Tuesday, December 29, 2009

உணர்வுகளாய் தெறிக்கும் நொடிகள் பிறழ்ந்தவனின் மனக் குறிப்புகள்எண்ணங்கள் எழுத்தாய் விரிகிறது
மண்புழு பெரிதாய் குவிந்து
மெல்ல மெல்ல உள்நுழைதல்

அழும்குழந்தை முன்
தோற்குமென் கவிதை

தனித்துவிடப்படல் இயற்கையின் குரூரம்
தனியே வாழமுடியாதது இயலாமையின் மிச்சம்

வாக்கியத்துக்குள் வார்த்தைகளை அடுக்கும் முயற்சி
தொடர்ந்து உள்அடுக்குகளை அறியும் சுழற்ச்சி

ஆடித்து ஆடிக்கொண்டிருக்கற போது
குலுங்குமவள் பிட்டத்து சதை கடிக்க விழையும் மனது

வார்த்தைகளில் மாட்டிப்பிழைப்பவர் எவர்
மாட்டாதவர் எவர் - சிக்கி கிழியும் மனது
நினைவுகளின் ஊடே கடல் கடந்து
காந்தார கலைகளைக் கற்றுத்தேர்ந்து
பிரமீடுகளின் உச்சத்திலிருந்து நிலா தொட்டு

உனைத்தாண்டி உனை உணர்ந்துயிருக்கிறாயா
மழைபெய்து ஓய்ந்து போன யாருமற்ற
கழுவிட்ட தார்ச்சாலையில் பெரு மரங்களின் ஊடே
கசியும் குளிருடன் கையில் ஒரு சிகரெட்டுடன் நடந்து செல்வது

திரும்பிய பக்கமெல்லாம்
துரோகத்தின் எச்சில்
ஓடி ஒளிய தேடும் மறைவிடங்கள்
பிணவரையின் நாற்றம்

வெட்டி சுருண்ட விழிகள்
கட்டி இறுகின வலிகள்
முட்டி மோதிய உடல்கள்
தட்டி கீறிய பற்கள்

கடந்து போனது மனது
நின்று சுற்றியது காற்று
பாடும்போது கூடும்போது
எழுதும்போது பிரதி இன்பம்

துணையன்றி ஏதுமில்லைதான்
துணையென்பதும் நீயேதான்
தனித்து வாழாதது மனதின் அச்சம்
தனித்தே இருப்பது தவத்தின் உச்சம்

Saturday, December 19, 2009

ஊற்றின் கண்
தன் மௌனமொழி உடைத்து சூன்யமாய்
ஆச்சரியம் பொங்க மூச்சின் மய்யம் மாற்றி
உறக்கத்தையும் கனவுகளையும் ஒன்றாக்கி
எப்பொழுதினிலும் அதனை உணர்ந்து
சுவாசம் உடல் மனம் இருப்பு தாண்டி
நினைவுகளில் நிறையும் தனிவெளி
இலக்கின்றி திரியும் மறைபொருளாய்
எதுவுமற்ற மறைந்த கேலிக்கூத்தாய்
எல்லாம் கலந்து விரியும் பிரபஞ்சமாய்
என்னுள் நீளும் தன்புணரும் சொரூபநிலை
இருத்தலின் பேரானந்தம்
சுரக்கும் ஆதாரம் என
மெல்ல திறக்கும் என்
ஊற்றின் கண்

Monday, December 14, 2009

சித்தப்பு(பா.ரா) புக் ரிலீஸ் விழா


அகநாழிகை பொன்.வாசுதேவனி(ரி)ன் புத்தக வெளியீடு விழாவுக்கு வழக்கம்போல லேட்டாதான் சென்றேன். நுழையும் போதே ஆச்சரியம் காத்திருந்தது என் அபிமான சாரு பேசிக்கொண்டிருந்தார். நேராக முன்னால் சென்று ஓரமாக நின்றுக்கொண்டேன். நர்சிம்மும் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார். கூட்டங்களில் எப்பொழுதும் நிற்கும் நிலை எங்களுக்கு. சாரு பேச்சினை ரசிக்கும் போது எடுத்த படம் மேலே. அழகான நர்சிம் பக்கத்திலிருந்தும் சுமாராகவாது தெரியும், பச்சை டீசர்டில் அடக்கமாக நிற்பவர் உங்கள், D.R.Ashok.
வழக்கம்போல் சாருவின் உரை அருமை. ஞாநி பேசும் போது அறியதோர் கருத்தை முன்னிருத்தினார். ஏதோ என எழுதாமல் மிடில கிளாஸ் எல்லைட் தாண்டி அடிமட்ட மக்களுக்களின் பிரச்சனைகளையும் எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டார். 80 சதவிதத்தினர் அரசுபள்ளியில் த்மிழில் தான் படிக்கிறார்கள் என்றார்.
சித்தப்பு உங்க மகளை எனக்கு தெரியமா போச்சு. கேபிள் பதிவுல படிச்சு தெரிஞ்சிகிட்டேன்.
மேலும் படங்களுக்கு http://yerumbu.blogspot.com/2009/12/blog-post_09.html இந்த லிங்கை கிளிக்கவும்.
பதிவர்கள் பலரை சந்தித்தது சந்தோஷத்தை கொடுத்தது. எம்.அப்துல்லா, Dr.புருனோ, வா.மணிகண்டன், என்.விநாயக்முருகன், எறும்பு, நிலாரசிகன். ..இப்படி பலர்.
அப்பாலிக்கா சாரு, வாசு(அகநாழிகை), தண்டோரா, கேபிள், ச.முத்துவேல் அதிபிராதபன் மற்றும் பட்டர்பளை சூர்யா அனைவரும் இலக்கிய பேருரை ஆற்றினோம் சாயந்திரப் பிற்பகுதியில்.

Friday, December 11, 2009

வாழ்த்துக்கள்
சித்தினை அசித்துடன் இணைத்தாய்

பக்தியென்றொரு நிலை வகுத்தாய்

பாரதி என்றொரு கவியை படைத்தாய்

அதன் சுடரொளி ஒரு தொடராய்

அகல்விளக்காய்...

என்றென்றும் ஒளிவீசும் நம் கவிஞர்களின் ஊடே..

