுவானிகளிலிருந்து பெருசுகள் வரை அதிர்ச்சி தந்தது ஊரறிந்தது. ஆனாலும் நித்ய தியானம் நன்றாகவே இருந்தது. சக நண்பர்கள் நேரிலே வந்து கடைவைத்து கலாய்த்து போனார்கள். அப்போது எனக்கும் சாருவின் மீது எழுந்த கேள்விகளுக்கும் கோபங்களுக்கும் மிக அழகாக தெளிவாக அவருக்கே உரிய, ரோலர் கோஸ்டர் நடையில் ஒரு தொடராக fragments fragments ஆக, லாவகமாக நகர்த்தி சொல்கிறார். நாமும் அடுத்த சீன் என்ன என்று ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

புத்தகத்தில் நீங்கள் எதிர்பாரா விடயங்களையும் நிறைய தெளித்து போகிறார் போகிறபோக்கில். புத்தர், இஸ்லாம், கிறித்துவம், அகோரி, இமயமலை, சந்திரசேகர ரெட்டி, அபி எம்.பி. (அபிக்கு கொடுக்கற definition :)) மற்றும் ஷிரடி பாபா,பாபாஜி, யோகனந்தா என்று வந்து போகும் கதா பாத்திரங்களும் காத்தரமான விஷயங்களும் நிறைய. புத்தக வெளியீட்டில் கவிஞர் ரவிக்குமார் எம்.எல்.ஏ சொன்னது போல வார பத்திரிக்கைக்கு மட்டும் எழுதாமல் அதன் குறுக்கு வெட்டு தன்மைக்கு ஏற்றால் போல வாகர்களுக்கு என்ன சேரவேண்டுமோ அதை துனிந்து கொடுத்திருக்கும் சாருவுக்கு ஒரு சபாஷ்.

நான் என் வாழ்க்கையில் முதன் முறையாக ஆட்டோகிராப் வாங்கிய அந்த நபர் எழுத்துசித்தர் பாலகுமாரன் தான். சாரு பிஸியாகவே இருந்ததால் [பெண்களுடன் பேசிபடியே(அழகிய)] அவருடைய கையெழுத்து வாங்கமுடியவில்லை. உண்மையில் சாருவின் அங்கதம் மற்றும் புதுவகையான எழுத்தில் மயங்கியே பாலகுமாரனிலிருந்து(Osho, JK சேர்த்துக்கொள்ளவும்) சாருவை வந்தடைந்தேன். ஆனால் இந்த புத்தகத்தில் ஒன்று தெரிகிறது திரும்ப பாலகுமாரனுக்கே தாவிடலாமா அல்லது அமைதியாக இருந்துவிடலாமாவென? விழித்தெழுந்த மனிதர்கள் எல்லாம் ஒரே மாதிரிதான் பேசுகிறார்கள். இருந்தாலும் சாருவின் பன்முகத்தண்மை வியக்கவைக்கிறது.

கடைசிவரை குஷ்பு வராதது பெரிய ஆறுதலும் கூட. சாரு புத்தகங்களை உயிர்மை பதிப்பகம் 13.12.2010 அன்று காமராஜ் அரங்கத்தில் வெளியிட்டதை பற்றிய பிரபல பதிவர்களின் பதிவுகள்
http://pitchaipathiram.blogspot.com/2010/12/blog-post_16.html
http://www.jackiesekar.com/2010/12/13122010.html
http://www.narsim.in/2010/12/blog-post_15.html


இணையத்தில் வாங்க www.uyirmmai.com
உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை – 6000018
91-44-24993448
uyirmmai@gmail.com

Monday, October 4, 2010

மனித நிறங்கள்





எதிர் கவுஜை

எல்லோராலும் முடிவதில்லை
தினம் ஒரு குவாட்டர் அடிக்க
சுதந்திரமாய் ஒரு தம் அடிக்க
பிகர்களை சைட் அடிக்க
நல்ல காற்றை சுவாசிக்க
டிராபிக் இல்லாமல் வண்டியோட்ட
பொண்டாட்டி கிட்ட எதிர்த்துபேச

உண்மையாய் இருக்கிறேன்
பேக்காய் இருக்கிறேனாம்

ரெட்டை சிகப்பென்றும்
ப்ளுவை நீலமென்றும்
தலையாட்டமுடியவில்லை
(ஏன்னா ஸ்பான்டிலேட்டிஸ்)

மாற்ற நினைத்தாலும்
மாறாத சில லூசுகளைக்போல
மாறாத லூசு நான்

பீர்
பீர்தான்

நானும் அப்படியே
ஹாட்ல இருந்து
கூலுக்கு மாறிட்டேன்


ஒரிஜினல் இங்க கிளிக் செய்து படிக்கவும்.

