Sunday, September 13, 2009

சுமையென சுமை அல்லது வீடு திரும்புதல்

நாள் பொழுதும் உழைத்த
அவள் தலை சும்மாட்டில்
பொருட்கள் கொண்ட பாண்டு

வளைத்து சுற்றிய
புடவையில் குழந்தை

சாயந்திர நேர்வெய்யில்
முகத்தில்

செருப்பில்லா கால்கள்

ஏனோ தெரியவில்லை
ஏஸி குளிரில் உட்கார்ந்து
பார்த்த எனக்கு
குதத்தில் வலித்தது

பிட்சா சரியில்லையென
நண்பர்கள் சொல்லும் போதெல்லாம்
இவர்களை நினைக்க
தோன்றுகிறது - ஏனோ தெரியவில்லை!

14 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

நைஸ்...

Vidhoosh said...

ஹ்ம்ம். :(
--வித்யா

மண்குதிரை said...

nalla irukku nanbare :-(

Karthikeyan G said...

செல்லாது..செல்லாது.. :)

க.பாலாசி said...

//ஏனோ தெரியவில்லை
ஏஸி குளிரில் உட்கார்ந்து
பார்த்த எனக்கு
குதத்தில் வலித்தது//

//பிட்சா சரியில்லையென
நண்பர்கள் சொல்லும் போதெல்லாம்
இவர்களை நினைக்க
தோன்றுகிறது - ஏனோ தெரியவில்லை//

எளிமையான வார்த்தைகள்...அருமையான கவிதை அன்பரே.. கொஞ்சம் வலிகளுடன்....

Ashok D said...

@ வசந்த
//நைஸ்...//

தாங்ஸ் வசு

வால்பையன் said...

எனக்கும்!

Ashok D said...

@ Vidhoosh/விதூஷ் said...
ஹ்ம்ம். :(
--வித்யா

வாங்க விதூஷ்
அந்த கவிதை தொடர்ச்சி நல்ல முயற்சி. நான் signing off. :)

Ashok D said...

@ மண்குதிரை said...
nalla irukku nanbare :-(

மிகவும் நன்றி கவிஞரே...நண்பரே என்ன நண்பனே என்றும் சொல்லலாம் மண்குதிரை.

Ashok D said...

@Karthikeyan G
//செல்லாது..செல்லாது.. :)//
கரெக்ட்டு கார்த்தி ;)

Ashok D said...

@ க.பாலாஜி

//எளிமையான வார்த்தைகள்...அருமையான கவிதை அன்பரே.. கொஞ்சம் வலிகளுடன்....//

ரசனயுள்ள பாலாஜிக்கு நன்றி

Ashok D said...

@வால்பையன்
//எனக்கும்!//

சேம் ப்ளட் :)

ஹேமா said...

மனிதம் மனச்சாட்சியோடு பேசுகிறது.மனிதம் வாழும்வரை வறுமைக்கு அச்சமில்லை.

Ashok D said...

நீஙகள் இருக்கும்வரை என் வார்த்தைக்ளுக்கு முப்பு இல்லை.