Thursday, July 2, 2009

வார்த்தைகளின் வழியே ஓடும் வார்த்தைகள்


சாத்திய கூறுகளின் வழியே
ஓடும் வாழ்க்கை

நின்று நிதானிக்க
கற்று தராத பெற்றோர்

எதையும் தவறாகவே
கற்றுதந்த வளர்கலை சுற்றம்

மனதில் எழுதி மறந்த
கவிதைகள் எத்தனையோ.....

கருவி வியாதி
வியாதி நீக்க கருவி –
வியாதி கருவி ?

பழச்சாருவை நக்கிய நாய்கள்
நிஜம் தெரியா முண்டம்

கிருஷ்ணனோ கிறுஸ்த்துவோ
அல்லாவோ புத்தனோ

வார்த்தைகளில் இல்லை வாழ்க்கை
புரிதலில்
அது புரியவே நிறைய ஒட

ஓடை நதி
கடல் - கூடல்
மடல் - குடல்
பசி - தினம்
ஒருவேளை ருசி
வேளையேனும்

வேலைவேனும்
வேலையில்லையெனில் வேலை
சொருக வழியில்லை
பிழையில்லை
வழியில்லை வாழ


காரின் பின்னால் வாசகம்
‘nobody touch u
When God within u’

சாத்திய கூறுகளின் வழியே
ஓடும் வாழ்க்கை
நின்று நிதானிக்க
கற்று தராத பெற்றோர்
பழியை போடு மற்றோர்
மேல்!

5 comments:

இது நம்ம ஆளு said...

கருவி வியாதி
வியாதி நீக்க கருவி –
வியாதி கருவி ?

ஓடை நதி
கடல் - கூடல்
மடல் - குடல்
பசி - தினம்

‘nobody touch u
When God within u’

பிரமாதம்
வாங்க நம்ம பதிவுக்கு வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க

இது நம்ம ஆளு said...

அண்ணா
வரவுக்கு நன்றி.உங்கள் புதிய பதிவுகளை ஆவலுடன் எதிர்பர்கேறேன்.

Ashok D said...

வருகைக்கு நன்றி.. உங்களை எப்படி அழைப்பது என்பதுதான் தெரியவில்லை :)

anujanya said...

அசோக், உங்க கவிதைகளை ரிவர்சில் படித்துக் கொண்டு, மிக ஆச்சரியத்தில் இருக்கிறேன். இன்னும் கொஞ்சம் செதுக்குங்கள். மிக ஆழமான சிந்தனைகள் உங்கள் கவிதையில் அனாயாசமாக வந்து போகின்றன. சுந்தரிடம் தனி மடலில் கருத்து கேட்கலாம்.

Really proud of you man.

அனுஜன்யா

Ashok D said...

@அனுஜன்யா
//உங்க கவிதைகளை ரிவர்சில் படித்துக் கொண்டு, மிக ஆச்சரியத்தில் இருக்கிறேன். இன்னும் கொஞ்சம் செதுக்குங்கள். மிக ஆழமான சிந்தனைகள் உங்கள் கவிதையில் அனாயாசமாக வந்து போகின்றன. சுந்தரிடம் தனி மடலில் கருத்து கேட்கலாம்.

Really proud of you man. //

BOW... ஆனந்தத்தில் வார்த்தையைத்தேடி தொலைந்துவிட்டேன். just bow வாத்தியாரே