Sunday, November 29, 2009

பிடித்த 10 பிடிக்காத 10
நண்பர் கேபிள் சங்கர் என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். பிடிச்ச பத்து, பிடிக்காத பத்து. கொஞ்சம் இக்கட்டான விஷயமா இருந்தாலும் எழுதிட்டேன்.
1.அரசியல்வாதி

பிடித்தவர் : கலைஞர்(அரசியல் சாணக்கியம்) & திருமாவளவன் (இவரின் தமிழ்பேச்சு அதி அற்புதம்)(வைகோவும் இந்த லிஸ்டில் சேரவேண்டியவர்..ஆனால் சாரி .. காரணம் உங்களுக்கே தெரியும்)
பிடிக்காதவர்: ஜெயலலிதா, Dr.கிருஷ்ணசாமி(கமல் போன்ற கலைஞனை கலாய்த்தற்காக, மற்றும் நம் கலாச்சாரத்தில் உதட்டில் முத்தமிடக்கூடாது என்று உளறியதற்காக) & சுப்ரமணியசாமி (காமெடிதான்)
2. நடிகர்
பிடித்தவர் : வாழ்வே மாயம் கமல்ஹாசன், கார்த்திக் (அக்னி நட்சத்திரம்), டெல்லிகணேஷ் (டௌரி கல்யானம்)
பிடிக்காதவர் : மன்சூர் அலிகான், பிரஷாந்
3. உணவு
பிடித்தவை : சாம்பார், ரசம், மோர், இட்லி, தோசை, மட்டன் மற்றும் செட்டிநாடு உணவுவகைகள்.
பிடிக்காதவை : எண்ணெய் அதிகம் கலந்ததும், காரமும் உள்ள பண்டங்கள் அனைத்தும்.
4. இயக்குனர்:
பிடித்தவர் : பாலா, மிஷ்கின், வசந்தபாலன், மணிரத்னம், பாலாஜிசக்திவேல், பாலசந்தர், ருத்ரைய்யா, விசு, பாரதிராஜா,
பிடிக்காதவர் : பேரரசு
5. தொழிலதிபர்
பிடித்தவர் : சக்தி மசாலா (குறையொன்றும் இல்லை என்று வேலைக்கொடுத்தினால்)
பிடிக்காதவர் : சரவணாபவன் அண்ணாச்சி (எத்தன பிகர ஓட்டிட்டார்ப்பா)
6. எழுத்தாளர்
பிடித்தவர் : தி.ஜா, ஜி.நா, சுஜாதா(rulesa மிறினாலும் இவங்கள விடமுடியாது), பாலகுமாரன், சாரு, எஸ்.ராமகிருஷ்ணன் (கதாவிலாசம் & துணையெழுத்து)
பிடிக்காதவர் : நிறைய இருக்கு
7. இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா, எ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ், எம்.எஸ்.வி
பிடிக்காதவர்: சாய்ஸ்ல விட்டுறலாமே
8. ஓளிப்பதிவாளர்:
பிடித்தவர் : சந்தோஷ்சிவன் & P.C.ஸ்ரீராம்
பிடிக்காதவர் : மொக்கையாய் ஒளிப்பதிவு செய்யும் எல்லோரும் (ஹிஹி கேபிளை வழிமொழிகிறேன்)
9. காமெடியன்:
பிடித்தவர் : கவுண்டமணி, வடிவேலு, விவேக், கர்ணாஸ்
பிடிக்காதவர் : விஜய T.ராஜேந்தர்
10. பதிவர்
பிடித்தவர் : R.P.ராஜநாயஹம்
பிடிக்காதவர் : D.R.அஷோக் (எல்லாம் ஒரு வெளம்பரம்.....)
ஒரு நாலு பேரை நான் கூப்பிடணுமாம்..

1. யாத்ரா

2. மண்குதிரை

3. Shakthiprabha

4. Karthikeyan G

5. என்.விநாயக முருகன்

Monday, November 23, 2009

இடையே - எது கவிதை?

விரலுக்கும்
உரலுக்கும்!

பிளவுக்கும்
முக்கிற்க்கும்!

குத்துக்கும்
இருமுறை பாக்ஸர் ஃப்ராக்சருக்கும்

மனமாற்றலுக்கும்
மென்மைக்கும்

சினிமாவுக்கும்
குடிக்கும்!

சால்னாவுக்கும்
சப்ஜிக்கும்!

இரண்டுக்கும்
மூன்றுக்கும்!

இல்லை...
மூன்றுக்கும்
நான்குக்கும்!

இல்லையடி...
இப்போதைக்கு உன்
இடையே!

Friday, November 20, 2009

தந்தியற்ற வீணை


வட்டங்களிலும் சந்திப்புகளிலும்
தடித்து போயிருக்கும் சாதிய இருள்மை
அதே கொடுமை தாங்காது இனமே
சிதைந்தும் நடுங்கி பிழைத்தல்
சில கட்டங்களுக்கு மேல் உயரமுடியாமல்
போகும் அவலம்

சோற்றுக்கும் வாடகைக்குமே
ஓடி வாழும்! நரக வாழ்க்கை
வாழ்வின் தொடரோட்டத்திற்கு அஞ்சி
கனவில் கூட வர மறுத்த இறுகிப்போன காமம்

தனிமையின் உச்சத்திலிருந்து
கதறிக்கொண்டிருக்கும் மனது
தவிக்கவிட்டு செத்து போன மனைவி
சாககூடமுடியாமல் கைகளில்
தேவதையை போன்றதோர் குழந்தை

தனித்தே இருக்கும் வேதனை, கோபம், கண்ணீர்
என்றேனும் அறியபடுத்துமா உங்களுக்கு
இந்த சாபமிட்ட வாழ்க்கையினை?

