Tuesday, June 2, 2009

அனிதாவின் டைரி குறிப்புகள்


ஓஷோ நீட்ஷே என்பான்

எல்லாவற்றுக்கும் நானறியாத
வேறொரு அர்த்தம் சொல்வான்

ஆல இலைகளை காற்றில்
ஆட பார்த்திருப்பேன்

ஆங்கிலத்தில் பிழையிப்பான்

மொட்டைமாடி சந்திப்பில்
முத்தமிட முயன்று விலகி ஓடினேன்

தோழிகளிடம் போனில் பேசுகையில்
தனிமையில் சிக்ரெட் பத்த வைத்தான்

காலையில் எனை வ்ந்து பார்க்காமல்
தூங்கியே கிடப்பான் – கேட்டால்
உனை நினைத்தே கவிதை எழுதி
கிடந்தேனடி இரவெல்லாம் - என்பான்

சாயந்திர பொழுதினில் பல ரயில்கள்
போயினும் கடக்கவிட்டு இரவு கவிழ
பிரியா விடைபெறுவோம்

கேரள புடவையில் எனை விழுங்கினான்
ரெங்கநாதன்தெரு உணவுவிடுதியில் பார்வையில்

சட்டென்று விலகிவிட்டேன்
அவனைவிட்டு ஒரு நாள்
கடைசியாக

(photo - get it from Internet)

6 comments:

Cable சங்கர் said...

:)

கலையரசன் said...

கொப்புரான நல்லாருக்கு...!
ம்ம் நிறைய எழுதுங்க!

யாத்ரா said...

கவிதை நல்லா இருக்குங்க அசோக், புகைப்படமும் :)

Ashok D said...

வாங்க கலை... உங்க பிளாக்குல பின்னொட்டம் போட முடியல... so change it in a ordinary way...?


நன்றி யாத்ரா... :)

பிரவின்ஸ்கா said...

கவிதை நன்றாக இருக்கிறது.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

Ashok D said...

பிரவின்ஸ்கா thankspa