Thursday, February 25, 2010
பட்டுன்னு ஒரு கவிதை
’எனக்கு சாமுத்ரிகா பட்டு’
என்று ஆரம்பிக்கும் தொலைக்காட்சி
விளம்பரம் பார்க்கமுடிந்தது
அழகியல் கொண்டாட்டமே
எம் ஊரின் பெண்கள் கச்சை கிழிசல்களை
சீலையில் நாசுக்காய் மறைப்பதும்
சேலையின் ஓட்டைகளில் குழந்தைகளுக்கு
மலர்ச்சியா நிலா காட்டுவதும் இயல்பே
’காஞ்சிவரம்’ படத்தில் ஒரு தந்தையின்
வாக்குறுதி குறுக்கே வந்துபோனது
’உன் கல்யாணத்துக்கு பட்டு சீர் செய்வேன்’
அப்பெண் பெற்றதோ வாய்க்கரிசி
பால்யத்தில் தறி சத்தம் கேட்டு நடந்திருக்கிறேன்
திடீரென காணாமல் போயின ஓர்நாள்
எங்கு தேடுவேன் அந்த அம்சத்வனி ராகத்தை
ஊரை....ஊரென்று சொல்லுவதில்லை
வேறொன்றே....சொல்கின்றனர்!
உறக்கச் சொல்லுடா மானிடவா
மண்ணில் கீழோர் மேலோர் இல்லை!
So மண்ணில் கீழோர் மேலோர் இல்லை
ஒன்றிருந்தால் ஒன்று.. இல்லை
Subscribe to:
Post Comments (Atom)
40 comments:
தலைப்பு ’உறக்கச்சொல்லுடா மானிடவா’ன்னு வைச்சியிருக்களாம் ஒரு ஹைப்பா இருந்துயிருக்கும்.. ம்ம்ம்..
//மண்ணில் கீழோர் மேலோர் இல்லை!
So மண்ணில் கீழோர் மேலோர் இல்லை//
வழிமொழிகிறேன்!
//திடீரென காணாமல் போயின ஓர்நாள்
எங்கு தேடுவேன் அந்த அம்சத்வனி ராகத்தை//
ஈரோட்டுல எங்கும் கேட்கலாம்ங்க...
கவிதை ரசனையுடன்.....
ரைட்....இனிமே அந்த போத்திஸ் விளம்பரம்
பார்க்காதிங்க....
அருமை...அருமை இதை படிக்கும்போது எனக்கும் ஒரு கவிதை ஓடுகிறது
துச்சாதனன் துகிலுரிய
பரந்தாமனை நோக்கி
கைகளை உயர்த்துகிறாள் பாஞ்சலி
சற்றுவிநாடிகள் கழித்தவள்
கண்ணா இதென்ன
மஞ்சள் பார்டரில்
கிளி டிசைன்?
வேறில்லையா?
சாமுத்ரிகா பட்டாவது?
எப்பூடி...?நாங்களும் எழுதுவோமில்ல?
@அஷோக் மனசுல என்ன பாரதியாருன்னு நெனப்போ?
@வால்பையன்
அதுக்கப்புறம் ஒரு வரி வருதே
@க.பாலாசி
எங்க பிள்ளையார் கோவில் தெருவில திடீருனு காணாமபோயிடிச்சுப்பா
@ஜெட்லி
விளம்பரங்கள் தான் பார்க்கும்படியிருக்கு
பால்யத்தில் தறி சத்தம் கேட்டு நடந்திருக்கிறேன்
திடீரென காணாமல் போயின ஓர்நாள்
எங்கு தேடுவேன் அந்த அம்சத்வனி ராகத்தை//
கவிதையில்...ஏக்கமும்....விரக்தியும்....
நல்லாயிருக்கு.
பட்டு தெறிக்குது.
கலக்குறிங்க நண்பரே அருமை !வாழ்த்துக்கள் !
//சேலையின் ஓட்டைகளில் குழந்தைகளுக்கு
மலர்ச்சியா நிலா காட்டுவதும் இயல்பே//
கற்பனையை சிறகு விரித்தால் அழகியல் வரிகள் அண்ணா....
பட்டுக்கான ஏக்கமா தறிகள் தொலைந்து போனதான ஏக்கமா தெரியவில்லை கிழிசல் புடவைதான் கண்ணில் ஊசலாடுது அஷோக்
தெறிக்குதே பட்டென!
