Friday, November 13, 2009

வார்த்தை சிதறல்கள்

எழுத உட்கார்ந்த சிறுபொழுதுதியானமாய் நகர்ந்தது எழுதாத கவிதை – ஏனோ என் பின் தொடர்ந்தது

வானமெங்கும் திருவிழா
நட்சத்திரக்கூட்டம்
நிலவை தரிசிக்க

வயிறுமுட்ட குடித்தபின்
நண்பன் கொண்டு வந்த
வெளிநாட்டு சரக்கு

எழுதியவுடன் கவி இறந்து - உயிர்பெறுகிறது
கவிதை

கண்ணுக்கெட்டிய தூரம்வரை
துரோகங்களின் வெளிச்சம்
இறைஞ்சி நின்ற கைகளையும்
வெட்டிச்சாய்க்கும் கூட்டம்

நல்ல கவிதைக்கு காத்திருக்கும்
கவிமனம் - சாத்தியமில்லா
பொழுதுகளில் வாழும் நான்

மாடுபோட்ட சாணி
க்‌ஷனத்தில் ஆனது
கடவுள்

மனிதம் மட்டும் அஃறினையாய்
விறைத்து குறைக்கும்
நாய் மனதாய்

23 comments:

பிரியமுடன்...வசந்த் said...

//எழுதியவுடன் கவி இறந்து - உயிர்பெறுகிறது
கவிதை//

அருமை அசோக்கு..

இதானே கவியின் ஆவி மாதிரி...

velji said...

நல்லாயிருக்கு.கவி இறந்து கவிதை உயிர் பெறுகிறது...அருமை.

தண்டோரா ...... said...

கான்செப்ட் ஓ.கேதான்...இன்னும்??

பா.ராஜாராம் said...

நேற்று இரவில் இருந்து இந்த கவிதையை வந்து வந்து பார்த்து போகிறேன் மகனே.ஒரு பிடிமானம் கிடைக்கலை.புரியலை என்கிற பிடிமானம் சொல்ல வரலை.ஒரு முழுமை கைகொள்ள இயலாமல் இருக்கிறதோ என இருக்கு.சரியாய் பார்க்க எனக்குதான் வரலையோ என்னவோ..

சந்ரு said...

//கண்ணுக்கெட்டிய தூரம்வரை
துரோகங்களின் வெளிச்சம்
இறைஞ்சி நின்ற கைகளையும்
வெட்டிச்சாய்க்கும் கூட்டம்//அருமையான வரிகள்

ஹேமா said...

அஷோக், மனதுக்குள் பல எண்ணங்கள்,போராட்டங்கள்.கவிதை நிறையவே எதையோ சொல்லி மறைக்கிறது.கடைசிப் பந்திக்குள் அத்தனையையும் திணித்துவிட்டிருக்கிறீர்கள்.

அஷோக்,சிலநேரங்களில் மனப்பாரம் குறைக்க என்றே எழுதுகிறோம்.
ஆனால் இன்னும் ஏற்றிக்கொள்கிறோம்.

D.R.Ashok said...

@ வசந்த்
//அருமை அசோக்கு(ங்க..)//
வசந்த் உன்னைவிட 20 வயது பெரியவன் நான். அதனால் ‘அருமை அசோக்கு(ங்க)’ என்றே சொல்லலாம் :)

@ velji

:)

@ தண்டோரா

ஜி.. அதுக்கு ஜாஸ்தி செலவாகும் பர்வாயில்லயா?

@ பா.ராஜாராம்

சித்தப்பஸ், ஊர்ல இருந்து வீடு திரும்பியதும் சாவகாசமா ஒரு 6 மாசம் கழித்து என் கவிதைகளை படித்துப்பாருங்கள்.. தெளிவாக புரியும் :)

@ சந்ரு

:)

@ ஹேமா

எல்லாம் தெரிஞ்சது சித்தப்ஸ்ன்னு நெனச்சிட்டுயிருந்தேன். சித்தப்ஸ்க்கு புரியாதது ஹேமாக்கு புரிஞ்சது எனக்கு ஆச்சரியமே.