என் கவிஞன் பாரதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Friday, December 4, 2009

கண்டவை கேட்டவை - 3


2012 - அட நம்ம விஜய் படம்மாதிரியிருந்தது. வழக்கம்போல் என் ஐந்தறை வயது மகன் ரசித்து பார்த்தான். படத்தில் radio jackie, இந்திய மனம், எழுத்தாளனின் பார்வை, ஹீரோ ஹீரோயின் குடும்ப நிதர்ஸனம், தலைவர்களின் நாடு பற்றிய நேசம், பெரு வர்க்கத்தின் இயல்பான சுயநலம் என்று படத்தின் ஊடே ஓட்டிக்காட்டுகிறார்கள். அந்த RJ அதிகமா ஸ்கோர் பண்ணிடறார். பற்றியும் பற்றாமலும் படம் பார்க்கமுடிகிறது. பௌத்த சன்னியாசி சிஷ்யனுக்கு கொடுக்கும் ஒரு வரி போதனையும், பேரலையின்போது மணியடித்துக்கொண்டு வாழ்வை(சாவை) எதிர்க்கொள்வதும் கவிதை. விஞ்ஞானம்(பணபலத்துடன்) அதிலிருந்து தப்புவதற்க்கு பெரிய ஷிப் கட்டுவது.
ஆஸ்ரேலியாவிடம் தோற்று இலங்கையிடம் ரண்குவித்து நம் மனதை ஆற்றிவிட்டார்கள் தோனி அன் கோ. ரொம்ப நன்னிங்கன்னா. 10 குழந்தைகளை தண்ணில விட்டு கொன்றுயிருக்கிறார் ஒருத்தர். காரணம் ஒரு செல்போன். நம்மூரில் சைக்கிளில் போவோர் கூட ஸ்டெயலாக ஒரு கையில் போனும் மறுகையால் வண்டியும் ஓட்டுவார். எதிரில் பக்கத்தில் போவோர் மட்டும் ஜாக்கிரதையா போகோனும். போன்ல பேசறது, தேவையில்லாம லேப்டாப் மற்றும் கம்யூட்டர் வைச்சிக்கறது நம்ம நாட்ல சகஜமப்பா. மனிதம் போற்றுதல், பரஸ்பர உதவிகள், மன்னிப்பு, சகிப்புதன்மை அப்படின்னா கிலோ என்ன விலை.
குமுதம் அரசுபதில்களில் சாருவை தேவையில்லாமல் இழுத்துயிருக்குறது. காமெடி+காமநெடி பத்திரிக்கை சாருவை காமெடியாக்க முனைந்துயிருப்பது எவ்வளவு பெரிய காமெடி.


Thursday, December 3, 2009

உறுபசி

பித்துப் பிடித்து அத்துவானக் காட்டில்
கதறி அழுகிறேன்
பின் மிகுந்த ஓலமிட்டு
காடதிரச் சிரிக்கிறேன்
கையில் பெரிய கோடரி கொண்டு
பெரு மரங்களை வெட்டிச் சாய்க்கிறேன்
யானையின் தும்பிக்கை பிடித்து
தூக்கித் தரையிலடித்துக் கொன்று
என் ஓநாய் பற்களால் பசியாறி
தந்த ஆயுதம் செய்து
குன்றிலமர்கிறேன்
வேட்கை மிகுந்து
காதருகே சீறி வந்த மலைப் பாம்பின்
கழுத்தை பிடித்துச் சுருக்கிட்டு
தடித்த மரக்கிளையில்
ஊஞ்சல் கட்டி
கண்ணயரக் காத்திருக்கிறேன்
நானே காடாக
காடே நானாக

நிலவை ருசிக்க
யத்தனிக்கையில்
நட்சத்திரங்களிலிருந்து
கொட்டும் இரத்த மழை


(உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை)

Sunday, November 29, 2009

பிடித்த 10 பிடிக்காத 10
நண்பர் கேபிள் சங்கர் என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். பிடிச்ச பத்து, பிடிக்காத பத்து. கொஞ்சம் இக்கட்டான விஷயமா இருந்தாலும் எழுதிட்டேன்.
1.அரசியல்வாதி

பிடித்தவர் : கலைஞர்(அரசியல் சாணக்கியம்) & திருமாவளவன் (இவரின் தமிழ்பேச்சு அதி அற்புதம்)(வைகோவும் இந்த லிஸ்டில் சேரவேண்டியவர்..ஆனால் சாரி .. காரணம் உங்களுக்கே தெரியும்)
பிடிக்காதவர்: ஜெயலலிதா, Dr.கிருஷ்ணசாமி(கமல் போன்ற கலைஞனை கலாய்த்தற்காக, மற்றும் நம் கலாச்சாரத்தில் உதட்டில் முத்தமிடக்கூடாது என்று உளறியதற்காக) & சுப்ரமணியசாமி (காமெடிதான்)
2. நடிகர்
பிடித்தவர் : வாழ்வே மாயம் கமல்ஹாசன், கார்த்திக் (அக்னி நட்சத்திரம்), டெல்லிகணேஷ் (டௌரி கல்யானம்)
பிடிக்காதவர் : மன்சூர் அலிகான், பிரஷாந்
3. உணவு
பிடித்தவை : சாம்பார், ரசம், மோர், இட்லி, தோசை, மட்டன் மற்றும் செட்டிநாடு உணவுவகைகள்.
பிடிக்காதவை : எண்ணெய் அதிகம் கலந்ததும், காரமும் உள்ள பண்டங்கள் அனைத்தும்.
4. இயக்குனர்:
பிடித்தவர் : பாலா, மிஷ்கின், வசந்தபாலன், மணிரத்னம், பாலாஜிசக்திவேல், பாலசந்தர், ருத்ரைய்யா, விசு, பாரதிராஜா,
பிடிக்காதவர் : பேரரசு
5. தொழிலதிபர்
பிடித்தவர் : சக்தி மசாலா (குறையொன்றும் இல்லை என்று வேலைக்கொடுத்தினால்)
பிடிக்காதவர் : சரவணாபவன் அண்ணாச்சி (எத்தன பிகர ஓட்டிட்டார்ப்பா)
6. எழுத்தாளர்
பிடித்தவர் : தி.ஜா, ஜி.நா, சுஜாதா(rulesa மிறினாலும் இவங்கள விடமுடியாது), பாலகுமாரன், சாரு, எஸ்.ராமகிருஷ்ணன் (கதாவிலாசம் & துணையெழுத்து)
பிடிக்காதவர் : நிறைய இருக்கு
7. இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா, எ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ், எம்.எஸ்.வி
பிடிக்காதவர்: சாய்ஸ்ல விட்டுறலாமே
8. ஓளிப்பதிவாளர்:
பிடித்தவர் : சந்தோஷ்சிவன் & P.C.ஸ்ரீராம்
பிடிக்காதவர் : மொக்கையாய் ஒளிப்பதிவு செய்யும் எல்லோரும் (ஹிஹி கேபிளை வழிமொழிகிறேன்)
9. காமெடியன்:
பிடித்தவர் : கவுண்டமணி, வடிவேலு, விவேக், கர்ணாஸ்
பிடிக்காதவர் : விஜய T.ராஜேந்தர்
10. பதிவர்
பிடித்தவர் : R.P.ராஜநாயஹம்
பிடிக்காதவர் : D.R.அஷோக் (எல்லாம் ஒரு வெளம்பரம்.....)
ஒரு நாலு பேரை நான் கூப்பிடணுமாம்..

