Monday, November 23, 2009

இடையே - எது கவிதை?

விரலுக்கும்
உரலுக்கும்!

பிளவுக்கும்
முக்கிற்க்கும்!

குத்துக்கும்
இருமுறை பாக்ஸர் ஃப்ராக்சருக்கும்

மனமாற்றலுக்கும்
மென்மைக்கும்

சினிமாவுக்கும்
குடிக்கும்!

சால்னாவுக்கும்
சப்ஜிக்கும்!

இரண்டுக்கும்
மூன்றுக்கும்!

இல்லை...
மூன்றுக்கும்
நான்குக்கும்!

இல்லையடி...
இப்போதைக்கு உன்
இடையே!

29 comments:

Karthikeyan G said...

சார்.. என்னாது இது????

D.R.Ashok said...

ஆழ்ந்து.. பு
in future, it will helps u lot :)

பா.ராஜாராம் said...

செம மூட் போல மகனே...

முழு உருவ சித்தி படம் ஒன்னு போட்டிருக்கலாமே..

//இல்லையடி...
இப்போதைக்கு உன்
இடையே!//

இந்த வரிகளுக்காகவே..எனக்காக இல்லை,ஹி..ஹி..

கவிதை பிடிச்சிருக்கு.

D.R.Ashok said...

@ சித்தப்ஸ்
ஹஹ்ஹஹ்ஹாஹாஹாஹா
சித்தப்ஸ் U got it........... ;)

D.R.Ashok said...

சித்தப்ஸு முழு படம் தான் போட்டேன் 2 பீஸ்ல.. இந்த கேபிளுதான் அஷோக் அப்புறம் கதையே மாறிடும்ன்னு சொல்லிட்டார். so அதனால....

Cable Sankar said...

அசோக்.. அந்த படத்தை போட்டிருந்தால் கவிதையை ரசித்திருக்க முடியாது.. நீங்களே யோசித்து பாருங்களேன். கவிதையை படித்து, உள்ளுக்குள்ளே அசைபோட்டு, இல்லையடி இப்போதைக்கு உன் இடையே என்பதை கற்பனை குதிரையை தட்டி பார்த்தால் கிடைக்கும் சுகம், படம் போட்டால் வராது.. என்பது என் கருத்து..

பிரியமுடன்...வசந்த் said...

அஷோக் சார் ரொமான்ஸா?

தியாவின் பேனா said...

அருமையான கவிதை வாழ்த்துகள்

மண்குதிரை said...

எல்லோரும் சொல்லிவிட்டார்கள்

நான் என்ன சொல்ல வேண்டும் நண்பா

-:)

வால்பையன் said...

//இப்போதைக்கு உன்
இடையே!//

இப்”போதை”க்கு உன்
இடையே!

இப்படி படிக்கலாமா!?

ஹேமா said...

அஷோக் விரலுக்கும் உரலுக்கும் இடையிலென்ன இ...டை !உங்களவளின் இடையைத் தேடுறீங்களா.இடைவெளியைத் தேடுறீங்களா ?

(படத்தைப் பாருங்க!
வேற ஒண்ணும் கிடைக்கலியா ?)

Prabaharan said...

என்ன ஆச்சி .....ஹி ஹி ஹி!!!!!!

தண்டோரா ...... said...

எதுனா சொல்லி அனுப்பு நண்பா

தேவன்மாயம் said...

ரொம்ப சிந்திக்க வச்சிட்டீங்க!!

சி. கருணாகரசு said...

முழுசா 2,3 தடவை படிச்சேன்...ம்கூம்.... இது அதிநவீன பின் நவீனமா???

நேசமித்ரன் said...

நான் ஒருவன் மட்டிலும் கொடும் அனலிடை உலவுவதோ ?

கவிதை பிடிச்சிருக்கு.

D.R.Ashok said...

@ வசந்த்
Always Romanticதான்ப்பா.. ஹிஹி.. dont tell to anyone

@ தியாவின் பேனா
அருமையாவா இருக்கு நன்றிங்க தியா..

@ கேபிள் சங்கர்
உங்க வெயிட்டு உங்களுக்கே தெரியாது தலைவரே.. நீங்க ஒரு பச்சபுள்ளயாட்டம் :)

@ மண்குதிரை
எல்லாரும் சொன்னா என்ன? நீ என்ன சொல்ற அது எனக்கு specialதானே நண்பா...

