
எண்ணங்கள் எழுத்தாய் விரிகிறது
மண்புழு பெரிதாய் குவிந்து
மெல்ல மெல்ல உள்நுழைதல்
அழும்குழந்தை முன்
தோற்குமென் கவிதை
தனித்துவிடப்படல் இயற்கையின் குரூரம்
தனியே வாழமுடியாதது இயலாமையின் மிச்சம்
வாக்கியத்துக்குள் வார்த்தைகளை அடுக்கும் முயற்சி
தொடர்ந்து உள்அடுக்குகளை அறியும் சுழற்ச்சி
ஆடித்து ஆடிக்கொண்டிருக்கற போது
குலுங்குமவள் பிட்டத்து சதை கடிக்க விழையும் மனது
வார்த்தைகளில் மாட்டிப்பிழைப்பவர் எவர்
மாட்டாதவர் எவர் - சிக்கி கிழியும் மனது
நினைவுகளின் ஊடே கடல் கடந்து
காந்தார கலைகளைக் கற்றுத்தேர்ந்து
பிரமீடுகளின் உச்சத்திலிருந்து நிலா தொட்டு
உனைத்தாண்டி உனை உணர்ந்துயிருக்கிறாயா
மழைபெய்து ஓய்ந்து போன யாருமற்ற
கழுவிட்ட தார்ச்சாலையில் பெரு மரங்களின் ஊடே
கசியும் குளிருடன் கையில் ஒரு சிகரெட்டுடன் நடந்து செல்வது
திரும்பிய பக்கமெல்லாம்
துரோகத்தின் எச்சில்
ஓடி ஒளிய தேடும் மறைவிடங்கள்
பிணவரையின் நாற்றம்
வெட்டி சுருண்ட விழிகள்
கட்டி இறுகின வலிகள்
முட்டி மோதிய உடல்கள்
தட்டி கீறிய பற்கள்
கடந்து போனது மனது
நின்று சுற்றியது காற்று
பாடும்போது கூடும்போது
எழுதும்போது பிரதி இன்பம்
துணையன்றி ஏதுமில்லைதான்
துணையென்பதும் நீயேதான்
தனித்து வாழாதது மனதின் அச்சம்
தனித்தே இருப்பது தவத்தின் உச்சம்
34 comments:
தனித்தே இருப்பது தவத்தின் உச்சம்//
அப்போ சாமியாரா நீங்க!
கும்பலோடு இருந்தாலும் தனித்தே இருப்பது வால் :)
//உனைத்தாண்டி உனை உணர்ந்துயிருக்கிறாயா
மழைபெய்து ஓய்ந்து போன யாருமற்ற கழுவிட்ட தார்ச்சாலையில் பெரு மரங்களின் ஊடே கசியும் குளிருடன் கையில் ஒரு சிகரெட்டுடன் நடந்து செல்வது //
நிறைய தடவை உணர்ந்திருக்கிறேன்...
//வார்த்தைகளில் மாட்டிப்பிழைப்பவர் எவர்
மாட்டாதவர் எவர் - சிக்கி கிழியும் மனது
//
இது ரொம்ப அடுக்கா நல்லா சொல்லியிருக்கீங்க அஷோக் சார்
டோண்ட் வொர்ர்ரி நானும் உங்க தம்பியா நினைச்சுக்கங்க பாஸ்...
that's it Vasanth.. பிரியமானவரே :)
சூப்பரு தம்பி.. கலக்குங்க... உங்களவிட 2(0000) வயசு பெரியவன் நானு :)
மகனே..
இந்த கவிதையில் என்னால் உட்கார முடியலை.அதாவது புரியலை.நீங்க கூடிட்டிங்களாக இருக்கும்.கவிதையை தேடி தேடி வாசிக்கிற முயற்சியின் வெளிப்பாடோ ஒரு வேளை?
சரி பார்க்கலாம் நாளை..
துணையன்றி ஏதுமில்லைதான்
துணையென்பதும் நீயேதான்
தனித்து வாழாதது மனதின் அச்சம்
தனித்தே இருப்பது தவத்தின் உச்சம்//
CLASSIC.....::))
// பிரியமுடன்...வசந்த் said...
//உனைத்தாண்டி உனை உணர்ந்துயிருக்கிறாயா
மழைபெய்து ஓய்ந்து போன யாருமற்ற கழுவிட்ட தார்ச்சாலையில் பெரு மரங்களின் ஊடே கசியும் குளிருடன் கையில் ஒரு சிகரெட்டுடன் நடந்து செல்வது //
நிறைய தடவை உணர்ந்திருக்கிறேன்...//
REPEATAAAAAAAAAAAAAAA::::)))))))
//அழும்குழந்தை முன்
தோற்குமென் கவிதை//
ம் தோற்க வேண்டிய கவிதைதான் அது...
அஷோக்...என்னைச் சொல்லிச் சொல்லிட்டு நீங்களே !
எனக்காகவே என் உணர்வோடு எழுதின ஒரு உணர்வு.அத்தனை வரிகளையும் என்னோடு எடுத்துக்கொள்கிறேன்.
//உனைத்தாண்டி உனை உணர்ந்துயிருக்கிறாயா
மழைபெய்து ஓய்ந்து போன யாருமற்ற கழுவிட்ட தார்ச்சாலையில் பெரு மரங்களின் ஊடே கசியும் குளிருடன் கையில் ஒரு சிகரெட்டுடன் நடந்து செல்வது//
சிகரெட் பத்தவில்லயே தவிர உணர்ந்தபடி நடந்திருக்கிறேன்.
