Saturday, February 13, 2010
கண்டு கலந்து கற்க வா – காதல்
கரம் தேட வரம் வேண்டும் அவள் மொத்தமும்
இனி நிற்காது தொடரும் முத்த சத்தம்
பின்னி பிணைந்த ஆன்மாக்கள் ஒன்றாக வேண்டும்
இனி செத்தாலும் பிழைத்தாலும் உன் மடிவேண்டும்
அவளை நினைக்கும் போதே இனிக்கிறது
அவளருகில் இருக்கையில் மரிக்கிறது காலம்
கண்டு கலந்து கற்க வா – காதல்
அவளைக் கண்டு கலந்து அனுஅனுவாய் கற்க ஆசை
விழையும் மனம்
சுண்டும் அவள் கவிதை
சீண்டும் என் மனதை
ருத்திரமாகயிருந்த மனம்
பொங்கும் ரௌத்திரமாய்
சிந்தை முழுக்க வளம் வருகிறாய்
எனை வெற்றிக் கொண்டவளாக
நாமும் சிதைந்து எரிவோம் ஆழி தீயென
உள்ளக்குமுறள்கள் பிரிவின் வேதனைகளை சுட்டு எரிக்கிறேன்
இனி வலம் வருவோம்
உலகை, உள்மத்தங்களை
தனித்து தவம் செய்துக்கொண்டிருந்தவன் நான்
தாகம் தனிக்க வந்த பேரானந்தம் நீ
சுகந்து வந்த தேவதை நீ
கொடுத்துவிடு உன் இதயம்
அல்லது கொய்துவிடு என் தலையை
மரண புத்துகளில் நெளியும் கருநாகம்போல
அசைகிறது உன் தனிமை என்னிடம்
நீ உணரக்காண்பாயோ
உன் சூல் கொண்ட மார்பும்
வேல் போன்ற கூரிய விழிகளும்
வார்த்தை பிசாசுகள்
கண்மண் தெரியாமல்
பாலைவன புயலைப்போல்
அடித்து நொறுக்கிறது எனை
(தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
கவிதை தித்திப்பு
பி்கு.:எழுத்துக்களை பார்க்க
அஷோக்...காதலர்தின வாழ்த்துகள்.
காதல் நிரம்பிக் கொட்டிக் கிடக்கு கவிதை முழுதும்.ஒவ்வொரு சொற்களுக்குள்ளும் காதல்.
அந்த *அவள்* அதிஸ்டசாலிதான்.
இன்னும் தொடருமா !
விரைவாய் தாங்கோ !
அடிச்சு நொறுக்கிட்டீங்க...
:)
ஆஹா கவித கவித...
//சுகந்து வந்த தேவதை நீ
கொடுத்துவிடு உன் இதயம்
அல்லது கொய்துவிடு என் தலையை//
அருமை அஷோக்
என்னது தொடருமா????????
நல்லாயிருக்கு
அருமை நல்வாழ்த்துகள்
இதெல்லாம் ஒரு கவிதை, இதுக்கு தொடரும் வேற... என்ன கொடுமைட அஷோக்கு.. alteast கொஞ்சம் edit பண்ணியிருக்கலாம்.
இப்படிக்கு இன்னொரு நானாகிய நான் :)
@றமேஸ்
சந்தோஷம், பார்த்துட்டேன் :)
@ஹேமா
அட போ ஹேமா.. அவ படிச்சுட்டு நெறைய spelling mistakkunu சொல்லிட்டா.. :(
விரைவாவா... கைல சிக்ககுனா.. கவிதையும் தானா வர போவுது :))
@ப்ரியமுடன் வசந்த்
அப்படிங்கலாண்ணா.. தேங்கஸ்ங்கணா, நன்றி வசந்த
@புலவன் புலிகேசி
இது கவிதையா புலவரே?
@தேனம்மை
ரொம்ப நன்றிங்க :)
@அத்திரி
அதிர்ச்சியா இருக்கா.. வேற ஏதாவது எழுதிடறன்பா
@தியா நன்றிங்க :)
@நதியானவள்
மு.வ.:)
@D.R.Ashok
மனசாட்சியே கொஞ்சம் அடங்கு... நானே கஷ்டப்பட்டு try பண்ணிட்டுயிருக்கேன் நீ வேற
//சுகந்து வந்த தேவதை நீ
கொடுத்துவிடு உன் இதயம்
அல்லது கொய்துவிடு என் தலையை//
அட இது புதுசாயிருக்கே....
ரொம்ப ஆழமா போயிட்டீங்கன்னு நெனைக்கிறேன்...அதனாலத்தான் தொடரும்......
நல்லாருக்குங்க தலைவரே....
D.R. அஷோக்
நல்ல கவிதைங்க... வாழ்த்துக்கள்...
------------------------
Mr. இன்னொரு அஷோக்காகிய அஷோக்கிற்கு
இந்த கவிதையை கலாய்க்க காரணம் என்ன? உங்களுக்கு ஏதாவது ப்ராப்ளம் இருக்கலாம். உங்க இனிஷியலில் புள்ளியை எடுத்துவிட்டால் வரும் அந்த நபரிடம் சென்று செக் செய்து கொள்ளவும். நல்ல கவிதையை ரசிக்க மறுப்பதும் ஒருவிதமான வியாதியே!
அன்புடன்
ஹரீஷ் நாராயண்
@க.பாலாசி
புதுசாயிருக்கா..அதான்ப்பா நம்ம ஸ்டெயிலு.. அண்டசராச்சரங்களுக்குள் போய் ரூம் போட்டு யோசிச்சுட்டு வர்றேன் :))) நன்றி பாலாசி
@Dreamer
முதல் வருகைக்கு நன்றி :)
-------------------
முன்னவரு Dreamerரு பின்னவரு nondreamerருங்க அதாங்க வித்தியாசம் :)))
பார்ட் - 2 எப்போ
அன்புள்ள நண்பருக்கு.,
இதோ நமது வெள்ளிநிலா பத்திரிகை ஆன்லைனில்! முடிந்தால் தயவு செய்து கீழ்காணும் லிங்கை உங்களின் வலைதளத்தில் கொடுத்து எல்லா பிளாக்கர்களையும் சென்றடைய உதவுங்கள் ! நன்றி!
http://vellinila.blogspot.com/2010/02/blog-post_15.html
--
அன்புடன்
ஷர்புதீன்
www.vellinila.blogspot.com
டாக்டர் எம்பிபிஎஸ் வாழ்க!
@பேநா மூடி
போட்ருவோம் :)
@வால்பையன்
யாருங்க அவரு?
இந்த மேரி படமெல்லாம் எங்க தலைவாயிருக்குது? கொஞ்சம் லிங்க் குடுங்க தல.
@ச.முத்துவேல்
மேரி போட்டோயில்ல அது :))
எல்லாம் கூகுளாண்டவரே துணை கவிஞரே!
மேரி..
மெட்ராஸ் பாசை தலீவா.
தகவலுக்கு நன்றி.
Post a Comment