Monday, November 2, 2009

கண்டவை கேட்டவை-2


எல்லோரும் பாராட்டிய சுப்ரமனியபுரம் நமக்கு சுமாராய் தான் பிடித்திருந்த்து - 1. costumes (பயன்படுத்திய் பொருட்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் 2. இரு கண்மனி அசையும் அதில் தெறிக்கும் 3.நம்மளம் சிவப்பாதானடா இருக்கொம் - தவிர்த்து.

நாடோடிகள் படம் முழுக்க ஒரே அலம்பல் natureரான காமெடி। இதில் அதிகம் பரிசை தட்டி செல்பவர் தலைல ஜட்டிய காய போட்ட அந்த சுருள் முடிக்காரர். படத்தில் எவ்வளவு சீரியசான சீன் என்றாலும் காமடி பண்றார். (இதில் ரிவர்ஸ் ஆங்கிளும் உண்டு வீட்டில் சோகத்தை அனுபவிப்பவர்கள் வெளியில் சந்தோஷமாய் பேசிதிரிவர்). புள்ளைக்காக காதல் தூது செல்லும் தந்தை ‘நான் ex-serviceman என் பையன பாக்க போவேன்’.

ஆக்டிங்கில் எல்லா இடத்திலயும் ஸ்கோர் பண்றார் ஹீரோ danceயை தவிர்த்து. முத்தம் கொடுக்க தயார் ஆகும் சீன் தொடர்ந்து ‘மாப்பள’ என்ற குரலும் சிதறி ஒடும் நல்லம்மா whole சீனும் சூப்பர்ம்மா. கு.ந.நல்லம்மா என்ன பேரோ, நல்லாயிருக்கு பொன்னு. தங்கை கேரக்டரும் நச் ‘காலைலேவா.. ரெய்ட் ரெய்ட்’ அழகு.

கிளைமேக்ஸ் கொஞ்சமும் ஒட்டவில்லை. வேறுவழியில்ல ஹீரோயிஸத்தை அங்ககூட காட்லனா ஏப்படி..கிளைமேக்ஸ் தவிர்த்து படம் முழுக்க Good Entertainment. நம்ம ஹீரோகிட்ட எப்பவும் ஒரு spontaneity தெரியுது That’s good keep it up sir.

திரு.கள்ளபிரான், எந்த பாசாங்கும் இல்லாத எழுத்து இவருடையது.
http://kaalavaasal.blogspot.com
பாரதியின் சுவையான வீச்சான கட்டுரைகளை சிறு விளக்களுடன் படிக்கவேண்டுமா. இவர் தொடர்ந்து எழுதுகிறார் படித்து பாரதி மழையில் நனையுங்கள்.

கிசு கிசு
எந்த நேரத்துல எழுதனனோ, நம்ம யூத்து கேர்ள் பிரண்டோட உரசல், சைதாப்பேட்டை 3 நட்சத்திர ஹோட்டல் பாரில் நாலு லார்ஜ் போட்டு நாலு நாள் தாடியோட ’இந்த அஷோக் எழுதி கண்னுப்பட்டு போச்சுன்னு’ சொல்லி தன் நண்பர் பேரிகை கொட்டுபவரிடம் புலம்பியிருக்கிறார். சோகத்தில யூத்து 2 சிக்கன் தந்தூரியும் 1 மட்டன் சுக்காவையும் ஒரு சொறா புட்டையும் உள்ளே தள்ளியிருக்கிறார். என்னே சோகம்!

16 comments:

தண்டோரா ...... said...

அடப்பாவி..அது நான் இல்லையா

வால்பையன் said...

அடுத்த புரோட்டாவுல இதை பற்றி எழுதுவாரா யூத்து!?

பிரியமுடன்...வசந்த் said...

ஏன் இம்பூட்டு நாள் கழிச்சு விமர்ச்சனம்?

புதுப்பட விமர்ச்சனம் போட்ருக்கலாமே அசோக்

பா.ராஜாராம் said...

அடிச்சு கலக்குறீங்களே மகனே...நல்ல தொடரோட்டம்!

கிசு கிசுவில் follow-up வேறா...மேற்படியார்,கொல்லங்குடியில் காசு வெட்டுவதாக கேள்வி!

