Thursday, February 18, 2010
திருத்தொண்டர் புராணம்
முன்னரவில் தோழியோடு காதலை சொல்லி உருகி
இரவு சுகிர வேறுஒருவளோடு இணைந்துகிடந்து
விடியல் முதல் இறைவனோடு இரவு வரை
முதுகுதண்டு அதுர பூரணத்துவம் பெற்று
காலை நித்தியதியானம் செய்து தெம்பாய் உணர்ந்து
சில மணிநேரத்தில் பெண்களின் பிட்டம் பார்த்து நடந்து
நண்பனுக்கு அட்வைஸ் தந்து அவன் ஞானியென சொல்ல
முழுக்க வியாபாரத்தை பார்த்துக்கொண்டும்
குழந்தையோடு ஐஸ்கீரிம்முக்கு நேரம் ஒதுக்கி
ஒரு ரூபாய் பூமரை தாய் தின்றதால் கதறிகொண்டு
வந்த குழந்தையை வெறிக்கொண்டு சாத்தி
இங்கதான் கவிதையும் பிறந்தது
அவளை அசிங்கமாக திட்டி வந்தபின்னர்
அடித்த அடி வலித்தென்று போனில் சொல்லி
பிள்ளையை பார் என எனக்கான போத்தலை வாங்கியபடி
எனக்கான துணை சரியில்லை வசதியில்லை படிப்பில்லை
படிப்பும் பணமும் இருந்தால் எனை மதிப்பாளா
என சமாதானம் செய்துகொண்டு
இப்ப மட்டும் என்ன வாழுது என்று நினைத்துக்கொண்டே
முதல் ரவுண்டு முடித்தவுடன்
மெய்ஞானம் பெற்று
எல்லாவற்றிலும் இருந்து வெளியேவந்தேன்
Subscribe to:
Post Comments (Atom)
41 comments:
பட்டயக் கெளப்பறீங்க ! கொஞ்சம் முக்கினா பெரிய ஆளா வர வாய்ப்பிருக்கு தலைவா
நல்ல கவிதை களம். அருமை. எண்டரை மட்டும் மாத்தி மாத்தி தட்டிட்டீங்களா.. படிக்கும் போது கோர்வையா இல்லை.
இந்தக் குடியை மட்டும் விடவே மாட்டீங்களா :(
இப்படிக்கு, அஞ்ஞானி
ரொம்ப மெனக்கட்டுத்தான் படிச்சேன்... கவிதை மிக அற்புதம்...
ஓ அதுதானா இது!
அதாவது கிழிச்சி போட்ட புக்குல தேறின துண்டுகள், அதுல தெரிஞ்ச வரிகள் .. கலக்கறீங்க சிஷ்யவாள்..:))
--
"திருத்தொண்டர் புராணம்"
சரிதான்...
ஜுஸ் ஓவரா பிழியக்கூடாது.
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.:)
//ராஜன் said...
பட்டயக் கெளப்பறீங்க ! கொஞ்சம் முக்கினா பெரிய ஆளா வர வாய்ப்பிருக்கு தலைவா//
யாத்ரா திருமணத்திற்கு முன்தினம் இரவு நாம் விழிகளில் நீர்முட்ட சிரிச்சதைப் போல சிரிச்சுகிட்டேயிருக்கேன்.
//Vidhoosh said...
நல்ல கவிதை களம். அருமை. எண்டரை மட்டும் மாத்தி மாத்தி தட்டிட்டீங்களா.. படிக்கும் போது கோர்வையா இல்லை.
இந்தக் குடியை மட்டும் விடவே மாட்டீங்களா :(
இப்படிக்கு, அஞ்ஞானி//
இன்னுமாடா இந்த உலகம் உன்னை நம்புது.
// க.பாலாசி said...
ரொம்ப மெனக்கட்டுத்தான் படிச்சேன்... கவிதை மிக அற்புதம்//
என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை !
//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ஓ அதுதானா இது!
அதாவது கிழிச்சி போட்ட புக்குல தேறின துண்டுகள், அதுல தெரிஞ்ச வரிகள் .. கலக்கறீங்க சிஷ்யவாள்..:))
--
"திருத்தொண்டர் புராணம்"
சரிதான்...
ஜுஸ் ஓவரா பிழியக்கூடாது.
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.:)//
சிஷ்யவாள்..
நன்னாச் சொன்னேள் ஷங்கர்
சரி வந்துட்டு கவிதையைப் பத்தி சொல்லாமப் போனா எப்படி..
கவிதை நல்லாயிருக்கு. (போதையில எழுதினதோ)
கொஞ்சம் ரீ ஒர்க் பண்ணியிருந்தா சிறந்த கவிதையா ஆகியிருக்கும். கேபிளுக்கு போட்டியா என்டரே தட்டாம கவிதையெழுதினா எப்படி அஷோக்.
சரி நடத்து.
யோவ் டாக்டர் அஷோக்,
கவிதையில வர்ற தப்பெல்லாம் திருத்துய்யா மொதல்ல..