அனுஜன்யா said...

கொஞ்சம் எழுதி, நிறைய சிந்திக்க வைக்க ஆரம்பித்து விட்டீர்கள். எனக்குப் பிடிச்சிருக்கு, புரிந்த வரையில். நிறைய கவிதைகள் படியுங்கள், நிறைய எழுதுங்கள் அசோக்.


அனுஜன்யா

கவிதை(கள்) said...

நல்ல சிந்தனை கவிதை

வாழ்த்துக்கள்

விஜய்

RAD MADHAV said...

அருமை அசோக்.... நிறைய கவிதைகள் எழுதுங்கள்...

பா.ராஜாராம் said...

:-)))))))
magane ithu..unga pinnoottatthukku.

(paanaikku!)

Praba said...

மிக அருமை தலைவா

பிரபாகரன்.

Prabaharan said...

மிக அருமை தலைவா !!...
பிரபாகரன்.

Prabaharan said...

மிக அருமை தலைவா !!...
பிரபாகரன்.

Anonymous said...

ஒன்றுக்கு ஒன்று தோடர்பு அறுந்தது மாதிரி இருக்கிறது. அல்லது எனக்கு தான் சரியப் புரிஞ்சுக்கத் தெரியலையோ ? சில வரிகள் படிப்பதற்கு நன்றாக இருந்தன,

குப்புக் குட்டி

D.R.Ashok said...

@ அனுஜன்யா

thanks Ji, ஆனா நிறைய படிச்சா.. அவங்களோட பாதிப்பு என் எழுத்தில் வந்துடும்(ஹிஹி). அதனால பிளாகு படிக்கறதோட சரி. அப்புறம் நம்ம ஸ்டெயல்ல யாரும் ப்ளாக்கல எழுதறதுயில்ல :P

@ கவிதை(கள்)
நல்ல சிந்தனையா அப்படி ஒரு சிந்தனையே நமக்கு கிடையாதே :)
நன்றி விஜய்.

@ Rad Madav
நிறையவா.. அதுக்கெல்லாம் நிறைய சரக்கு வேனும். சரக்குக்கு காசு வேனும். :)

@ பா.ராஜாராம் (அன்பு சித்தப்ஸ்க்கு)

சீக்கரம் எழுதுங்க பானைக் கவிதை. தொட்டு தொட்டு பானை செஞ்சன்னு எழுதுங்க. நடு நடுவுல அன்பு, மக்கா எல்லாம் சேத்துக்கனும் சரியா :))

@ Prabha

ரொம்ப நன்றி பிராபாகரன்.

D.R.Ashok said...

@ குப்புக் குட்டி

தலைப்ப பாருங்க :)

சி. கருணாகரசு said...

கண்ணுக்கெட்டிய தூரம்வரை
துரோகங்களின் வெளிச்சம்
இறைஞ்சி நின்ற கைகளையும்
வெட்டிச்சாய்க்கும் கூட்டம்//

இந்த‌ இட‌ம் ந‌ச்
முழுமையாக‌ புல‌ப்ப‌ட‌ வில்லைங்க‌.

சந்தான சங்கர் said...

//எழுதியவுடன் கவி இறந்து - உயிர்பெறுகிறது
கவிதை//

இது கவிதை மாதிரி
இல்லைங்கண்ணா
கவிததான்.


அருமை.

மண்குதிரை said...

மிகத் தாமடமான வருகை

நல்லா இருக்கு நண்பா

D.R.Ashok said...

@ சி.கருணாகரசு
@ சந்தான சங்கர்
@ மண்குதிரை

நன்றி நண்பர்களே :)

Shakthiprabha said...

ரொம்ப பிடிச்சிருந்தது. ஒரு கவிதைக்குள் பல குட்டிக் குட்டிக் கவிதைகள் படித்தது போல் உணர்ந்தேன். லேசான வலியும். அப்படிக் கூட இல்லை. வலியற்ற உணர்வற்ற வலி...

நல்லா இருக்கு.

D.R.Ashok said...

@ Shakthiprabha

:)