1. யாத்ரா

2. மண்குதிரை

3. Shakthiprabha

4. Karthikeyan G

5. என்.விநாயக முருகன்

Monday, November 23, 2009

இடையே - எது கவிதை?

விரலுக்கும்
உரலுக்கும்!

பிளவுக்கும்
முக்கிற்க்கும்!

குத்துக்கும்
இருமுறை பாக்ஸர் ஃப்ராக்சருக்கும்

மனமாற்றலுக்கும்
மென்மைக்கும்

சினிமாவுக்கும்
குடிக்கும்!

சால்னாவுக்கும்
சப்ஜிக்கும்!

இரண்டுக்கும்
மூன்றுக்கும்!

இல்லை...
மூன்றுக்கும்
நான்குக்கும்!

இல்லையடி...
இப்போதைக்கு உன்
இடையே!

Friday, November 20, 2009

தந்தியற்ற வீணை


வட்டங்களிலும் சந்திப்புகளிலும்
தடித்து போயிருக்கும் சாதிய இருள்மை
அதே கொடுமை தாங்காது இனமே
சிதைந்தும் நடுங்கி பிழைத்தல்
சில கட்டங்களுக்கு மேல் உயரமுடியாமல்
போகும் அவலம்

சோற்றுக்கும் வாடகைக்குமே
ஓடி வாழும்! நரக வாழ்க்கை
வாழ்வின் தொடரோட்டத்திற்கு அஞ்சி
கனவில் கூட வர மறுத்த இறுகிப்போன காமம்

தனிமையின் உச்சத்திலிருந்து
கதறிக்கொண்டிருக்கும் மனது
தவிக்கவிட்டு செத்து போன மனைவி
சாககூடமுடியாமல் கைகளில்
தேவதையை போன்றதோர் குழந்தை

தனித்தே இருக்கும் வேதனை, கோபம், கண்ணீர்
என்றேனும் அறியபடுத்துமா உங்களுக்கு
இந்த சாபமிட்ட வாழ்க்கையினை?

இத்தனை கசடுகள் நடுவினிலும்
வார்த்தைகளின் மேல் உள்ள காதலால்
அர்த்தப்பட முயற்சிக்கும் சொற்கள்
வந்துவிழும் கணங்கள் சுகமே.

Friday, November 13, 2009

வார்த்தை சிதறல்கள்

எழுத உட்கார்ந்த சிறுபொழுதுதியானமாய் நகர்ந்தது எழுதாத கவிதை – ஏனோ என் பின் தொடர்ந்தது

வானமெங்கும் திருவிழா
நட்சத்திரக்கூட்டம்
நிலவை தரிசிக்க

வயிறுமுட்ட குடித்தபின்
நண்பன் கொண்டு வந்த
வெளிநாட்டு சரக்கு

எழுதியவுடன் கவி இறந்து - உயிர்பெறுகிறது
கவிதை

கண்ணுக்கெட்டிய தூரம்வரை
துரோகங்களின் வெளிச்சம்
இறைஞ்சி நின்ற கைகளையும்
வெட்டிச்சாய்க்கும் கூட்டம்

நல்ல கவிதைக்கு காத்திருக்கும்
கவிமனம் - சாத்தியமில்லா
பொழுதுகளில் வாழும் நான்

மாடுபோட்ட சாணி
க்‌ஷனத்தில் ஆனது
கடவுள்

மனிதம் மட்டும் அஃறினையாய்
விறைத்து குறைக்கும்
நாய் மனதாய்

Saturday, November 7, 2009

வேணாம்டி விட்று

மழையில் நனைந்தோடும் பெண்கள்
அழுக்கேறும் மனம்

மெல்ல நுழைந்து டிராகனைபோல்
தலைதூக்கும் காமம்

நியாபக செதில்களில்
பட்டுத் தெறிக்கும்
பிரிவுகளின் கொடூரவழித்தடங்கள்
மழை நாட்களில்

மனதில் ஏற்றிவைத்த
சகடுகளை பிய்த்து
எறிந்துக் கொண்டே ஓடுகையில்
வழிந்து கொண்டிருந்தன
வார்த்தைகள்

நல்லது, பொல்லாதது,
நேர்மையற்றது, வினோதம்,

பெய்தாலும் பொய்த்தாலும்
கடினமே இந்த
மழையும் காமமும்

Monday, November 2, 2009

கண்டவை கேட்டவை-2


எல்லோரும் பாராட்டிய சுப்ரமனியபுரம் நமக்கு சுமாராய் தான் பிடித்திருந்த்து - 1. costumes (பயன்படுத்திய் பொருட்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் 2. இரு கண்மனி அசையும் அதில் தெறிக்கும் 3.நம்மளம் சிவப்பாதானடா இருக்கொம் - தவிர்த்து.

நாடோடிகள் படம் முழுக்க ஒரே அலம்பல் natureரான காமெடி। இதில் அதிகம் பரிசை தட்டி செல்பவர் தலைல ஜட்டிய காய போட்ட அந்த சுருள் முடிக்காரர். படத்தில் எவ்வளவு சீரியசான சீன் என்றாலும் காமடி பண்றார். (இதில் ரிவர்ஸ் ஆங்கிளும் உண்டு வீட்டில் சோகத்தை அனுபவிப்பவர்கள் வெளியில் சந்தோஷமாய் பேசிதிரிவர்). புள்ளைக்காக காதல் தூது செல்லும் தந்தை ‘நான் ex-serviceman என் பையன பாக்க போவேன்’.

