

இது என் முதல் பதிவு. கவிதை அல்லாதது.(என்ன கவிதை எழுதி கிழிச்சேன்னு கேக்கப்படாது)
தொடர்ந்து எழும் எண்ண அலைகளை தழுவி வகை படுத்துதலே இவன் மொழி. மனித மனதின் பேயாட்டமே எனது கவிதைக்களுக்கான கருபொருள்/காணும் பொருள்
இது என் முதல் பதிவு. கவிதை அல்லாதது.(என்ன கவிதை எழுதி கிழிச்சேன்னு கேக்கப்படாது)
ஓடி விளையாடு! - முதலில்
வயிறு நிறைய சோறிடு
என்றது பாப்பா!
கண்ணே கலைமானே!
கண்ணு மைனஸ் ஒண்ணு
கலைமான் கிண்டி ஜூல...
தோற்றுவிடுவோமென்று
தெரிந்தே போரிட்டான்
இராவணன்
இறைவனை எதிர்த்து
தோற்றது மனிதனா? கடவுளா?
நித்தம் போராடி
வாழ்க்கை ஓட்டும்
அன்றாடகாய்ச்சிகளாய்
என்னைப்போல்
பலபேர் பாரெங்கும் (பாரிலும்)
சேரவே முடியாத
ஏற்ற இறக்கங்களை கொண்ட
திருமணங்கள்
போராடி பேயாடி
பின் மாயும்
துணிந்து அறுத்துக்கொண்டாலும்
பிள்ளைகளின் வாசனை
சதா வந்து போகும்
வேதனையோடு நகர்தலே
வாழ்க்கையெனில்
இது தேவைதானா இறைவா...
‘தேவையென்றும்
தேவையில்லையென்றும்
எனக்கு ஏதுமில்லையென்றான்’
போடா பா_ என்றேன்.
நாள்ளொன்றாய்
சாராய நெருப்பினில்
திளைத்து ஊறி
எரிந்து போகும் உடல்கள்
எரிக்கும் வேளை காத்திருக்கும்
வரை கொண்டாட்டமே...
வியாதியில் வலியில்
துடிக்கும் போது குவாட்டரோடு
வந்து தோள் தூக்குபவரே
நண்பர்.. மற்றோர் துன்பர்
Scene 42 short no:142 Take 1
வலியில் கறைந்து செல்லும் மனது
உள்ளோடி உறையும் புகையின் படிமம்
Scene 42 short no:143 Take 2
உள்ளே புகையை போல படரும் வலிகள்
சாவை நோக்கி காத்திருக்கும் நான்
Cut
Take ok