
அவரை தெரியுமென்றான்
இவரை தெரியுமென்றான்
உன்னை உனக்கு தெரியுமா?
என கேட்க நினைத்து மௌனமாய்
பார்த்துக்கொண்டிருந்தேன் என்னை!
சில சமயங்களில் அவள் கன்னங்களை
தாண்டி சிந்திக்க இயலவில்லை
பல சமயங்களில் அவள் கரங்களை
விடுத்து தெளிவேதுமில்லை
தவறவிட்ட விஷயங்கள்
கனவில் துறத்தும்
வார்த்தைகளை கழட்டிபோட
நெஞ்சுபாரம் குறையும்
கடந்துக்கொண்டிருக்கும்போதே
கடந்துவிட்ட உணர்வு
கடக்கையில் நானற்ற உணர்வு
நிறைய படித்து தள்ளுகிறேன்
கவலையே இல்லை
ஏனெனில்?
எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தி
25 comments:
கவிதை அருமை.......
வல்லாரை சாப்பிட்டா எல்லாம் தெளிஞ்சிடும்.
கடந்துக்கொண்டிருக்கும்போதே
கடந்துவிட்ட உணர்வு
கடக்கையில் நானற்ற உணர்வு //
:-)
/வல்லாரை சாப்பிட்டா எல்லாம் தெளிஞ்சிடும்./
அதானே:))
//பல சமயங்களில் அவள் கரங்களை
விடுத்து தெளிவேதுமில்லை//
அன்பு கைதி...
நல்லாருக்குண்ணா...
கவிதை அருமை. இருந்தாலும் ஜெரி சொன்னது தான் நல்லதுன்னு தோணுது. வாழ்த்துக்கள்
//தவறவிட்ட விஷயங்கள்
கனவில் துறத்தும்
வார்த்தைகளை கழட்டிபோட
நெஞ்சுபாரம் குறையும்
கடந்துக்கொண்டிருக்கும்போதே
கடந்துவிட்ட உணர்வு
கடக்கையில் நானற்ற உணர்வு//
பாரங்களை இங்கே இறக்கி வைத்துவிட்டுத்தான் நீங்கள் நீங்களாய் இல்லாமல் கடந்திருக்கிறீர்களோ அஷோக்.அருமை.
மறதி அதிகம்....உங்களை மறக்காமல் இருங்கள்.கவனம்.
படிச்சி முடிச்சபின்னே எனக்கும் நானற்ற உணர்வுதான்... ஞாபக மறதியும் நல்லதுதானே...
intha kavithai virunthuku nanri...
அவரை தெரியுமென்றான்
இவரை தெரியுமென்றான்
உன்னை உனக்கு தெரியுமா?
என கேட்க நினைத்து மௌனமாய்
பார்த்துக்கொண்டிருந்தேன் என்னை!
ஆத்ம விசாரம் தொடங்கியாயிற்று
நன்று அசோக்
கவிதை நல்லாயிருக்கு.....
(கடைசி சொல்... ”அதிகம்” என்று தமிழ்சொல்லாக இருந்திருக்கலாம்)
நல்லாருக்கு மகன்ஸ்.
//அவரை தெரியுமென்றான்
இவரை தெரியுமென்றான்
உன்னை உனக்கு தெரியுமா?
என கேட்க நினைத்து மௌனமாய்
பார்த்துக்கொண்டிருந்தேன் என்னை//
ஓய், என்ன வயசு உமக்கு?
அடுத்த கவிதை காதலை எழுத நினைச்சிருக்கிறேன், தெரியுமா? ( சித்தியிடம் சொல்லாதீர்) :-))
கவிதை நல்ல இருக்குது.....
அது "கன்னங்கள்" !
கூவம் பன்னி இன்னும் புலம்பிக்கொண்டு இருப்பது செம காமெடியாக இருக்கிறது.
//தவறவிட்ட விஷயங்கள்
கனவில் துறத்தும்//
”துறந்தும்” என்பது கவிதை
”அடைந்தும்” என்பது கவலை!
நகுலன் வாசனை :)
தொடர்க!
கடைசி வரி.........?!
