2012 - அட நம்ம விஜய் படம்மாதிரியிருந்தது. வழக்கம்போல் என் ஐந்தறை வயது மகன் ரசித்து பார்த்தான். படத்தில் radio jackie, இந்திய மனம், எழுத்தாளனின் பார்வை, ஹீரோ ஹீரோயின் குடும்ப நிதர்ஸனம், தலைவர்களின் நாடு பற்றிய நேசம், பெரு வர்க்கத்தின் இயல்பான சுயநலம் என்று படத்தின் ஊடே ஓட்டிக்காட்டுகிறார்கள். அந்த RJ அதிகமா ஸ்கோர் பண்ணிடறார். பற்றியும் பற்றாமலும் படம் பார்க்கமுடிகிறது. பௌத்த சன்னியாசி சிஷ்யனுக்கு கொடுக்கும் ஒரு வரி போதனையும், பேரலையின்போது மணியடித்துக்கொண்டு வாழ்வை(சாவை) எதிர்க்கொள்வதும் கவிதை. விஞ்ஞானம்(பணபலத்துடன்) அதிலிருந்து தப்புவதற்க்கு பெரிய ஷிப் கட்டுவது.
ஆஸ்ரேலியாவிடம் தோற்று இலங்கையிடம் ரண்குவித்து நம் மனதை ஆற்றிவிட்டார்கள் தோனி அன் கோ. ரொம்ப நன்னிங்கன்னா. 10 குழந்தைகளை தண்ணில விட்டு கொன்றுயிருக்கிறார் ஒருத்தர். காரணம் ஒரு செல்போன். நம்மூரில் சைக்கிளில் போவோர் கூட ஸ்டெயலாக ஒரு கையில் போனும் மறுகையால் வண்டியும் ஓட்டுவார். எதிரில் பக்கத்தில் போவோர் மட்டும் ஜாக்கிரதையா போகோனும். போன்ல பேசறது, தேவையில்லாம லேப்டாப் மற்றும் கம்யூட்டர் வைச்சிக்கறது நம்ம நாட்ல சகஜமப்பா. மனிதம் போற்றுதல், பரஸ்பர உதவிகள், மன்னிப்பு, சகிப்புதன்மை அப்படின்னா கிலோ என்ன விலை.
குமுதம் அரசுபதில்களில் சாருவை தேவையில்லாமல் இழுத்துயிருக்குறது. காமெடி+காமநெடி பத்திரிக்கை சாருவை காமெடியாக்க முனைந்துயிருப்பது எவ்வளவு பெரிய காமெடி.
26 comments:
அலோ.. ஏன்யா இதுவெல்லாம் ஒரு கிசுகிசுவா.. ? :)
//புதிதாய் எழுதும் 34 வயது கவிஞர் அவர். பதிவர் சந்திப்புக்கு கடைசியாக சென்று இருக்கிறார்.//
யார் அது....உங்களுக்கு வயசு 34??
கிசு கிசு நல்லா இருக்கே.இப்படி அடிக்கடி அவுத்து விடுங்க.
யாருப்பா அந்த பதிவர்? அப்பாடி எனக்கு வயசு முப்பது தான்.நான் இல்ல. நான் அவன் இல்லை ;)
//பௌத்த சன்னியாசி சிஷ்யனுக்கு கொடுக்கும் ஒரு வரி போதனையும், பேரலையின்போது மணியடித்துக்கொண்டு வாழ்வை(சாவை) எதிர்க்கொள்வதும் கவிதை. //
நான் ரசித்த அதே காட்சி
//2012 - அட நம்ம விஜய் படம்மாதிரியிருந்தது. வழக்கம்போல் என் ஐந்தறை வயது மகன் ரசித்து பார்த்தான்//
ஹஹஹ சார் இதுக்கு விஜய் ஒரு காமெடி பீஸ்னு நேரடியா சொல்லியிருக்கலாம்...
இப்படி கலாய்ச்சுட்டீங்களே
// பத்திரிக்கை சாருவை காமெடியாக்க முனைந்துயிருப்பது எவ்வளவு பெரிய காமெடி.//
இது சாருவின் அதிமேதாவித்தனத்துக்கு கிடைத்த பரிசு..ஒண்ணும் பண்ணமுடியாது சார்
மனிதம் போற்றுதல், பரஸ்பர உதவிகள், மன்னிப்பு, சகிப்புதன்மை அப்படின்னா கிலோ என்ன விலை.
.............உண்மை......How much is it?