@ வால்பையன்
இன்னும் நெறைய மேட்டரு கீதுப்பா.. உள்புகுந்து கண்டுபுட்சிக்கோ ;)

@ ஹேமா
ஹேமா.. என்ன அபச்சாரம்மா..பேசின்டு..
விரல் - rectangle shape -அதாவது தட்டை
உரல்- circle - அ. உருண்டை
என்கிற பிரபஞ்ச தத்த்வத்தை சொல்லவந்தா..
(உள்ளூர்ல எல்லாம் பேர்ல்லு sizela இருக்கறதனால எனது தாய்லாந்து தோழியின் படத்தை போட்டுட்டேன் :P)

@ Prabaharan

அதான் அதேதான் ஹி ஹி ஹி

@ தண்டோரா..
சாமியேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ... :)

D.R.Ashok said...

@ நேசமித்ரன்
நன்றிங்க

@சி.கருணாகரசு
ரொம்ப எளிமையானதுதாங்க.. பின்நவினத்துவமா அப்டினா?

@ தேவன்மாயம்
ரொம்ப நாள் கழிச்சு வந்துயிருக்கீங்க... :)

இரவுப்பறவை said...

இப்பதாங்க புரியுது... என்னமோ போங்க

என்.விநாயகமுருகன் navina14@hotmail.com said...

விரலுக்கும்
உரலுக்கும்!

பிளவுக்கும்
முக்கிற்க்கும்!

குத்துக்கும்

இதை படித்ததும் ஜ்யோவ் கவிதை போல ஏதோ ஏடாகூட கவிதை எ‌ன்று ஒரு நொடி ஆடிவிட்டேன்

Anonymous said...

பிச்சிட்ட பிச்சிட்ட

சாம் வசந்தன்

யாத்ரா said...

ரொம்பப் பிடிச்சிருக்கு அசோக் :)

பா.ராஜாராம் said...

வோட்டு போட கத்துக்கிட்டோம்ல..

kamalesh said...

கவிதை நல்ல இருக்கு. ஆனால் ஜாக்கிரதை. யாராவது வேற போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்திர போறாங்க...ஏன்னா ஒரு டைப்பா இருக்கு.....திருப்பி இன்னும் ஒரு முறை படிக்கும் போதுதான் அர்த்தம் வெளங்குது...

D.R.Ashok said...

@ இரவு பறவை
’தந்தியற்ற வீணை’ படித்துவிட்டு சொல்லவும்

@ என்.விநாயமுருகன்
@ சாம் வசந்தன்
@ கமலேஷ்
நன்றிங்க... :)

@ பா.ராஜாராம்
அப்புறம் என்ன வெயிட் பண்ணறீங்க சித்தப்ஸு, என்னோட எல்லாம் கவிதைகளுக்கும் போட்டுங்க ஓட்டு ;)

@ யாத்ரா
உங்க பெரிய மனசுக்கு நன்றி நண்பனே

Shakthiprabha said...

எனக்குப் புரியலைங்க. :(
எப்டி படிச்சாலும் புரியலை.

D.R.Ashok said...

5 நொடிகளில் தோன்றியது இவை.

விரல் - Lord Shiva
உரல் - Lord Shakthi

பிளவு - பள்ளத்தாக்கு
மூக்கு - மலை
இடையே ஓடும் ஓடை
(இன்னொரு அர்த்தமும் உண்டு அதை இங்கே சொல்லமுடியாது)


வாழ்வில் நடந்த வன்முறை

அதன்பின் மனமாற்றலுடன்
வரும் மென்மை /தெளிவு

முதலில் - இது அதுவா என்கிற இடையே

கடைசியில் முடிவது தன் காதலியின் இடுப்பழகில் அதாவது இடையில் :)

இன்னும் பல அர்த்தங்களை இவை கொடுக்கும்.

ஹேமா said...

கவிதைக்கு இன்னும் விளக்கம் கிடைச்சிருக்கு.நன்றி அஷோக்.

D.R.Ashok said...

@ ஹேமா & ஷக்தி

2,3,4

என்பது பிதா, குரு, தெய்வம் வரிசையே...(அஷோக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலையடா உனக்கு:மனசாட்சி):)