இத்தனை கசடுகள் நடுவினிலும்
வார்த்தைகளின் மேல் உள்ள காதலால்
அர்த்தப்பட முயற்சிக்கும் சொற்கள்
வந்துவிழும் கணங்கள் சுகமே.

Friday, November 13, 2009

வார்த்தை சிதறல்கள்

எழுத உட்கார்ந்த சிறுபொழுதுதியானமாய் நகர்ந்தது எழுதாத கவிதை – ஏனோ என் பின் தொடர்ந்தது

வானமெங்கும் திருவிழா
நட்சத்திரக்கூட்டம்
நிலவை தரிசிக்க

வயிறுமுட்ட குடித்தபின்
நண்பன் கொண்டு வந்த
வெளிநாட்டு சரக்கு

எழுதியவுடன் கவி இறந்து - உயிர்பெறுகிறது
கவிதை

கண்ணுக்கெட்டிய தூரம்வரை
துரோகங்களின் வெளிச்சம்
இறைஞ்சி நின்ற கைகளையும்
வெட்டிச்சாய்க்கும் கூட்டம்

நல்ல கவிதைக்கு காத்திருக்கும்
கவிமனம் - சாத்தியமில்லா
பொழுதுகளில் வாழும் நான்

மாடுபோட்ட சாணி
க்‌ஷனத்தில் ஆனது
கடவுள்

மனிதம் மட்டும் அஃறினையாய்
விறைத்து குறைக்கும்
நாய் மனதாய்

Saturday, November 7, 2009

வேணாம்டி விட்று

மழையில் நனைந்தோடும் பெண்கள்
அழுக்கேறும் மனம்

மெல்ல நுழைந்து டிராகனைபோல்
தலைதூக்கும் காமம்

நியாபக செதில்களில்
பட்டுத் தெறிக்கும்
பிரிவுகளின் கொடூரவழித்தடங்கள்
மழை நாட்களில்

மனதில் ஏற்றிவைத்த
சகடுகளை பிய்த்து
எறிந்துக் கொண்டே ஓடுகையில்
வழிந்து கொண்டிருந்தன
வார்த்தைகள்

நல்லது, பொல்லாதது,
நேர்மையற்றது, வினோதம்,

பெய்தாலும் பொய்த்தாலும்
கடினமே இந்த
மழையும் காமமும்

Monday, November 2, 2009

கண்டவை கேட்டவை-2


எல்லோரும் பாராட்டிய சுப்ரமனியபுரம் நமக்கு சுமாராய் தான் பிடித்திருந்த்து - 1. costumes (பயன்படுத்திய் பொருட்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் 2. இரு கண்மனி அசையும் அதில் தெறிக்கும் 3.நம்மளம் சிவப்பாதானடா இருக்கொம் - தவிர்த்து.

நாடோடிகள் படம் முழுக்க ஒரே அலம்பல் natureரான காமெடி। இதில் அதிகம் பரிசை தட்டி செல்பவர் தலைல ஜட்டிய காய போட்ட அந்த சுருள் முடிக்காரர். படத்தில் எவ்வளவு சீரியசான சீன் என்றாலும் காமடி பண்றார். (இதில் ரிவர்ஸ் ஆங்கிளும் உண்டு வீட்டில் சோகத்தை அனுபவிப்பவர்கள் வெளியில் சந்தோஷமாய் பேசிதிரிவர்). புள்ளைக்காக காதல் தூது செல்லும் தந்தை ‘நான் ex-serviceman என் பையன பாக்க போவேன்’.

ஆக்டிங்கில் எல்லா இடத்திலயும் ஸ்கோர் பண்றார் ஹீரோ danceயை தவிர்த்து. முத்தம் கொடுக்க தயார் ஆகும் சீன் தொடர்ந்து ‘மாப்பள’ என்ற குரலும் சிதறி ஒடும் நல்லம்மா whole சீனும் சூப்பர்ம்மா. கு.ந.நல்லம்மா என்ன பேரோ, நல்லாயிருக்கு பொன்னு. தங்கை கேரக்டரும் நச் ‘காலைலேவா.. ரெய்ட் ரெய்ட்’ அழகு.

கிளைமேக்ஸ் கொஞ்சமும் ஒட்டவில்லை. வேறுவழியில்ல ஹீரோயிஸத்தை அங்ககூட காட்லனா ஏப்படி..கிளைமேக்ஸ் தவிர்த்து படம் முழுக்க Good Entertainment. நம்ம ஹீரோகிட்ட எப்பவும் ஒரு spontaneity தெரியுது That’s good keep it up sir.

திரு.கள்ளபிரான், எந்த பாசாங்கும் இல்லாத எழுத்து இவருடையது.
http://kaalavaasal.blogspot.com
பாரதியின் சுவையான வீச்சான கட்டுரைகளை சிறு விளக்களுடன் படிக்கவேண்டுமா. இவர் தொடர்ந்து எழுதுகிறார் படித்து பாரதி மழையில் நனையுங்கள்.

கிசு கிசு
எந்த நேரத்துல எழுதனனோ, நம்ம யூத்து கேர்ள் பிரண்டோட உரசல், சைதாப்பேட்டை 3 நட்சத்திர ஹோட்டல் பாரில் நாலு லார்ஜ் போட்டு நாலு நாள் தாடியோட ’இந்த அஷோக் எழுதி கண்னுப்பட்டு போச்சுன்னு’ சொல்லி தன் நண்பர் பேரிகை கொட்டுபவரிடம் புலம்பியிருக்கிறார். சோகத்தில யூத்து 2 சிக்கன் தந்தூரியும் 1 மட்டன் சுக்காவையும் ஒரு சொறா புட்டையும் உள்ளே தள்ளியிருக்கிறார். என்னே சோகம்!