Thursday, August 27, 2009

மனக் கூப்பாடு

முந்தி செய்த தவறெல்லாம்
தயக்கம் காட்டாமல்
நடுவே கொட்டிச் செல்கிறது
நியாபக அடுக்குகளை

’வாசிப்பு’ அவற்றை
தவறில்லை என்றுடினும்
’சுற்றம்’ சளைக்காமல்
வேதனை படுத்துகிறது

எத்தனை முறை
பிய்த்து கொடுத்தாலும்
வந்து தொலைக்கிறது
இந்த (நொந்த)காதல்
பல சமயம் சுகந்த.

கடைசியில் மிஞ்சுவதும்
காதலியல்ல காதலே

கமல் பேசுவதை கேட்கும்போது
தன்நம்பிக்கை வருது
ரஜினியை பார்க்கும்போது
தெய்வ நம்பிக்கை!
கமல் ரஜினியென்றே தாவுது
மனம் எனும் வஸ்து
நிலையில்லாமல்

நிலையற்று இருப்பதுதான்
வாழ்வின் ருசியோ....?

இல்லை என் அம்மா செய்யும்
சப்பாத்தியோடு உருளைகிழங்கு
சப்ஜிதான் ருசியோ...?

14 comments:

Karthikeyan G said...

கவிதை Super!!

தலைவரே.. நலமா? :-)

Cable சங்கர் said...

எனக்கென்னவோ.. காதலும் சப்ஜியும்.. சூடாகவும், சுவையாகவும் இருக்கும் வரை இரண்டையும் பிடிக்கும் என்றே தோன்றுகிறது.

Ashok D said...

@ Karthikeyan G

//கவிதை Super!!

தலைவரே.. நலமா? :-)//


என்னப்பா உண்மையிலே சூப்பரா?
நலமே..
நன்றி கார்த்தி

Ashok D said...

@ கேபிள் சங்கர்
//எனக்கென்னவோ.. காதலும் சப்ஜியும்.. சூடாகவும், சுவையாகவும் இருக்கும் வரை இரண்டையும் பிடிக்கும் என்றே தோன்றுகிறது.//

காதலும் சப்ஜியும்..
சூடாகவும், சுவையாகவும்
இருக்கும் வரை
இரண்டையும் பிடிக்கும்

என்ன தலைவரே கவிதக்குள்ள கவித & பிளாசபி இரண்டையும் சொல்லிட்டிங்க... என்ன இருந்தாலும் நாம்ம யூத்துதானே..

வராதவர் வந்துயிருக்கீங்க.

நன்றி தலைவரே

வால்பையன் said...

//கடைசியில் மிஞ்சுவதும்
காதலியல்ல காதலே//

இது தான் நச்

Ashok D said...

@ வால்பையன்

//கடைசியில் மிஞ்சுவதும்
காதலியல்ல காதலே//

இது தான் நச்

சேம் ப்ளெட்.... வாங்க வால்

ஹேமா said...

வணக்கம் அஷோக்.நிறைவான கவிதைகள் சில வாசித்தேன்.வருவேன் மீண்டுமாய்.

வாழ்வும் நிலையற்றது.அதைவிட மனித மனங்கள் ஒருநிலையற்றது.

Ashok D said...

//நிறைவான கவிதைகள் சில வாசித்தேன்.வருவேன் மீண்டுமாய்.//

நன்றிங்க ஹேமா. வாங்க மீண்டும் மீண்டும்.

//வாழ்வும் நிலையற்றது.அதைவிட மனித மனங்கள் ஒருநிலையற்றது.//

உண்மைதான்.
உங்கள் பின்னோட்டமே கவிதைபோல உள்ளது. :)

க.பாலாசி said...

//கடைசியில் மிஞ்சுவதும் காதலியல்ல..காதலே....//

உண்மையான வரிகள்...

அழகான கவிதை அன்பரே....

Ashok D said...

@ க.பாலாஜி

//உண்மையான வரிகள்...

அழகான கவிதை அன்பரே....//

நன்றி பாலாஜி
முதல் வருகைக்கும்

யாத்ரா said...

நல்ல கவிதை, நல்ல பகடி அசோக்.

Ashok D said...

நன்றி யாத்ரா ;)

இரசிகை said...

azhagu...:)கடைசியில் மிஞ்சுவதும்
காதலியல்ல காதலே.....:)

Ashok D said...

நன்றி இரசிகை :)