துணையென்பதும் மாயைதான்
துணையன்றி வாழ்வும் மாயைதான்
தனித்து என்பது விதியின் இருள்
தனித்தே தவிப்பது சாபத்தின் கொடூரம்.
(இது பதிவுக்கு இல்ல அஷோக்.)
//வெட்டி சுருண்ட விழிகள்
கட்டி இறுகின வலிகள்
முட்டி மோதிய உடல்கள்
தட்டி கீறிய பற்கள்//
அய்யோ... அண்ணே பயமாயிருக்கு!
என்னை மாதிரி சின்ன பசங்க வர்ற இடம்...
பாத்து செய்யுங்க பாஸ்!!
ஹி.. ஹி..
சூப்பர் சொல்ல மறந்துட்டேன் !!
இதற்கு நெகடிவ் ஓட்டா? !!!
கோடை மழையைக் கடந்தது போன்ற உணர்வு நண்பா.
"தனித்தேயிருப்பது தவத்தின் உச்சம்" எவ்வளவு சத்தியாமான வரிகள். இதை என் வாழ்க்கையில் நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
மிரட்டுகிறாய் அசோக்,பிரம்மிக்கிறேன்.[mind blowing]
வாசத்தை வார்தையில் சொல்ல முடியாது? உணரலாம்...
ஆகவே உங்கள் ஒப்பனைகளற்ற எண்ணங்களை உணர்கிறேன்.
முத்தாய்ப்பாக
"தனித்துவிடப்படல் இயற்கையின் குரூரம்
தனியே வாழமுடியாதது இயலாமையின் மிச்சம்"
"திரும்பிய பக்கமெல்லாம்
துரோகத்தின் எச்சில்
ஓடி ஒளிய தேடும் மறைவிடங்கள்
பிணவரையின் நாற்றம்...."
@பா.ராஜாராம் சித்தப்பு
மனித மனங்களின் ஓலங்கள்(வலியினாலோ மகிழிவினாலோ), அவற்றை தொகுத்துயிருக்கிறேன். ஒழுங்கு படுத்தாமல் அப்படியே அலங்காரமற்று பிரித்து போட்டுயிருக்கிறேன் அவ்வளவுதான் :)
@பலாபட்டறை
உங்கள் Classicக்கும் உணர்தலுக்கும் நன்றி
@புலவன் புலிகேசி
நன்றி புலி
@ஹேமா
ரொம்ப பாதிச்சுடுச்சோ வரிகள்.. நன்றி ஹேமா உங்கள் வார்த்தைகளுக்கு
@கலையரசன்
கலை :))))))
@T.V.Radhakrishnan
அதான் சார், எனக்கு யார் நெகடிவ் ஓட்டு போடறாங்கன்னு தெரில. தெரிஞ்சிக்க ஆவாலாயிருக்கு :)
@மண்குதிரை
அப்படியா.. ரொம்ப நன்றி நண்பா
///திரும்பிய பக்கமெல்லாம்
துரோகத்தின் எச்சில்
ஓடி ஒளிய தேடும் மறைவிடங்கள்
பிணவரையின் நாற்றம்
அழும்குழந்தை முன்
தோற்குமென் கவிதை
தனித்து வாழாதது மனதின் அச்சம்
தனித்தே இருப்பது தவத்தின் உச்சம் ///
நிஜமான உண்மை. அருமையான கவிதை. :)
//திரும்பிய பக்கமெல்லாம்
துரோகத்தின் எச்சில்
ஓடி ஒளிய தேடும் மறைவிடங்கள்
பிணவரையின் நாற்றம்//
நச் .....
Nothing to say.. ஆனால் உங்களுக்கு பின்னூட்டம் இட வேண்டுமென தோன்றுகிறது. அதற்காக இந்த பின்னூட்டம்.. :-)
@SANTHOSHI
எல்லாம் சரியாகிவிடும் Dont worry சந்தோஷி நன்றி :)
@ஜெரி ஈசானந்தா
//மிரட்டுகிறாய் அசோக்,பிரம்மிக்கிறேன்.[mind blowing]//
மிகவும் நன்றிங்க!
@உதயதேவன்
//வாசத்தை வார்தையில் சொல்ல முடியாது? உணரலாம்...
ஆகவே உங்கள் ஒப்பனைகளற்ற எண்ணங்களை உணர்கிறேன்//
மிகவும் நன்றி உதயதேவன்
@அறிவுGV
நிஜமான நன்றி அறிவு :)
@ஜெட்லி
சச் :)
@KarthikeyanG
அன்புக்கு நன்றி கார்த்தி
கவிதை அருமை
உண்மை அஷோக்
தனித்தே இருப்பதே தவத்தின் உச்சம் அருமையா சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள்
welldone ashok
@நிகே
நன்றி நிகே :)
@தேனம்மை
நன்றிங்க :)
மிக்க நன்றி !!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீங்களும்,உங்கள் குடும்பமும்,நட்பும் நீடுடி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.
@பூங்குன்றன்வே
:)
எந்த உள் சென்சாரும் இல்லாமல் முக்கியமாக அந்த கடிக்க விழையும் மனதினையும் எழுதிய உங்களுக்கு வாழ்த்துகள். இயற்கையின் குரூரம் தனிமை என்பது உண்மை தான். சில சமயம் தனியாக இருக்க முடியாத அளவு ஜனநெரிசலான வாழ்க்கை வாழ்வதும் இயற்கையின் குரூரம் அல்லது மனித வளர்ச்சியினால் உண்டான கொடூர தண்டனை.
@சாய்ராம்
:)
Post a Comment