@ulavu
நன்றி :)
@ஜெரி & @ வானம்பாடிகள்
ஒரு மிக பெரும் கவியை கலாய்ப்பதால் நடிகர் சங்கத்தில் ... சாரி... பதிவர் சங்கத்தில் ரிப்போட் பண்ணவேண்டியதுதான் :)))
@ஆறுமுகம் முருகேசன்
சரியா பிடிச்சீங்க :)
@ப்ரியமுடன் வசந்த்
சென்னைக்கு வந்து என்ன பாக்கமா போயிருக்கீங்க... ம்ம்ம்
@மதுரை சரவணன்
என்ன சொன்னார் மறந்துட்டேனே ?? :))
@ஹேமா
ரொம்ப நன்றிங்க உங்க தொடர் வருகைக்கு...
//உங்களை மறக்காமல் இருங்கள்.கவனம்//
என்னை மறந்தாலும் உங்க அன்ப மறக்கமாட்டேன்ங்க.. இது குலதெய்வம் மேல சத்தியம்... ஆங்.. என் குலதெய்வம் பேரு மறந்துபோச்சே :))
@க.பாலாசி
பாலாசி எப்பவும் கரெக்டாதானே சொல்விங்க... ரைட்டு.. :)
@gouthmi
First visit? Thanks for ur comment :)
@பத்மா
என்னங்க நலமா... :)
@கருணாகரசு.சி
பகடியில் வரும்போது ‘ஜாஸ்தி’ தான் ஆப்ட்டா இருக்கும்... (முதலில் போட்ட வார்த்தை ‘அதிகம்’தான்)
சீரியஸா எழுதும் போது தமிழ் சொல்லாவே வெளியே வரும் பாருங்க... இந்த கவிதைகளிலேயே கவனிச்சிங்கன்னா தெரியும், நன்றி கருணா :)
@சித்தப்ஸ்
என்னது காதல் கவிதையா... எழுதுங்க சித்தப்ஸ்.. அப்ப நான் என்ன எழுதனும் வாய்ப்பாடா? :))
@துரோகி
இதுவரைக்கும் 2 தடவை same mistake... ஒரு வேளை பெரிய் கன்னமா இருக்குமோ ? :)) welcomeங்க
@Maruthu
ரொம்ப நாள் கழிச்சு பன்னியபத்தி யோசிக்க வைச்சியிருக்கீங்க.. அதற்கு நன்றி :)
பதிலுக்கு நானும் ஓவரா பேசிட்டேன்..(மத்தவங்கள திட்டினாலும் அது எனக்குதான் வலிக்குது.. ஆனா லேட்டா) அந்த வார்த்தைகள திருப்பி எடுத்துக்கறன்...
எனக்கு எதிரிகளே இருக்கமுடியாது... ஏன்னா நர்சிம்மராவே நம்ம பக்கத்துல இருந்தாலும் 5 நிமிஷத்துல உற்சாகமா ஆகிடுவாரு... அவ்வளவு கலட்டாவான+ஜாலியான ஆளு நானு, Happy life Maruthu :)
@வால்பையன்
போற போக்க பாத்த தாங்கள் பெரிய கவிஞராகி விடுவீரோ என்கிற ஐயம் எமக்குள் எழுகிறது
@நேசமித்ரன்
நகுலன்.. கவிதை... இராமசந்திரன்... அவனை தெரியும்.. myth :)
@அஹமது இர்ஷாத்
கடைசி வரி தமிலிஷ் பக்கத்துல ஒளிஞ்சிண்டு இருக்கறது பார்த்தேளா ... :)
ரொம்ப நல்லா இருக்குங்க...
உன்னை உனக்கு தெரியுமா//
உண்மைதான் அஷோக் நம்மையே நமக்கு சிலசமயம் தெரிவதில்லை
@கமலேஷ்
வாங்க :)
@தேனம்மை
:)
ரொம்ப நல்லா இருக்குன்னே...
தொடருங்கள் வாழ்த்துக்கள்...
மகன்ஸ்,
கவிதைப் போட்டி- வாழ்த்துகள்!
தும் ததா!
Post a Comment