Friday, April 10, 2009

காணாமல் போன சில கணங்கள்


வர்றேன்னு...
சொல்லி விட்டு போனாள்

நெடு நேரம் ஆயிற்று
அவள் விட்டுபோன வாசனையும்
எனது இருப்பின் வெறுமையும்
உணர

Tuesday, April 7, 2009

மன நிறம்



வக்கணையாய் எழுது!
ஒழுக்கச்சீலனாய் தோன்று!

இரவில் குடித்துவிட்டு புணர்!
பகலில் அழகிலை என சொல்!

வாஸ்து எண்கணிதம் நம்பு!
வெளியே இல்லையென மறு!
ஏன் இப்படி?

Monday, April 6, 2009

தவிப்பு


காலத்திற்கும் அப்பால்ஒரு காலமௌனம்
புரியாத ஒரு பிரபஞ்சத்தில் தொடங்கும் பிரளயம்
நுயூட்டனும் எயின்ஸ்டியனும் ஒன்றுபட்ட வெளிச்சம்
இவையாவும் மறைந்தே போனது
இருவயது கன்னக்குழியாளின் முன்
என எழுத விழைந்தேன்
கரைந்தே போனாள் - இன்று
கருவின் கரையினிலே

Sunday, April 5, 2009

ட்விஸ்டுமா


சாகித்தியம் சானக்கியம்
படைப்பதில்லை
சானக்கியம் சாகித்திய
படுத்துகிறது


உலவும் தென்றல்
குளுர்ச்சி ஊட்டுகிறது
தென்றல் உலவி
ஊட்டி குளுர்கிறது

Friday, April 3, 2009

தமிழ் கவி



வெற்றுத்தாள்களும் எழுதுகோளும்
காத்து கிடக்கின்றன
கால்களோ அஞ்சிக்கும் பத்துக்கும்
ஓடியே கடக்கின்றன

தீ


வனப்பில் உடைந்து வீழ்ந்து
அலையும் உயிர்
மனஆற்றில் வளைந்தும் சுழித்தும்
ஓடும் வார்த்தைகள்

சிறுத்தையாய் விழிகள்
சிறகாய் தேகம்
மதம் கொள்கிறது மனம்
இங்கீத தடை மீறும்
மென்று தின்று
கொன்று கிழிக்கின்றன
ஒவ்வொரு அசைவும்

சாத்தியமற்ற பொழுதுகளில்
சரியும் உடலும் சாயாத உயிரும்

ரெண்டும் ஒன்றா?




கவிதை படித்தபின் வரும்
நிசப்த அமைதி
கனவு கலைந்த திடீர்
விழிப்பு நேரம்


Thursday, April 2, 2009

To தல R P ராஜநாயஹம் அவர்களுக்கு

கசப்பு வாழ்வையும்
கவிதையினூடெ கடத்தல்

வாசிப்பின் மோகமும்
மொழியினில் மேதமையும்

கெட்டவை விலக
கொண்டாட்டம் பெறுக