ஆக்டிங்கில் எல்லா இடத்திலயும் ஸ்கோர் பண்றார் ஹீரோ danceயை தவிர்த்து. முத்தம் கொடுக்க தயார் ஆகும் சீன் தொடர்ந்து ‘மாப்பள’ என்ற குரலும் சிதறி ஒடும் நல்லம்மா whole சீனும் சூப்பர்ம்மா. கு.ந.நல்லம்மா என்ன பேரோ, நல்லாயிருக்கு பொன்னு. தங்கை கேரக்டரும் நச் ‘காலைலேவா.. ரெய்ட் ரெய்ட்’ அழகு.

கிளைமேக்ஸ் கொஞ்சமும் ஒட்டவில்லை. வேறுவழியில்ல ஹீரோயிஸத்தை அங்ககூட காட்லனா ஏப்படி..கிளைமேக்ஸ் தவிர்த்து படம் முழுக்க Good Entertainment. நம்ம ஹீரோகிட்ட எப்பவும் ஒரு spontaneity தெரியுது That’s good keep it up sir.

திரு.கள்ளபிரான், எந்த பாசாங்கும் இல்லாத எழுத்து இவருடையது.
http://kaalavaasal.blogspot.com
பாரதியின் சுவையான வீச்சான கட்டுரைகளை சிறு விளக்களுடன் படிக்கவேண்டுமா. இவர் தொடர்ந்து எழுதுகிறார் படித்து பாரதி மழையில் நனையுங்கள்.

கிசு கிசு
எந்த நேரத்துல எழுதனனோ, நம்ம யூத்து கேர்ள் பிரண்டோட உரசல், சைதாப்பேட்டை 3 நட்சத்திர ஹோட்டல் பாரில் நாலு லார்ஜ் போட்டு நாலு நாள் தாடியோட ’இந்த அஷோக் எழுதி கண்னுப்பட்டு போச்சுன்னு’ சொல்லி தன் நண்பர் பேரிகை கொட்டுபவரிடம் புலம்பியிருக்கிறார். சோகத்தில யூத்து 2 சிக்கன் தந்தூரியும் 1 மட்டன் சுக்காவையும் ஒரு சொறா புட்டையும் உள்ளே தள்ளியிருக்கிறார். என்னே சோகம்!

Sunday, October 25, 2009

கண்டவை கேட்டவை


எல்லோரும் (நம்ம ப்ளாகர்ஸ்தாம்பா) எதிர்த்த, பாராட்டிய, உன்னைபோல் ஒருவன் படம் பார்த்தேன். நன்றாகவே இருந்தது. வேகமாய் ஓடி மறைந்தது. ஆங்கில(french,Italy, spanish etc) படங்களை மட்டுமே விரும்பி பார்க்கும் நமக்கு நல்ல தீனி போட்டது. சில overdoseசும் உண்டு. ’தீவிரவாதம்’ சரியாக புரிந்துகொள்ள படவில்லையோ என்று யோசிக்க வேண்டியிருக்குறது நம்மவர்களின் படங்களை பார்க்கும்போது.
உதாரணம்: The Traitor: அசத்தல் கதையமைப்பு, கதா பாத்திரத்திற்கு இணையாக ஓடும் நடிக்கும் காமிரா, நேர்த்தியான எடிட்டிங், உரையாடல் என்று பின்னி பெடலெடுப்பார்கள். இசை சிறப்பாயிருக்கும். உ.போ.ஒ-னிலும் இசை திருப்தி.

நான் மிகவும் இரசித்து படிக்கும் தளங்களில் மிக முக்கியமானவர் R.P.ராஜநாயஹம். ரத்தினசுருக்கம் இவரது எழுத்து. வியக்கவைக்கும் நியாபக சக்தி. அதன் இரகசியம் அறிய ஆசை.
விஷய ஞானம் உள்ளவர். பார்த்து அனுகுங்கள். படித்து மகிழுங்கள்.

கிசு கிசு
பிரபல பதிவர் அவர். சினிமா விமர்சனம் எழுதி பிரபலம் அடைந்தவர். பெயரில் “c" "r" எழுத்து உடையவர். யூத்து யூத்து என்று சொல்லிகொள்பவர் இப்போது உண்மையில் யூத்தாகி 18 வயது இளம்பெண்னுடன் K.K.Nagar, kodambakkam, saaligramam ரெஸ்டாரண்ட்களில் நெருக்கமாக ரவுண்டு கட்டுகிறார்.

இது என் முதல் பதிவு. கவிதை அல்லாதது.(என்ன கவிதை எழுதி கிழிச்சேன்னு கேக்கப்படாது)

இதுவரை பதிவு எழுதி ப்ளாகர்களாக இருக்கும் அனைவருக்கும் என் முதல் பதிவு சமர்ப்பணம்.


Wednesday, October 7, 2009

பிறழ்ந்தவனின் மன ஓட்டம்

ஓடி விளையாடு! - முதலில்
வயிறு நிறைய சோறிடு
என்றது பாப்பா!

கண்ணே கலைமானே!
கண்ணு மைனஸ் ஒண்ணு
கலைமான் கிண்டி ஜூல...


தோற்றுவிடுவோமென்று
தெரிந்தே போரிட்டான்
இராவணன்
இறைவனை எதிர்த்து
தோற்றது மனிதனா? கடவுளா?

நித்தம் போராடி
வாழ்க்கை ஓட்டும்
அன்றாடகாய்ச்சிகளாய்
என்னைப்போல்
பலபேர் பாரெங்கும் (பாரிலும்)


சேரவே முடியாத
ஏற்ற இறக்கங்களை கொண்ட
திருமணங்கள்
போராடி பேயாடி
பின் மாயும்

துணிந்து அறுத்துக்கொண்டாலும்
பிள்ளைகளின் வாசனை
சதா வந்து போகும்

வேதனையோடு நகர்தலே
வாழ்க்கையெனில்
இது தேவைதானா இறைவா...
‘தேவையென்றும்
தேவையில்லையென்றும்
எனக்கு ஏதுமில்லையென்றான்’
போடா பா_ என்றேன்.

நாள்ளொன்றாய்
சாராய நெருப்பினில்
திளைத்து ஊறி
எரிந்து போகும் உடல்கள்
எரிக்கும் வேளை காத்திருக்கும்
வரை கொண்டாட்டமே...