ரைட்டு.... குமுதத்து மேல ஒரு கொலவெறியிலதான் இருக்கீங்க போல?
கண்டதும் கேட்டதும்....சரி சரி.
எனக்கு சாரு மேட்டருக்கு அப்புறம் தெரியலையே மகனே..பின்னூட்டம் பார்த்துதான் கிசு கிசுவெல்லாம் இருப்பதாக அறிகிறேன்.நம்ம பேவரைட்அது.
any how வாசித்தது வரையில் ரொம்ப பிடிச்சிருக்கு.
நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி உடனே கிசுகிசு பகுதி நீக்கப்பட்டது. படிப்பவர் அனைவரும் கமெண்டஸ் போடும்படி கேட்டுகொள்ளப்படுகிறது. அதுவே தொடர்ந்து இயங்க தந்துருஷ்டியை தருகிறது.
நேற்று பதிவுபோட்ட ம்றுநிமிடமே மைனஸ் ஓட்டுப் போட்ட தோழர் யாரென்று பின்னூட்டத்தில் குறிப்பிட்டால் மகிழ்வேன்.(publish செய்யமாட்டேன்).
நேரிலும் போனிலும் பேசிய நண்பர்களுக்கு நன்றி.. அப்படியே மற்றவைகளையும் பாராட்டினால் மகிழ்வான் இவண்.
என்றென்றும் அன்புடன்
D.R.Ashok
2012 ஓட ரிவ்யூவா? ஏன் ட்ரேய்லர் ரிவ்யூ மாதிரி சுருக்குனு முடிச்சுட்டீங்க :(
இன்னும் நிறைய எழுதியிருக்கலாம். என்னை மாதிரி படம் பார்க்க முடியாதவங்களெல்லாம் உங்களை மாதிரி பார்த்தவர்களின் ரிவ்யூவைத் தானே நம்பியிருக்கிறோம் :)
// காமெடி+காமநெடி பத்திரிக்கை சாருவை காமெடியாக்க முனைந்துயிருப்பது எவ்வளவு பெரிய காமெடி.
//
இதுக்கு பேர் தான் வார்த்தைல விளையாடறதா...,
:))
@கேபிள்ஜி
அன்புக்கு நான் அடிமை :)
@ ஜெட்லி
யாரு சொன்னா.. எனக்கு 24 தான்ப்பா ஆகுது ;)
@ஜெரி
:)
@ பூங்குன்றன்.வே
நீங்க அவன் இல்லை ;)
@நாஞ்சில் பிரதாப்
எழுத்துலகில் சாரு ஒரு வித்தகரே.. குமுதம் அவரை பற்றி எழுத லாயக்கே கிடையாது, பிரதாப்
@ அகல்விளக்கு
:))
@ Chitra
என்ன ஒரு 20 டாலர் இருக்குங்களா!
@ கலையரசன்
அட அதெல்லாம் இல்லை கலை. நம்ம சைட்லயிருந்து ஒரு சின்ன எதிர்வினை :)
@ ஹேமா
சர்ரி..நன்றி ஹேமா :)
@ பா.ராஜாராம்
நன்றி சித்த்ப்ஸ், அடுத்த வாட்டி கண்டிப்பா கிசுகிசு போட்டுர்றேன்
@ Shakthiprabha
கண்டிப்பா, அடுத்தவாட்டி detaila இறங்கிடறேன் Shakthi
2012 மொக்கைப்படங்க...
(ஒரு சில காட்சிகளை தவிர)
வாவ்... அசோக் சார்..
என் பதிவு பார்த்தீங்களா??
நானும் இத பத்தி தான் எழுதியிருக்கேன்...
நீங்களே ஒரு நடமாடும் நாளிதழ்
போலருக்கே சார்,
ரொம்ப ரசிக்க முடிகிற பதிவு..
வாழ்த்துக்கள்...
@ பேநாமூடி
அப்டியா..நன்றிங்க
@பிரியமுடன் வசந்த்
:))
@என்.விநாயக்முருகன்
முதல் வரியிலேயே சொல்லிட்டேனே விநாயக்.
@அன்புடன் மணிகண்டன்
அப்படியா மணி வந்துட்டாபோச்சு
@கமலேஷ்
நன்றி கமலேஷ்
எதுக்கு இந்தக் கொலைவெறி
@ தியாவின் பேனா
கொலைவெறியா.. புரில தியா?
வாழ்த்துகள்
@தியா
உறுபசிக்கு போட வேண்டியதை இங்க போட்டீங்களோ..
Post a Comment