Sunday, September 20, 2009

காதல்

கவிதை தொட்ட கைகளில்
காமனை தொடமாட்டேன்
என பகர்ந்தேன்

காதலி எனை இழுத்து
அழுத்தமாய் உதட்டில்
முத்தமிட்டால்

இனி கவிதை எழுத்தில் இல்லை
அவள் உதடுகளில்

Sunday, September 13, 2009

சுமையென சுமை அல்லது வீடு திரும்புதல்

நாள் பொழுதும் உழைத்த
அவள் தலை சும்மாட்டில்
பொருட்கள் கொண்ட பாண்டு

வளைத்து சுற்றிய
புடவையில் குழந்தை

சாயந்திர நேர்வெய்யில்
முகத்தில்

செருப்பில்லா கால்கள்

ஏனோ தெரியவில்லை
ஏஸி குளிரில் உட்கார்ந்து
பார்த்த எனக்கு
குதத்தில் வலித்தது

பிட்சா சரியில்லையென
நண்பர்கள் சொல்லும் போதெல்லாம்
இவர்களை நினைக்க
தோன்றுகிறது - ஏனோ தெரியவில்லை!

Thursday, September 10, 2009

வானம் தேடுதல்


மேகம் தாண்டி
வானத்தில் குதித்து
கால் நழுவி பின்வீழ்ந்து
மிதந்து பறந்தேன்

வானமென்றே ஒன்று
இல்லையென உணர்த்தியது
எங்கும் பரவிய வெளி.

நகர்ந்து கிடந்து
தனித்து நிலைத்து
அதுவே நானென புரிய
சுற்றி சூழ்ந்தது வானம்

Friday, September 4, 2009

சிதறிய கவிதை துண்டுகள்

சிலர் கவிதை படைப்பதும்
சிலர் கவிதை வெறுப்பதும்
கவிதைதான்

அள்ள அள்ள குறையவில்லை
பாத்திரத்தில் நீர்
மேலே திறந்த குழாய்

குக்கர் குழந்தை
காலிங்பெல் தொலைபேசி
குரல் கொடுக்க எல்லாவற்றுக்கும்
மறுகுரல் கொடுத்தாள்
மனைவி

சந்திப்பை நோக்கி
காத்துக்கொண்டிருக்கும்
கோடை பூமி

புரிதலை நோக்கி
சிந்திக்கொண்டிருக்கும்
மழை மனது

மழை பரப்பும்
வாசனை திரவியம்

திட்டு திட்டாய்
வெளிச்ச வானமாய்
கருமேக கூட்டம்

மண்னை நனைத்து பின்
மேலோடி போகும்
நீர் போல

சுவைத்து சப்பிய
மாம்பழக் கொட்டை

Tuesday, September 1, 2009

துரோகம்

துரோகங்கள் நிறைந்த வாழ்க்கையை
நான் ஆராதிக்கிறேன்
ஏன்னெனில்….
துரோகமே நிலையாகிபோன
உலகிலே
துரோகம் செய்வதில்தான்
உண்மையும் மிகுழ்ந்த
வலியும் உண்டு


கவிதை எழுதுதல்

வேண்டியவரை அழகான
வார்த்தைகளை கொண்டு செதுக்கி
புரட்சி பகடி என கலகம்செய்து
கர்ப்பிணி, சாடல், இயற்கை
பெண்மை, மழைச்சாரல்,
போன்ற தலைப்புகளில்
எனக்குண்டான பாடல்களை
எழுதி கவர்கிறேன்

இதை எதையுமே செய்யமுடியாத
தேமேன்னு மற்றவரை
வேடிக்கை பார்க்கும்
இன்னொரு நானாகிய நான்.