வியாதியில் வலியில்
துடிக்கும் போது குவாட்டரோடு
வந்து தோள் தூக்குபவரே
நண்பர்.. மற்றோர் துன்பர்

Scene 42 short no:142 Take 1

வலியில் கறைந்து செல்லும் மனது
உள்ளோடி உறையும் புகையின் படிமம்

Scene 42 short no:143 Take 2

உள்ளே புகையை போல படரும் வலிகள்
சாவை நோக்கி காத்திருக்கும் நான்

Cut
Take ok

Tuesday, October 6, 2009

நிதர்ஸனம்

காதல்
பாசம்
பரிவு
கருனை
விட்டுகொடுத்தல்
கல்யாணம்
தாய்
தகப்பன்
புள்ள
அண்ணன்
அக்கா
தங்கச்சி
தம்பி
மன உளச்சல்
கோபம்
எல்லாம் டூப்பேஏஏஏஏஏஏஏஏஏஏ
சுயநலந்தான்
டாப்பேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ

Sunday, September 20, 2009

காதல்

கவிதை தொட்ட கைகளில்
காமனை தொடமாட்டேன்
என பகர்ந்தேன்

காதலி எனை இழுத்து
அழுத்தமாய் உதட்டில்
முத்தமிட்டால்

இனி கவிதை எழுத்தில் இல்லை
அவள் உதடுகளில்

Sunday, September 13, 2009

சுமையென சுமை அல்லது வீடு திரும்புதல்

நாள் பொழுதும் உழைத்த
அவள் தலை சும்மாட்டில்
பொருட்கள் கொண்ட பாண்டு

வளைத்து சுற்றிய
புடவையில் குழந்தை

சாயந்திர நேர்வெய்யில்
முகத்தில்

செருப்பில்லா கால்கள்

ஏனோ தெரியவில்லை
ஏஸி குளிரில் உட்கார்ந்து
பார்த்த எனக்கு
குதத்தில் வலித்தது

பிட்சா சரியில்லையென
நண்பர்கள் சொல்லும் போதெல்லாம்
இவர்களை நினைக்க
தோன்றுகிறது - ஏனோ தெரியவில்லை!

Thursday, September 10, 2009

வானம் தேடுதல்


மேகம் தாண்டி
வானத்தில் குதித்து
கால் நழுவி பின்வீழ்ந்து
மிதந்து பறந்தேன்

வானமென்றே ஒன்று
இல்லையென உணர்த்தியது
எங்கும் பரவிய வெளி.

நகர்ந்து கிடந்து
தனித்து நிலைத்து
அதுவே நானென புரிய
சுற்றி சூழ்ந்தது வானம்

Friday, September 4, 2009

சிதறிய கவிதை துண்டுகள்

சிலர் கவிதை படைப்பதும்
சிலர் கவிதை வெறுப்பதும்
கவிதைதான்

அள்ள அள்ள குறையவில்லை
பாத்திரத்தில் நீர்
மேலே திறந்த குழாய்

குக்கர் குழந்தை
காலிங்பெல் தொலைபேசி
குரல் கொடுக்க எல்லாவற்றுக்கும்
மறுகுரல் கொடுத்தாள்
மனைவி

சந்திப்பை நோக்கி
காத்துக்கொண்டிருக்கும்
கோடை பூமி

புரிதலை நோக்கி
சிந்திக்கொண்டிருக்கும்
மழை மனது

மழை பரப்பும்
வாசனை திரவியம்

திட்டு திட்டாய்
வெளிச்ச வானமாய்
கருமேக கூட்டம்

மண்னை நனைத்து பின்
மேலோடி போகும்
நீர் போல

சுவைத்து சப்பிய
மாம்பழக் கொட்டை

Tuesday, September 1, 2009

துரோகம்

துரோகங்கள் நிறைந்த வாழ்க்கையை
நான் ஆராதிக்கிறேன்
ஏன்னெனில்….
துரோகமே நிலையாகிபோன
உலகிலே
துரோகம் செய்வதில்தான்
உண்மையும் மிகுழ்ந்த
வலியும் உண்டு


கவிதை எழுதுதல்

வேண்டியவரை அழகான
வார்த்தைகளை கொண்டு செதுக்கி
புரட்சி பகடி என கலகம்செய்து
கர்ப்பிணி, சாடல், இயற்கை
பெண்மை, மழைச்சாரல்,
போன்ற தலைப்புகளில்
எனக்குண்டான பாடல்களை
எழுதி கவர்கிறேன்

இதை எதையுமே செய்யமுடியாத
தேமேன்னு மற்றவரை
வேடிக்கை பார்க்கும்
இன்னொரு நானாகிய நான்.

Thursday, August 27, 2009

மனக் கூப்பாடு

முந்தி செய்த தவறெல்லாம்
தயக்கம் காட்டாமல்
நடுவே கொட்டிச் செல்கிறது
நியாபக அடுக்குகளை

’வாசிப்பு’ அவற்றை
தவறில்லை என்றுடினும்
’சுற்றம்’ சளைக்காமல்
வேதனை படுத்துகிறது

எத்தனை முறை
பிய்த்து கொடுத்தாலும்
வந்து தொலைக்கிறது
இந்த (நொந்த)காதல்
பல சமயம் சுகந்த.

கடைசியில் மிஞ்சுவதும்
காதலியல்ல காதலே

கமல் பேசுவதை கேட்கும்போது
தன்நம்பிக்கை வருது
ரஜினியை பார்க்கும்போது
தெய்வ நம்பிக்கை!
கமல் ரஜினியென்றே தாவுது
மனம் எனும் வஸ்து
நிலையில்லாமல்

நிலையற்று இருப்பதுதான்
வாழ்வின் ருசியோ....?

இல்லை என் அம்மா செய்யும்
சப்பாத்தியோடு உருளைகிழங்கு
சப்ஜிதான் ருசியோ...?

Saturday, August 15, 2009

விசித்திர நொடிபொழுதுகள்

மேல் உதடுகளும்,
கீழ் உதடுகளிலும் ஆழ்ந்து
பல மணித்துளிகள்
சேர்ந்திருந்தபோதும்
மறுநாள்
மனம்
சேராமல்
போவதென்ன?