Saturday, October 2, 2010

எந்திரன் - ஒரு சிறிய பார்வை



ஒரே கதையை வைத்து பல படங்கள் பண்ணிய ஷங்கர் இதில் I-Robot-ன் இன்ஸ்பேரேஷனில், இவர் ஸ்டைலில் படம் செய்து இருக்கிறார்.
Second half-ல் கலாபவன்மணியின் கண்களில் மண்ணைதூவிட்டு ஓடிவந்து மூச்சிறைக்கிறார்கள் கதையின் நாயகனும் நாயகியும்... அங்கே தான் படமும் மூச்சிரைக்க ஆரம்பிக்கறது. அங்கே தொடங்கியது வில்லன் ரஜினி ‘ரோபோ’ என்னும் வரையில் நம்மை வறுத்துதெடுக்கிறார்கள். முதல்பாதியில் உள்ள வேகம் இரண்டாவது பாதியில் இல்லை. ஷங்கரின் அடுத்த படம் மிகவும் போர் அடிக்கும்... இது எனது சொந்த கணிப்பு.
பாப்கார்ன் 70ரூ அது தியேட்டர் முழுக்க சிதறிகிடக்கிறது... 70 ரூபாய் என்பது ஒரு அடிதட்டு மக்களின் ஒரு நாளைய குடும்ப சாப்பாட்டு செலவு. படத்துக்கு நான் செய்த செலவு 1350... மூன்று பேருக்கு. இதுவும் அ.த.மக்களின் பாதிமாதச்செலவு. (ஷங்கர்தான் கருத்து சொல்லனுமா நாங்க சொல்லமாட்டோமா?)
Interval விட்டவுடன் என் பையன் ‘அப்டியே சுடனும்போல இருக்கு’ என்றான்... ஏன் என கேட்க ... Interval விட்டவங்களையான்.. அந்த அளவுக்கு interesting, informative, dialogues, speed.. in first half. தமிழுக்கு எல்லாம் புதுசு. ஒரு டிக்கெட் விலை 300.. அது first halfகே கொடுக்கலாம்... அப்புறம் அம்புடுதேன்...

இந்த படதிற்கு மீடியா கொடுத்த ஹைப் இருக்கே சொல்லிமாளல.. முக்கியமா NDTVHINDU, Sun Network, NDTV Profitல கூட ... என்ன கொடுமை சரவணா இது...

தலைவர பஞ்ச டயலாக் பேசவுட்டு... பல ஸ்டையல்கள காட்டியிருந்தா பின்னால் வரும் தோய்வை சரிகட்டியிருக்கலாம்... கமலா தியேட்டர் screen 2ல காத பஞ்சர் ஆக்கிட்டாங்க...


காலைல 5.30 மணிக்கு இரண்டு தியேட்டரில் டிக்கெட் இருந்தும் நான் தூங்கியது கண்டு என்னை நானே மெச்சிக்கொண்டேன்... கடைசியில் ஈவினிங் ஷோக்கு என்னிடம் வேலை பார்க்கும் தம்பி டிக்கெட்டை கையில் வந்து கொடுத்தான்... அடித்தது எந்திரனுக்கு யோகம்.

ஓம் சாந்தி ஓமில் வருவது போல கடைசியில் பங்குபெற்றவர்களை visual treatடாக கொடுத்துயிருக்கலாம்... மணிரத்தினம் படம்போல பெயர்களை போட்டு போரடித்தார்கள்.

தலைவருக்கு கழுத்திலிருந்து உடை அணிவித்துயிருக்கிறார்கள். காரணம் படம் பார்ப்பவர்களுக்கு புரியும். ’ஜஸ்’ லாலாக்கு டோல் டப்பிமா போலியிருக்கிறார்... இரண்டு வயதானவர்களை வைத்துக்கொண்டு ஒளிப்பதிவாளர் ரத்தினவேல் எவ்வளவு கஷ்டப்பட்டியிருப்பார் என்பது புரிகிறது.

சாபுசிரிலை International criminalகளின் transilator ஆக்கியிருக்கிறார்கள்... இரண்டு சீணுக்கு வந்து போனாலும் பாந்தம். கலாபவன்மணி வீணடிக்கப்பட்டுள்ளார். லிஸ்ட்டில்.. கருணாஸ் சந்தாணம் சேர்த்துக்கொள்ளலாம். படம் முழுக்க திகட்ட திகட்ட ரஜினி.

Second half bore, first half nonsense to the core.. superb..
வழக்கம்போல குடும்பத்தோட ரசிக்கலாம்.