கள்ளபிரானுக்கு நன்றி!

செய்ங்கப்பு!

இன்றைய கவிதை said...

என்னியப் பத்தியும்
எதாச்சும் கி(ச்)சு கி(ச்)சு
போடுங்க டி ஆர்!

-கேயார்

Cable Sankar said...

போனவாரமே சொன்னே ஆரு அதுன்னு..? இன்னும் சொல்லவேயில்ல அதுக்குள்ள இது என்ன கலாட்டா.>?

ஹேமா said...

அஷோக் என்ன பிந்தின முன்னோட்டமாக்கும் !

கலையரசன் said...

கண்டதையும் பாக்காதீங்க..

க.பாலாசி said...

நாடோடிகள் இப்பதான் பாத்தீங்களோ?....

நல்ல விமர்சனம்.

இன்னும் நம்ப யூத்து மாறலையா?....வால் அண்ணன் இப்டி மேட்டர உடைச்சிட்டாரே....

சி. கருணாகரசு said...

உங்க நேர்மைத்தான் எனக்கு பிடிச்சது (உண்மையாலுமே)

D.R.Ashok said...

@ தண்டோரா..
அங்கிள் அது நீங்கயில்லை (குதுருக்குள்ள இல்ல)

@ வால்
சாப்பிட்டத மட்டும் தான் எழுதுவார்.

@வசந்த்
படம் பாக்கவே பயம்தான் காரணம், முக்கியமா தமிழ் படம், படம் வந்து பலர் பாராட்டன பிறகு தான் பாக்கறது.

@ பா.ராஜாராம்
சித்தப்ஸ் உங்க பின்னூட்டமே எனக்கு glucon-D குடிக்கறாமாதிரிதான்.
அவர் வெளம்பரத்தில நல்லா கல்லா கட்டுறார். நன்றி சித்தப்ஸு.

@ கேயார்
போட்டுட்டா போச்சு

@கேபிள் சங்கர்
அப்புறம் என்ன ஆச்சு தலைவரே? ;)

@ ஹேமா
நம்ம அவ்வளவு சுறுசுறுப்பு.

@ கலையரசன்
கழுத்து தானா திரும்புதே கலை.

@ க.பாலாசி
ஆமாம் பாலாசி. நன்றி. யூத்து ஜகஜாலக்கில்லாடி ஆனா மொகத்தை மட்டும் குழந்தைமாதிரி வெச்சிகிட்டு சிரிப்பார் பாருங்க. என்னப்பண்றது நம்ம செல்லமா பாத்தா கூட டெரராதான் இருக்கு. கவலைப்படாதிங்க. வால் மேட்டர் ஒன்னு சிக்கியிருக்கு.

@ சி.கருணாகரசு
உங்க நேர்மையும் எனக்கு பிடிச்சுருக்கு. சிகரெட் பத்தின பதிவதான் சொல்றேன் :)

Vidhoosh said...

http://vidhoosh.blogspot.com/2009/11/blog-post_04.html

Please accept this gift from me with deep appreciation for your blog.

-vidhya

மண்குதிரை said...

enakku ennamo athu pitikkalai nanba

vaasikka nalla irukku nanba

thodarungka nanba

D.R.Ashok said...

@ வித்யா
நன்றிங்க கிப்டுக்கும் அன்புக்கும்.

@ மண்குதிரை

எனக்கும் திருப்தியாதான்யில்ல. ஆனா சித்தப்ஸ் பாராட்டுது. ஓகே.. அடுத்த பதிவுல/கவிதல நேர் பன்னிடலாம்(2 சுழியா 3 சுழியா குழப்பம் தீரமாட்டேங்குது). நன்றி நண்பா.

Mohan Kumar said...

ரெண்டு படம் பற்றி எனக்கு இருந்த கருத்தக்கள் பல உங்களுடன் ஒத்து போகிறது. எனக்கும் நாடோடிகள் தான் அதிகம் பிடித்தது. நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com/

D.R.Ashok said...

@ நன்றி mohan kumar

உங்கள் எழுத்துக்களையும் படித்தேன். நன்றாகவே இருந்தது. வாழ்த்துக்கள் தொடருங்கள்.