கிறுக்கு
கவிதைகளின் வால் பிடிக்க
அவள் என் தோள் பிடிக்க
காதல் பீடிக்க
சடுதியில் காமம் பீறிட
சட்டென துளிர்ந்த வெட்கம்
உள்ளுக்குள்ளே பூ பறிக்க
முகர்ந்தே கண்ணம் கரைக்க
சாத்தானும் கடவுளும்
பாதி பாதியாய் எங்களுள்
புகுந்து பட்டையை கிளப்ப
இதோடு நான் நிறுத்த
அடையுங்கள் ஆசுவாசம்

Monday, July 27, 2009

சொற்களை சுமந்தபடி

சொற்கள் குறைந்தால் கவிதை
கவிதையும் மறைந்தால் ஒன்றுமில்லை

ஒன்றுமில்லை என
சொல்ல இக் கவிதை

விதை வினை விளை
களை கலை விலை
நிலை நிலைத்து?
மலைத்து விடுத்து
சிடுத்து கடுத்து!


சீட்டு கட்டாய்
கலைத்து போடும் வாழ்க்கை
சுரக்காய் விரகாய் சுமந்தபடி
பல சமயம் குரங்காய்
பால்யம் கொறுக்கலுக்காய்

Friday, July 24, 2009

இதுவும் கடந்து போகும்
யாரிடமும் சொல்லிவிடதே என
அவளிடம் கெஞ்சினேன்
ஆபிஸில் நெருக்கமான சந்தர்ப்பத்தில்
அவளது பிட்டத்தில் கிள்ளியதை

அழுது சிவந்த அவள் அமைதியாய்
வெளியேறினாள் – மறுநாள்
அலுவலகத்தினுள் நுழைகையில்
எல்லோர் பார்வையும் என்மேல்.
கூசியது உடலும் மனமும்
வெளியேபோ என்று அனுபவ சான்றிதழும்
கொடுக்காமல் விரட்டியடித்தது எஜமானர் உலகம்
இது நடந்தது என் இருபத்தைந்தாவது வயதில்

நன்நடத்தை இல்லா இவன்
வேலையும் அற்று குடும்பத்தில்
மரியாதையும் அற்று சுற்றிதிரிந்தான்

தீராத வியாதியில் கணவனையும்
மோசமான வாஸ்துவால் வீட்டுபிரச்சனையும் தீர
காலில் வீழ்ந்துகிடந்தால் - என் நாற்பத்து ஏழாவது வயதில்
அதே அலுவலக தோழி.. ஆசிக்கூறி அனுப்பிவைத்தேன்
தாடியும் சீடர்களையும் பக்த கோடிகளையும்
வைத்துள்ள ஸ்ரீ ஸ்ரீ....... சாமியான நான்.

Wednesday, July 22, 2009

வாழ்வின் அதிசயத்தை வியந்தபடி
சில நாட்களாய் பல மணிநேரம்
தொலைபேசியில் தொடர்ந்து
அவளோடு பேசியபின்னும்
பேச வேண்டிய விஷயங்கள்
நிறைய மிச்சமிருந்தன

மனம் பொங்கி,
உள்ளுக்குள் சிரித்து
முகம் மலர – காரணி!
காதலா? அவளா?

சுகானுபாவனாய் சிந்தித்தே
பித்துபிடித்து கிடப்பது
எப்படி சாத்தியமாகிறது
ஏனிந்த சுய மோகம்!

வியாதி, மனம்,
உடல், ஆத்மா
கடவுள் அனைத்தையும்
கடந்ததோ இந்நிலை


தொடர்ந்து காதலிக்க ஆசை
வந்து மிரட்டுகிறது
ரொட்டி சுடும் கட்டையுடன்
மனைவியின் பிம்பம்

Monday, July 20, 2009

மனமென்னும் வெளியிலே


வார்த்தைகளை தேடி
வானத்தில் முழ்கி
தொலைந்து போனேன்

சதா தசையென்னும்
வாசனைகளில்
மூச்சு முட்டும்
ஆழ்ந்த மௌனமா

விரக்தியா புரியாமல்
கனத்த மனம்
கலைத்தால் நான்

அமைதி....
வார்த்தைகள்...
அமைதியான வார்த்தைகள்...
அமைதியான....
தியான...
மன....
ம....
...

Friday, July 10, 2009

வாரக்குறிப்புகள்

படிக்கவே இந்த ப்ராணன் போதாது
பின் எப்படி எழுத?

வர வியாழனாவது பாபா கோயிலுக்கு
போகனும்!

மனைவியிடம் உளறிக்கொட்டி
மாட்டிக்கொள்ள கூடாது

அனுஜன்யா, வீணாபோனவன் இவர்களைவிட
நல்லா கவித எழுதனும்!

சாருவ படிக்கறத விடனும்
சரக்கு அடிக்கறத விடனும்

என்னபன்னறது

முதல் சா மனசுக்கு ருசி
இரண்டாவது ச உடம்புக்கு சால்சா

எல்லோரடையும் அன்பு
(ஆனா நிறைய பேர் வெத்து பந்தா காட்றாங்களே)

__க்கவும்
குளிக்கவும் அவகாசம்

எப்போது சாத்தியமோ
அப்போது மழை!

சுளுக்கும் கொசுக்கடியும்
இல்லா கலவி

எல்லா கோப்பைகளும்
இந்திய கிரிக்கெட் அணிக்கே

குழந்தைகள் சாகாத போர்கள்

வியாதி இல்லா உடம்பு

// கடைசிவரை சுயமாய்
நீர்கழிக்கும் சுகம்

உறக்கத்தில் உயிர்பிரியும்
வரம் //

(வைர வரிகளை 100% ஒத்துப்போகிறேன்)

Thursday, July 2, 2009

வார்த்தைகளின் வழியே ஓடும் வார்த்தைகள்


சாத்திய கூறுகளின் வழியே
ஓடும் வாழ்க்கை

நின்று நிதானிக்க
கற்று தராத பெற்றோர்

எதையும் தவறாகவே
கற்றுதந்த வளர்கலை சுற்றம்

மனதில் எழுதி மறந்த
கவிதைகள் எத்தனையோ.....

கருவி வியாதி
வியாதி நீக்க கருவி –
வியாதி கருவி ?

பழச்சாருவை நக்கிய நாய்கள்
நிஜம் தெரியா முண்டம்

கிருஷ்ணனோ கிறுஸ்த்துவோ
அல்லாவோ புத்தனோ

வார்த்தைகளில் இல்லை வாழ்க்கை
புரிதலில்
அது புரியவே நிறைய ஒட

ஓடை நதி
கடல் - கூடல்
மடல் - குடல்
பசி - தினம்
ஒருவேளை ருசி
வேளையேனும்

வேலைவேனும்
வேலையில்லையெனில் வேலை
சொருக வழியில்லை
பிழையில்லை
வழியில்லை வாழ


காரின் பின்னால் வாசகம்
‘nobody touch u
When God within u’

சாத்திய கூறுகளின் வழியே
ஓடும் வாழ்க்கை
நின்று நிதானிக்க
கற்று தராத பெற்றோர்
பழியை போடு மற்றோர்
மேல்!