முழுக்க ஏற்றுக் கொள்கிறேன்...
//பால்யத்தில் தறி சத்தம் கேட்டு நடந்திருக்கிறேன்
திடீரென காணாமல் போயின ஓர்நாள்//
நானும் கேட்டிருக்கேன், இப்போ நிறைய பேர் நோக்கியாவிலும், ஹுண்டாயிலும்தான் இருக்காங்க:(
நல்லா இருக்கு
@என்.விநாயகமுருகன்
மூச்சு விடறத கூட கவிதையாக்கிடவ மேன் ;)
@சி.கருணாகரசு
வாங்க கருணா :)
@ஜெரி
;) :)
@பணித்துளி சங்கர்
சங்கர் :)
@வசந்த்
ப்ரியங்கள் வசந்த் :)
:)
நல்லாயிருக்கு.... :)
@தேனம்மை
கிழசல் புடவையிலும் ‘மலர்ச்சியா’ ஒரு வார்த்தை இருக்குபாருங்க :)
@பா.ராஜாராம்
:)
@புலவன் புலிகேசி
:)
@ரகு
நோக்கியாவிலும், ஹுண்டாயிலும் இருக்காங்களா.. ரொம்ப சந்தோஷம் ரகு :)
@பேநாமூடி
வாங்க
@மதன்
அருமையான சமிக்ஞை, இந்த Smiley :)
@Shivaji shankar
வாப்பா..:)
அஷோக் பயண அலைச்சலால உங்க பக்கம் கவனிக்கல !
நல்லதொரு கவிதை.மாற்றம் தவிர எல்லாமே மாறும் என்பது விதி.
ரொம்ப வேணாம்.ஒரு பத்து வருட இடைவெளியைப் பார்த்தாலே நிறைந்த மாற்றங்கள் வாழ்வியலில்.
ஏன்...எங்களிலும் கூடத்தானே.
நல்லதோ கெட்டதோ மாறியும் தொலைக்கிறோம் !
@ஹேமா
வந்தீங்களே... என்ன ஆச்சோன்னு பயந்துட்டேன்... Happy life Hema :)
//சேலையின் ஓட்டைகளில் குழந்தைகளுக்கு
மலர்ச்சியா நிலா காட்டுவதும் இயல்பே//
ப்ரியமுடன் வசந்த் போலவே எனக்கும் இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு.
அருமையான கவிதை.
-
DREAMER
@ஹரிஷ் வாங்க :)
நல்ல கவிதை!
@நன்றி ரிஷான் :)
நல்ல தலைப்பு நல்ல கவிதை
வாங்க தியா :)
super
தியா :)
பட்டு மாதிரி ஒரு கவிதையா :-)
@உழவன்
வாங்க :)
ஹைப்பா மஞ்சள் கிளி தேடுவேன் துச்சாதனன் மாதிரி கீழோர்
கண்ணில் கிழிசல் புடவைதான்
இடைவெளியைப் பார்க்கும்படியிருக்கு கண்ணா நோக்கியாவிலும் தெறிக்குதே
இப்போ நிறைய அம்சத்வனி
வாழ்வியலில் ஏக்கமும்.....
கிழிசல் புடவையில் எல்லாமே
நல்லாயிருக்கு எல்லாமே.
திடீரென ஓர்நாள்
தொலைக்கிறோம் !நல்லதொரு
கிழிசல் புடவைய
எங்கு தேடுவேன் ??
காணாமபோயிடிச்சுப்பா
மண்ணில்அழகியல் உலகியல்
மாறியும் தெரியவில்லை உங்க
கவனிக்கல !
உங்க புடவை கிழிசல்
நல்ல தலைப்பு!
ஹம்சத்வனி ராகத்தில்.... தறி சத்தம் வித்தியாசமான சொல்லாடல். கவிதை என்னவோ செய்கிறது. பாராட்டுகள்.
@Anony
நன்றிங்க அனானி, எல்லாமே கவிததான் :)
@ப்ரியா
புரிஞ்சிகிட்டீங்க், நன்றி... :)
@மஞ்ச்ர் ராசா
நல்லது..ராசா..நன்றி :)
கவிதை நல்லா இருக்கு அஷோக்..பட்டு புடவை இன்னும் அழகா இருக்கு:)
ரொம்ப நன்றி அம்மு... உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு இப்பதான் தெரிஞ்சிகிட்டேன்... :(
:)))
Post a Comment