Monday, July 27, 2009

சொற்களை சுமந்தபடி

சொற்கள் குறைந்தால் கவிதை
கவிதையும் மறைந்தால் ஒன்றுமில்லை

ஒன்றுமில்லை என
சொல்ல இக் கவிதை

விதை வினை விளை
களை கலை விலை
நிலை நிலைத்து?
மலைத்து விடுத்து
சிடுத்து கடுத்து!


சீட்டு கட்டாய்
கலைத்து போடும் வாழ்க்கை
சுரக்காய் விரகாய் சுமந்தபடி
பல சமயம் குரங்காய்
பால்யம் கொறுக்கலுக்காய்

12 comments:

சப்ராஸ் அபூ பக்கர் said...

///விதை வினை விளை
களை கலை விலை
நிலை நிலைத்து?
மலைத்து விடுத்து
சிடுத்து கடுத்து!///

புரியாத புதிர்.....

Ashok D said...
This comment has been removed by the author.
Ashok D said...

@ சப்ராஸ் அபூ பக்கர்

விதை கவிதையில் தொடங்குகிறது
வினையாகி போகிறது
வினையே விளைகிறது
விளைச்சலில் களையும் தோன்றுகிறது
எல்லாமே கலைக்குள் அடக்கம்
கலை விலைபோகுமோ / போகாதோ
நிலைக்குமோ நிலைத்துவிடில்?
மலைத்து இல்லையினில்
சினம்(சிடுத்து)கொண்டு கடுமைகொண்டு (கடுத்து-கடுஞ்சொல்)
இப்படியாக அர்த்தம் சுமந்தபடி ஒடுகிறது

கலையரசன் said...

//எல்லாமே கலைக்குள் அடக்கம்//
எல்லாம் எனக்குள் அடக்கம்முன்னு சொல்றீங்க?
அவ்வ்வ்வ்..
(மெறைக்காதிங்க பாஸ்.. உடம்புக்கு முடியல..)

Ashok D said...

@ கலையரசன்

உங்களுக்குள் எல்லாமே இருக்கு.. உண்மைதானே கலை ;)

Raju said...

\\விதை வினை விளை
களை கலை விலை\\

கலக்கல்.

இது நம்ம ஆளு said...

சொற்கள் குறைந்தால் கவிதை
கவிதையும் மறைந்தால் ஒன்றுமில்லை

ஒன்றுமில்லை என
சொல்ல இக் கவிதை

அருமை

Ashok D said...

@ டக்ளஸ்

நன்றி டக்ளஸ்

@ இது நம்ம ஆளு

நன்றி இ.ந.ஆ

anujanya said...

நல்லா வந்திருக்கு அசோக்.

அனுஜன்யா

Ashok D said...

@ அனுஜன்யா

நன்றி தல

இரசிகை said...

nallaarukku:)

Ashok D said...

@ Rasihai

நன்றிங்க ரசிகை