Tuesday, June 9, 2009

உள்ளுக்குள்ளே ஓடும் வார்த்தையென்ன


சுழித்து ஓடும் வார்த்தைகள்
வழித்து செல்லும் உடல்வாகு
வகுத்து சொல்லும் மனஒழுக்கு
எனக்கு அதில் எப்பொழுதும் பினக்கு

வாசிக்கப்படாத தாளின் வாசனை - அதன்
போக்கிலே எழுதிசெல்லும் கவிதை

காத்திருக்கிறேன் அவளை
காயப்படுத்தும் வார்த்தைக்காக

சதுரங்க விளையாட்டில்
சாஸ்த்திரங்களுக்கு இடமில்லை

மோகலாய பேரரசு பரப்பிய
ஆதித வாசனை ஒவ்வாமை

சுகங்களை மட்டுமே நிரப்பிய கனவுகள்
அபத்தங்களின் தொகுப்பே நினைவுகள்

சாமியென்றும் சன்யாசியென்றும்
ஞானியென்றும் சித்தனென்றும்

தூறலையே மழையென்றால்
மழையை என்னவென்பீர்

இங்கே நான் என்பது
நீங்களாகவும் இருக்கலாம்
வேறுஏதாவதாகவும் ....

எழுதியே எழுத்தாளன்
வானமாகிறான் – படிப்பவன்
வனமாகி....வானரமாகி

Tuesday, June 2, 2009

அனிதாவின் டைரி குறிப்புகள்


ஓஷோ நீட்ஷே என்பான்

எல்லாவற்றுக்கும் நானறியாத
வேறொரு அர்த்தம் சொல்வான்

ஆல இலைகளை காற்றில்
ஆட பார்த்திருப்பேன்

ஆங்கிலத்தில் பிழையிப்பான்

மொட்டைமாடி சந்திப்பில்
முத்தமிட முயன்று விலகி ஓடினேன்

தோழிகளிடம் போனில் பேசுகையில்
தனிமையில் சிக்ரெட் பத்த வைத்தான்

காலையில் எனை வ்ந்து பார்க்காமல்
தூங்கியே கிடப்பான் – கேட்டால்
உனை நினைத்தே கவிதை எழுதி
கிடந்தேனடி இரவெல்லாம் - என்பான்

சாயந்திர பொழுதினில் பல ரயில்கள்
போயினும் கடக்கவிட்டு இரவு கவிழ
பிரியா விடைபெறுவோம்

கேரள புடவையில் எனை விழுங்கினான்
ரெங்கநாதன்தெரு உணவுவிடுதியில் பார்வையில்

சட்டென்று விலகிவிட்டேன்
அவனைவிட்டு ஒரு நாள்
கடைசியாக

(photo - get it from Internet)