Tuesday, June 9, 2009

உள்ளுக்குள்ளே ஓடும் வார்த்தையென்ன


சுழித்து ஓடும் வார்த்தைகள்
வழித்து செல்லும் உடல்வாகு
வகுத்து சொல்லும் மனஒழுக்கு
எனக்கு அதில் எப்பொழுதும் பினக்கு

வாசிக்கப்படாத தாளின் வாசனை - அதன்
போக்கிலே எழுதிசெல்லும் கவிதை

காத்திருக்கிறேன் அவளை
காயப்படுத்தும் வார்த்தைக்காக

சதுரங்க விளையாட்டில்
சாஸ்த்திரங்களுக்கு இடமில்லை

மோகலாய பேரரசு பரப்பிய
ஆதித வாசனை ஒவ்வாமை

சுகங்களை மட்டுமே நிரப்பிய கனவுகள்
அபத்தங்களின் தொகுப்பே நினைவுகள்

சாமியென்றும் சன்யாசியென்றும்
ஞானியென்றும் சித்தனென்றும்

தூறலையே மழையென்றால்
மழையை என்னவென்பீர்

இங்கே நான் என்பது
நீங்களாகவும் இருக்கலாம்
வேறுஏதாவதாகவும் ....

எழுதியே எழுத்தாளன்
வானமாகிறான் – படிப்பவன்
வனமாகி....வானரமாகி

Tuesday, June 2, 2009

அனிதாவின் டைரி குறிப்புகள்


ஓஷோ நீட்ஷே என்பான்

எல்லாவற்றுக்கும் நானறியாத
வேறொரு அர்த்தம் சொல்வான்

ஆல இலைகளை காற்றில்
ஆட பார்த்திருப்பேன்

ஆங்கிலத்தில் பிழையிப்பான்

மொட்டைமாடி சந்திப்பில்
முத்தமிட முயன்று விலகி ஓடினேன்

தோழிகளிடம் போனில் பேசுகையில்
தனிமையில் சிக்ரெட் பத்த வைத்தான்

காலையில் எனை வ்ந்து பார்க்காமல்
தூங்கியே கிடப்பான் – கேட்டால்
உனை நினைத்தே கவிதை எழுதி
கிடந்தேனடி இரவெல்லாம் - என்பான்

சாயந்திர பொழுதினில் பல ரயில்கள்
போயினும் கடக்கவிட்டு இரவு கவிழ
பிரியா விடைபெறுவோம்

கேரள புடவையில் எனை விழுங்கினான்
ரெங்கநாதன்தெரு உணவுவிடுதியில் பார்வையில்

சட்டென்று விலகிவிட்டேன்
அவனைவிட்டு ஒரு நாள்
கடைசியாக

(photo - get it from Internet)

Saturday, May 30, 2009

அன்பு... சுமையா?சுகம்மா? இரண்டுமா?


புத்திரன்
கொடியது கொடியது அன்பு கொடியது
தேள் கொட்டி பரவும் விஷமது
ஐந்து வயது குழந்தையை அதன்
தாயிடம் கொண்ட முறிவாள் பிரிந்து...
பிரிந்தே ஒவ்வொரு நொடி இறந்து...
நொந்து.... காலம் மறந்தே துடித்து..
கொடியது கொடியது அன்பு கொடியது
மார்பிளக்கும் விஷமது


சுமை
கிழிசல் சட்டை
சிறுமி ஒருத்தி
குழந்தையும் பையுமாய்
பேருந்து நிறுத்த
வெயில் மாலையில்

”வெய்ட்டா இருக்குமே
என்கிட்ட கொடு” என்றேன்
”வெய்ட்டுல்ல இது
என் தம்பி” என்றாள் வெடுக்கென்று

Saturday, May 23, 2009

நிலவு பார்த்தல் அல்லது நிலவு பாட்டு


வானத்தே பறக்கும்
ஒரு வட்ட நிலா
வென்மை தெறிக்க
ஆடி ஓடும் நிலா
பிள்ளையில்லாமல் நான்
பார்க்கும் சுகந்த நிலா
மைக்ரோ ஓவனில்
வைத்து சுட்ட நிலா
கல்யாண அப்பளம்
போல் பொறித்த நிலா
எத்தனை முறை பார்த்தும்
சலிக்காத நிலா
பால்யத்தின் குல்பியை
ஞாபகபடுத்தும் நிலா
இரவு தூக்கத்தை திருடி
விடியல் ஆதவனை
மறைத்த நிலா


(ஜென் கவிதைகளை எழுத உட்கார்ந்து... சுமாரான பாடல் தான் வந்தது...பின்ன சட்டில இருக்கறதுதானே அகப்பைல வரும்)

புலப்படாத உள்ளூறிய தடை தரும் வலி
பல சந்திப்புகளில்
காதலாய் கனிந்து நின்றோம்
"வரதட்சனை கொடுக்கமாட்டோம்" அவள்
"கவிஞன் இறந்துண்டு வாழ மாட்டேன்" நான்
"நகை சீருக்கு வழியே இல்லை" அவள்
"சுய சம்பாத்தியவாதி" நான்
கல்யாணமாகும் நெருக்கத்தில்
"சாதி என்ன?" வினவினாள்
சொன்னேன்...
இரு தினம் சென்று போனித்தாள்
"வீட்டில் வேண்டாம் என்கிறார்கள்" அவள்
ஊமையாகி நின்றேன்!
நட்பு வட்டத்தில் மிகுந்த தன்னம்பிக்கைவாதியாக
கருதப்பட்ட நான்!

Thursday, May 14, 2009

வேறு மழை - ஆதவன் தீட்சண்யாமிஞ்சிப்போனா என்னசொல்லிற முடியும் உன்னால இந்த மழையைப் பத்தி

ஓதமேறுன கொட்டாய்ல கோணில மொடங்கியும் குளுர்ல நடுங்கியிருக்கியா

உங்கூட்டுப் பொண்டுக நமுத்த சுள்ளியோட சேந்தெரிஞ்சு கஞ்சிக் காய்ச்சியிருக்காங்களா கண்ணுத்தண்ணி உப்பு கரிக்க

ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்துசெத்த சொந்தத்த எடுக்க வக்கத்து பொணத்தோட ராப்பகலா பொழங்கித் தவிச்சதுண்டா

ஒழவுமாடொன்னு கோமாரியில நட்டுக்க ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு உயிர்ப் பதற அழுதிருக்கா உங்குடும்பம்

எதுக்கும் ஏலாம உஞ்செல்லப்புள்ளையோட சிறுவாட்டக் களவாண்டு சீவனம் கழிஞ்சிருக்கா

தங்கறதுக்கு வூடும் திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே ஒண்ணு தெரிஞ்சுக்கோ மழை ஜன்னலுக்கு வெளியதான் எப்பவும் பெய்யுது உனக்கு எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.


