Friday, February 12, 2010

அற்ற




வார்த்தைகள் மறுகும்போது
எழுத தொடங்கி !
வார்த்தைகள் தீர்ந்தபின்
வேலையை பார்க்க!

இடைப்பட்ட நேரத்தில்
துலாவியபொழுது
ஊற ஆரம்பித்த
வார்த்தைகள் அத்தனையும்,
எனதல்ல - என
புரிந்த நொடியில்
மறைய தொடங்கின,
ஏற்கனவே சொல்லியும்விட்ட,
வார்த்தைகள்!

26 comments:

ஜெட்லி... said...

என்னமோ சொல்றிங்க...
ஆனா பாருங்க நான் ஒரு மக்கு
எனக்கு ஒன்னும் புரியல....

கமலேஷ் said...

மிக நன்றாக இருக்கிறது தோழரே வாழ்த்துக்கள் தொடருங்கள்....

விஜய் said...

//வார்த்தைகள் அத்தனையும்,
எனதல்ல - என
புரிந்த நொடியில்
மறைய தொடங்கின//

கவிதைகள் கவிஞனுக்குச் சொந்தமில்லை, அவன் அவற்றைப் பதிவு செய்யும் ஒரு கருவியே - என்பது என் கருத்து, அது இதில் பிரதிபலிக்கிறது! அருமை!

அன்புடன்,
நான் விஜய்

அகல்விளக்கு said...

//வார்த்தைகள் அத்தனையும்,
எனதல்ல - என
புரிந்த நொடியில்
மறைய தொடங்கின//

சரியாகச் சொன்னீர்கள்

கவிதை நாம் எழுவதில்லை... எதுவோ அல்லது யாரோ எழுத வைக்கின்றனர்.

Ashok D said...

@ ஜெட்லி
நானே மக்கு... இதுல நீ வேறயா... :))

Ashok D said...

@ கமலேஷ்
நன்றி தோழரே + கவிஞரே :)

Ashok D said...

@விஜய்
:)

Ashok D said...

@அகல்விளக்கு
சரிதான் ஆனால் அவரவரின் மனதுகேற்ப வார்த்தைகள் வந்து விழும் :)

Paleo God said...

//
என்னமோ
சொல்றிங்க...
ஆனா
பாருங்க
நான் ஒரு மக்கு
எனக்கு
ஒன்னும் புரியல.//

அட கவிஞ்சர் பக்கம் வந்து ஜெட்லி கூட கவிதை எழுதறாப்பல.



நானே மக்கு... இதுல நீ வேறயா... :)//

அதானே..:) +ஒண்ணு

Thenammai Lakshmanan said...

விஜய் சொன்னதையே மறு மொழிகிறேன் அஷோக்

ப்ரியமுடன் வசந்த் said...

என்ன அண்ணா ஏதோ வெறுப்புல எழுதுன மாதிரி இருக்கு கவிதை அன்பு ரெண்டும் ஒண்ணுதான் எல்லா இடத்திலயும் இருக்கும் ஆனா அது பகிர்ந்துகிடுற விதத்தில வேறுபடுது...

அதனால துடைச்சுபோட்டு இன்னும் இன்னும் நிறைய எழுதுங்க கவிதை கட்டுரை அத்தனையும் 234க்குள்ள அடங்கியதுதானே

:)))

பா.ராஜாராம் said...

நேசன்,அனு,சுந்தரா,கவிதைக்கு இணையான கவிதை!

மகனே,

கொஞ்சம் ஸ்லோவா போங்க எட்டி வர மூச்சு வாங்குது.

கிரேட் மக்கா!

ஹேமா said...

என்றாலும் விடுபட்ட வார்த்தைகளும் விட்ட வார்த்தைகளும் உங்கள் சொந்தமில்லாவிட்டலும்
உங்களைச் சுற்றியே !

அஷோக் இது எப்போ எழுதினது ?

விநாயக முருகன் said...

உண்மைதான் வார்த்தைகள் நமதல்ல.
யாரோ யாருக்கோ சொல்லிப்போன வார்த்தைகள் காற்றில் அலைந்துக்கொண்டிருக்கின்றன. அவரவரின் சிந்தனைக்கேற்ப காற்றில் அலையும் வார்த்தைகள் மனதுக்குள் விழுகின்றன

மதுரை சரவணன் said...

vaarththaikal kavithai yaai . vaalthukkal.

மணிஜி said...

குட்பாய்!

Ashok D said...

@ஷங்கர்
+1 நன்றி :)

@தேனம்மை
நன்றி மறுமொழிந்தற்கு :)

@வசந்த
வெறுப்பா.. nopa.. :)

Ashok D said...

@பா.ராஜாராம்
சித்தப்ஸ் உங்களுக்கு தெரியுது.. அப்படியே இந்த உலகத்துக்கும் சொல்லிடுங்க... :)))

@ஹேமா
என்னைச்சுற்றியா.. உங்களைசுற்றியா.. இல்லை ஊர்சுற்றியா.. (ஹிஹி சும்மாதான்)

நேத்து (12.2.10) மத்தியானம் எழுதியது ஹேமா :)

@விநய்
ரொம்ப சரிங்கனா :)

@மதுரை சரவணன்
’நான் விஜய்’ போல முதல் வரவு :)

@தண்டோரா
நன்றி ஜி :)

வெள்ளிநிலா said...

எனக்கு கவிதை SATRU தூரம், ஆகவே.....அகவே... +1 போட்டாச்சு ,,,,

க.பாலாசி said...

//எனதல்ல - என
புரிந்த நொடியில்
மறைய தொடங்கின,
ஏற்கனவே சொல்லியும்விட்ட,
வார்த்தைகள்!//

உண்மைதானுங்க... பலநேரங்கள்ல இப்டித்தான் ஆயிடுது என்னோட பொழப்பும்...

Ashok D said...

@Velli Nilla
ஆனா உங்க பேரு கவிதையா அமைஞ்சிடுச்சே :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றாக இருக்கிறது

Ashok D said...

@க.பாலாசி
கவிஞர்கள் எல்லோருக்கும் ஏற்படும் விஷயம்தான். (எப்படி சந்தடிசாக்கல என்ன கவிஞன்னு சொல்லிக்கிட்ட பாத்தீங்களா :))

@T.V.ராதாகிருஷ்ணன்
நல்லதுங்க :)

க.பாலாசி said...

//D.R.Ashok said...
கவிஞர்கள் எல்லோருக்கும் ஏற்படும் விஷயம்தான். (எப்படி சந்தடிசாக்கல என்ன கவிஞன்னு சொல்லிக்கிட்ட பாத்தீங்களா :))//

அட... என்னையும் கவிஞன்னு ஒத்துகிட்டீங்க பாத்திங்களா :))

Ashok D said...

@பாலாசி
அட ஒரு பேச்சுக்கு பெருந்தன்மையா சொன்னா... பாருங்க சித்தப்ஸ் என்ன நேசன், சுந்தர் லெவல்ல க்ம்பேரி பண்றார். நாம்ம பிரமீள் ரேஞ்சிக்கு எழுதிட்டுயிருக்கோம் (’க.க.க.வா-காதல்’எல்லாம் கணக்குல எடுத்துக்கக்கூடாது)

இது எப்டியிருக்கு ;)

Sai Ram said...

வார்த்தைகளில் எழுதி கொண்டிருக்கிறோம் உணர்வுகளால் உண்டான கவிதையை. மொழிபெயர்ப்பாளர் யார்?