Tuesday, December 14, 2010

சாரு - சரசம், சல்லாபம், சாமியார்

புத்தகவெளியீட்டில் அவரை பார்ப்பேன் என கிஞ்சித்தும் நினைக்கவில்லை. 90களில் அவரை ஒரு முறையாவது பார்ப்போமா என்று மனம் நாயாக அலைந்திருக்கிறது. நேரில் பார்த்தபோது(அதாவது ஒரு நாலைந்து rowக்கு பின்னே இருந்து பார்த்தேன்) பிறகு அவரை அருகாமையில் பார்த்தது நான்கைந்து வார்த்தைகளும் சில சொற்ப வினாடிகளும் - வாழ்வில் அற்புதமான கணங்கள். அவரும் ஆட்டோகிராப் போட்டுவிட்டு ஏதும் பேசாமல் ஒரு பார்வையோடு என் கை பிடித்து படியிறங்கி சென்றுவிட்டார். அவர் குஷ்பு என நீங்கள் நினைத்தால் அது தவறு. அவர் யார் என பின்னர் சொல்கிறேன்.

சாரு புத்தகத்தை யாரும் வாங்கவேண்டாம் எச்சரிக்கை.. அப்படி தறுதலையாக ஸாரி தவறுதலாக வாங்கியிருந்தால்.. தயவுசெய்து பிரித்து படிக்க ஆரம்பித்துவிடாதீர்கள்... அப்புறம் அந்த போதையை நிறுத்துதல் என்பது இயலாத விடயம். ’சரசம்-சல்லாபம்-சாமியார்’ என்ற புத்தகத்தை வாங்கிய கையோடு வீட்டுக்கு வந்து 2 தோசையை கிள்ளி போட்டுக்கொண்டு புத்தகத்தை படிக்க ஆரம்பிக்க(இரவு 11.30) அது விடியல் வரை துரத்திக்கொண்டே சென்றது.

இவர் சொல்லி நித்தியானந்தவை என்.எஸ்.பி நிகழ்ச்சியிக்கு பார்க்க போன பரிதாபமான ஜீவராசிகளில் நானும் ஒருவன். சென்றுவந்த மறுமாதமே அவர் தொலைக்காட்சிகளில் ரஞ்சிதாவுடன் காட்சி தந்து லோகத்தில் உள்ள குஞ்சுசுலுவானிகளிலிருந்து பெருசுகள் வரை அதிர்ச்சி தந்தது ஊரறிந்தது. ஆனாலும் நித்ய தியானம் நன்றாகவே இருந்தது. சக நண்பர்கள் நேரிலே வந்து கடைவைத்து கலாய்த்து போனார்கள். அப்போது எனக்கும் சாருவின் மீது எழுந்த கேள்விகளுக்கும் கோபங்களுக்கும் மிக அழகாக தெளிவாக அவருக்கே உரிய, ரோலர் கோஸ்டர் நடையில் ஒரு தொடராக fragments fragments ஆக, லாவகமாக நகர்த்தி சொல்கிறார். நாமும் அடுத்த சீன் என்ன என்று ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

புத்தகத்தில் நீங்கள் எதிர்பாரா விடயங்களையும் நிறைய தெளித்து போகிறார் போகிறபோக்கில். புத்தர், இஸ்லாம், கிறித்துவம், அகோரி, இமயமலை, சந்திரசேகர ரெட்டி, அபி எம்.பி. (அபிக்கு கொடுக்கற definition :)) மற்றும் ஷிரடி பாபா,பாபாஜி, யோகனந்தா என்று வந்து போகும் கதா பாத்திரங்களும் காத்தரமான விஷயங்களும் நிறைய. புத்தக வெளியீட்டில் கவிஞர் ரவிக்குமார் எம்.எல்.ஏ சொன்னது போல வார பத்திரிக்கைக்கு மட்டும் எழுதாமல் அதன் குறுக்கு வெட்டு தன்மைக்கு ஏற்றால் போல வாகர்களுக்கு என்ன சேரவேண்டுமோ அதை துனிந்து கொடுத்திருக்கும் சாருவுக்கு ஒரு சபாஷ்.

நான் என் வாழ்க்கையில் முதன் முறையாக ஆட்டோகிராப் வாங்கிய அந்த நபர் எழுத்துசித்தர் பாலகுமாரன் தான். சாரு பிஸியாகவே இருந்ததால் [பெண்களுடன் பேசிபடியே(அழகிய)] அவருடைய கையெழுத்து வாங்கமுடியவில்லை. உண்மையில் சாருவின் அங்கதம் மற்றும் புதுவகையான எழுத்தில் மயங்கியே பாலகுமாரனிலிருந்து(Osho, JK சேர்த்துக்கொள்ளவும்) சாருவை வந்தடைந்தேன். ஆனால் இந்த புத்தகத்தில் ஒன்று தெரிகிறது திரும்ப பாலகுமாரனுக்கே தாவிடலாமா அல்லது அமைதியாக இருந்துவிடலாமாவென? விழித்தெழுந்த மனிதர்கள் எல்லாம் ஒரே மாதிரிதான் பேசுகிறார்கள். இருந்தாலும் சாருவின் பன்முகத்தண்மை வியக்கவைக்கிறது.

கடைசிவரை குஷ்பு வராதது பெரிய ஆறுதலும் கூட. சாரு புத்தகங்களை உயிர்மை பதிப்பகம் 13.12.2010 அன்று காமராஜ் அரங்கத்தில் வெளியிட்டதை பற்றிய பிரபல பதிவர்களின் பதிவுகள்
http://pitchaipathiram.blogspot.com/2010/12/blog-post_16.html
http://www.jackiesekar.com/2010/12/13122010.html
http://www.narsim.in/2010/12/blog-post_15.html


இணையத்தில் வாங்க www.uyirmmai.com
உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை – 6000018
91-44-24993448
uyirmmai@gmail.com