- ஆதவன் தீட்சண்யா
(visaiaadhavan@yahoo.co.in)

(மிகவும் ரசித்த கவிதை, நன்றி: கீற்று)
http://keetru.com/literature/poems/aadhavan_5.php

Wednesday, May 13, 2009

காதல்1... உறவின் பிறர்
முனுமுனுப்புகள்
நம் மேல் தோலில்
அமரும் தூசிதுனுக்குகள்
பறவைகளின் எச்சம்பட்டு
அணில்கள் சாவதில்லை
2.... மாலைவேளையில்
அறிமுகமான
அந்த பறவையும் நானும்
காத்திருந்தோம்
ஆனால் நீ வரவில்லை
அதனால் என்ன
காத்திருக்க இன்னும்
நிறைய மாலைகள்
உள்ளன


(15 வருடங்களுக்கு முன்னால் படித்தது.... ஏதோ ஒரு சுவை, இத்தனை நாட்களாய் ஞாபகத்தில் தேக்கிவைக்கிறது.... யார் எழுதியது என்று தெரிந்தவர் யாரேனும் சொல்லலாம்)

மௌன நாடகம்நினைவுகளை தினம்
போத்தல்களில் நிரப்புகிறேன்
முடிந்தவுடன் அவை
வெறுமையாய் புன்னகைக்கிறது
என்னுள்

Friday, April 10, 2009

காணாமல் போன சில கணங்கள்


வர்றேன்னு...
சொல்லி விட்டு போனாள்

நெடு நேரம் ஆயிற்று
அவள் விட்டுபோன வாசனையும்
எனது இருப்பின் வெறுமையும்
உணர

Tuesday, April 7, 2009

மன நிறம்வக்கணையாய் எழுது!
ஒழுக்கச்சீலனாய் தோன்று!

இரவில் குடித்துவிட்டு புணர்!
பகலில் அழகிலை என சொல்!

வாஸ்து எண்கணிதம் நம்பு!
வெளியே இல்லையென மறு!
ஏன் இப்படி?

Monday, April 6, 2009

தவிப்பு


காலத்திற்கும் அப்பால்ஒரு காலமௌனம்
புரியாத ஒரு பிரபஞ்சத்தில் தொடங்கும் பிரளயம்
நுயூட்டனும் எயின்ஸ்டியனும் ஒன்றுபட்ட வெளிச்சம்
இவையாவும் மறைந்தே போனது
இருவயது கன்னக்குழியாளின் முன்
என எழுத விழைந்தேன்
கரைந்தே போனாள் - இன்று
கருவின் கரையினிலே

Sunday, April 5, 2009

ட்விஸ்டுமா


சாகித்தியம் சானக்கியம்
படைப்பதில்லை
சானக்கியம் சாகித்திய
படுத்துகிறது


உலவும் தென்றல்
குளுர்ச்சி ஊட்டுகிறது
தென்றல் உலவி
ஊட்டி குளுர்கிறது

Friday, April 3, 2009

தமிழ் கவிவெற்றுத்தாள்களும் எழுதுகோளும்
காத்து கிடக்கின்றன
கால்களோ அஞ்சிக்கும் பத்துக்கும்
ஓடியே கடக்கின்றன

தீ


வனப்பில் உடைந்து வீழ்ந்து
அலையும் உயிர்
மனஆற்றில் வளைந்தும் சுழித்தும்
ஓடும் வார்த்தைகள்

சிறுத்தையாய் விழிகள்
சிறகாய் தேகம்
மதம் கொள்கிறது மனம்
இங்கீத தடை மீறும்
மென்று தின்று
கொன்று கிழிக்கின்றன
ஒவ்வொரு அசைவும்

சாத்தியமற்ற பொழுதுகளில்
சரியும் உடலும் சாயாத உயிரும்

ரெண்டும் ஒன்றா?
கவிதை படித்தபின் வரும்
நிசப்த அமைதி
கனவு கலைந்த திடீர்
விழிப்பு நேரம்


Thursday, April 2, 2009

To தல R P ராஜநாயஹம் அவர்களுக்கு

கசப்பு வாழ்வையும்
கவிதையினூடெ கடத்தல்

வாசிப்பின் மோகமும்
மொழியினில் மேதமையும்

கெட்டவை விலக
கொண்டாட்டம் பெறுக

Tuesday, March 31, 2009

கடவுள்


தெய்வநம்பிக்கை
உண்டு
பெரும்பாலான
சமயங்களில்

Monday, March 30, 2009

நம்பிக்கை
நாள்தோறும் தவறவிட்ட பேருந்தாய் வாழ்க்கை
சலனங்களின் தோரணங்களாய் மனதின் சுவாசம்
எறும்பின்மேல் வெல்லக்கட்டியாய் சுமைவண்டிகள்
தூரத்தே கண்சிமிட்டும் நட்சத்திரவானம்

ஆழி சூழ்

எழுதியதில் மிஞ்சவில்லை
எதுவும் கவிதையென
விளக்கனைத்து கண்மூடியபின்
எனை சூழ்ந்தன
வார்த்தை பிசாசுகள்

Saturday, March 28, 2009

ம்ம்ம்

எழுத தூண்டுவது எது?
தரித்ரத்தை பிணைத்துக்கொள்வது ஏன்?
தொடங்கும் போதே முடிந்து போகிறது
ஒவ்வொரு கவிதையும்
வழக்கம்போல்

ஏதோ ஒன்னு

மாண்டு போக ஆசை தான்
மரணம் பற்றிய ருசியும் தெரியவில்லை
தெரிந்தவர் யாரேனும் சொல்லலாம்
வாழ்வே தேவலாமுன்னு

Wednesday, March 18, 2009

சுடும் நீர்


வலியின் மிச்சம்
காய்ந்த இரு
வரிகள் கன்னத்தில்