Friday, July 24, 2009

இதுவும் கடந்து போகும்




யாரிடமும் சொல்லிவிடதே என
அவளிடம் கெஞ்சினேன்
ஆபிஸில் நெருக்கமான சந்தர்ப்பத்தில்
அவளது பிட்டத்தில் கிள்ளியதை

அழுது சிவந்த அவள் அமைதியாய்
வெளியேறினாள் – மறுநாள்
அலுவலகத்தினுள் நுழைகையில்
எல்லோர் பார்வையும் என்மேல்.
கூசியது உடலும் மனமும்
வெளியேபோ என்று அனுபவ சான்றிதழும்
கொடுக்காமல் விரட்டியடித்தது எஜமானர் உலகம்
இது நடந்தது என் இருபத்தைந்தாவது வயதில்

நன்நடத்தை இல்லா இவன்
வேலையும் அற்று குடும்பத்தில்
மரியாதையும் அற்று சுற்றிதிரிந்தான்

தீராத வியாதியில் கணவனையும்
மோசமான வாஸ்துவால் வீட்டுபிரச்சனையும் தீர
காலில் வீழ்ந்துகிடந்தால் - என் நாற்பத்து ஏழாவது வயதில்
அதே அலுவலக தோழி.. ஆசிக்கூறி அனுப்பிவைத்தேன்
தாடியும் சீடர்களையும் பக்த கோடிகளையும்
வைத்துள்ள ஸ்ரீ ஸ்ரீ....... சாமியான நான்.

9 comments:

கலையரசன் said...

என்னையும் ஆசிர்வதியுங்கள் ஸ்வாமிஜி :-)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல் சாமி :))

Ashok D said...

@ //என்னையும் ஆசிர்வதியுங்கள் ஸ்வாமிஜி :-)//

கலை அதுக்கு அந்த சாமியாரத்தான் போய் பார்க்கனும் ;)
நன்றி கலையரசன்


@ செந்தில்
//கலக்கல் சாமி :))//
நான் ஆசாமிப்பா ..
நன்றி ச.செந்தில்வேலன்

கிருஷ்ண மூர்த்தி S said...

அறிதலில் காதல்-தலைப்பு நல்லாயிருக்கேன்னு பாத்தா,"அறிதல்" ரொம்ப விவகாரமாக இருக்கே!

இன்னும் எத்தனை 'அறிதல்' கைவசம் வச்சிருக்கீங்க?

Ashok D said...

கிருஷ்ணமூர்த்தி சார்... இது புனைவுங்க.. நான் ரொம்ப நல்ல பையனாக்கும்;).. என் மற்ற பதிவுகளை படிச்சிட்டு சொல்லுங்க..

பிரவின்ஸ்கா said...

நல்லாருக்கு .

- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

Ashok D said...

@ பிரவின்ஸ்கா

Thanx Pravi

Karthikeyan G said...

சார்.. நல்லா தானே போயிட்டு இருந்துது. ஏன் குமுதம் ஒரு பக்க கதை type கவிதைகள்..

Hoping u dont misatake me.. :)

Ashok D said...

@ karthi

சும்மா ஒரு சேஞ்சுக்குப்பா :) kumudam vikatan படிக்கறத விட்டு பல வருஷம் ஆச்சு

I never mistaken u.. becoz i am sweet sixteen in mindlappa ;)