Monday, June 21, 2010

நன்றி





பதிவுலகத்திலிருந்து மெல்ல மெல்ல நழுவிக்கொண்டிருக்கும் போது ஒரு அங்கிகாரம். ஒரு தட்டி கொடுத்தல். பெரிய ஆளுமைகளின் நடுவே என் பெயரும் அதுவும் சிறந்த நடுவர்களின் தீர்ப்பு. கொஞ்சம் ஆடித்தான் போனேன்.. ’உறுபசி’ ஒரு சில வினாடிகளில் வந்து போனதுதான்.. அதன் கடைசி நாலு வரிகள் மட்டும் நின்று யோசித்தது. கவிதை என்பது உணர்வுகளின் கொதிநிலை என்று பெருந்தேவி சொல்வார். எனக்கு ’அந்த நேரத்து கொதிநிலை’ அவ்வளவே.

மகிழ்ச்சியாக உள்ளது. ஜ்யோவ்(சிவ)ராம் சுந்தர் - இருவருக்கும் எனது நன்றி மட்டும் அன்புகள். போனில் முதலில் பாராட்டிய மும்பை புகழ் பிரபல கவிஞர் பாட்ஷா அனுஜன்யா(அப்புறம்தான் எனக்கு விஷயமே தெரிஞ்சது),கவிஞர் யாத்ரா, கவிஞர் முத்துவேல், சித்தப்ஸ், ஹேமா, பத்மா, ரிஷான் ஷெரிப், கமலேஷ், உழவன், ஜெனோவா மற்றும் பலர்.. மடலிலும் தொலைபேசியிலும் வாழ்த்தும் நண்பர்களுக்கும்.. தோழிகளுக்கும் வாழ்த்தபோவோர்களுக்கும் நன்றி...

எனது அங்கிகாரத்தை... கவிதை போட்டியில் கலந்துக்கொண்ட அனைத்து கவிஞர்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்... மிகுந்த அன்புடன் உங்கள் D.R.அஷோக்

Sunday, June 6, 2010

சின்ன சின்ன வார்த்தைகள்




அவரை தெரியுமென்றான்
இவரை தெரியுமென்றான்
உன்னை உனக்கு தெரியுமா?
என கேட்க நினைத்து மௌனமாய்
பார்த்துக்கொண்டிருந்தேன் என்னை!


சில சமயங்களில் அவள் கன்னங்களை
தாண்டி சிந்திக்க இயலவில்லை
பல சமயங்களில் அவள் கரங்களை
விடுத்து தெளிவேதுமில்லை


தவறவிட்ட விஷயங்கள்
கனவில் துறத்தும்
வார்த்தைகளை கழட்டிபோட
நெஞ்சுபாரம் குறையும்


கடந்துக்கொண்டிருக்கும்போதே
கடந்துவிட்ட உணர்வு
கடக்கையில் நானற்ற உணர்வு


நிறைய படித்து தள்ளுகிறேன்
கவலையே இல்லை
ஏனெனில்?
எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தி