முதுகு தண்டு
பூரணத்துவம்
வியாபாரத்தை
een intha thalaippu?
உங்கள் கவிதைகளில் நான் படித்ததில் இது தான் முதலிடம்.
அனனானி
முதல்ல திருத்தண்டர் கவிதைகள்ன்னு தான் வெச்சேன் :)
திருத்தண்டா....
வர வர அறிவு கூடுது !
ஞானம் பிறக்குது !
கை நீளுது !
வாயும்தான் !
அறிவு மட்டும் அண்ணா குடுக்கிறது ! பதிவு வேற ஒவ்வொரு நாளும்.
அட...அட.
@ராஜன் பட்ட போடலை.. போடம தான் எழுதினேன்
@விதூஷ், இது ஒரு மாதிரியான ஸ்டையல்.. ஒரு விஷயம் டீப்பா பாதிக்கும்போது அப்படியே பதிவுசெய்றது செதுக்காமல்.. இப்ப சில எண்டர் கொடுத்துயிருக்கேன் :))
குடி போக போக விட்டுருவேன் தான் போல :)
@ க.பாலாசி
ஓ... நன்றி பாலாசி :)
ரொம்ப பிடிச்சிருக்கு மகனே...இப்பல்லாம் பொறாமையாய் கூட இருக்கு.(முக்கியமாய் தினம் ஒரு குவாட்டருக்கு.)
வித்யாவை யாராவது ஒரு பூச்சாண்டி பிடிக்க கடவது.
கவிதை தரையில் கிடக்கு.வாழ்வை போல.
கிரேட் மக்கா!!!
@ஷங்கர்
இது எனது இரு நாட்களின் டைரிகுறிப்புகள்.. அவ்வளவே
யாருக்கும் யான் சிஷ்யவாள் கிடையாது.
@வாசு (அகநாழிகை)
கலாய்த்தற்கு நன்றி, உங்க அடுத்த கவிதையல இருக்குடி கச்சேரி.
கவிதை போதையல எழுதல. எழுதியிருந்தா நகாசுகள் நிறைந்துயிருக்கும்.
திருத்திட்டேங்கண்ணா, Tamil is really funny language yaar... :))
கொன்னுட்டிங்க
@வாசு
கேபிள் கவிதைகளோட(?) என் கவிதைகளை கம்பேர் செய்ததற்கு என் கண்டனத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.
@ஜெரி
மிகவும் நன்றிங்க ஜெரி
@ஹேமா
டான்னா சொல்லற..உனக்கு இருக்கு_...
என்னது உங்க அண்ணா அறிவ கொடுக்கறாரா. அவரு பேச்சக்கேட்ட... அன்பு அன்புன்னு அலஞ்சிகிட்டு இருக்கவேண்டியதுதான்.. நாங்கயெல்லாம் யோசிச்சு கேடியாட்டம் எழுதுவோம்.
வர வர பின்னுட்டங்களும் கவிதைமாதிரி எழுத ஆரம்பிச்சுட்டீங்க... வாழ்த்துகள் குர்மா.. சாரி ஹேமா :)
@பா.ராஜாராம்
//கவிதை தரையில் கிடக்கு.வாழ்வை போல//
சரிதான் சித்தப்ஸு.. தேங்ஸு நைனா :)
சில சமயம் உண்மையை சொல்லிட்டு கொஞ்சம் சிரித்தும் வைப்போம் இல்ல?
:திருத்தொண்டர் புராணம்"
சேட்டையான டைட்டில்... :)
கவிதை ஜோர்... தொடர்ந்து படிக்கிறேன் உங்களை :)
Very nice to meet you friend :)
எப்பிடி நடைமுறை வாழ்க்கை அப்படியே பிசகாம கவிதையா எழுதுறதுன்னு உங்ககிட்ட கத்துகிடணும் அண்ணா...
அருமையான ஒரு கவிதை...ஆனால் ஏனோ முதல் பாதியில் வரிகளளில் உள்ள வலிமை பின் பாதியில் காணோம். ஏதோ வேலை பளுவோடு எழுதி இருகிறீர்கள் என்று நினைக்கிறேன்..ஆனாலும் தொடங்கிய விதம் மொத்த கவிதையையும் ஒளிர விடுகிறது.வாழ்த்துக்கள் தொடருங்கள்...
@V.A.S.Sangar
அப்படியா.. நன்றிபா.. first visit?
@Padma
Hats off u, மிக சரியா அனுகியிருக்கீங்க
@Prabhu.M
Same to you friend :)
@வசந்த
சும்மா எல்லாம் அடிச்சுவிடறதுதான் வசந்த்
@புலவரே :)
@கமலேஷ்
உண்மைதான் கமலேஷ்,ஆரம்பிக்கும்போது காதலும் பிறகு காமம் கடவுள் கணத்தல்..அப்பிடுன்னு சூழலுக்கு ஏற்றார் போல் அடுக்கியிருக்கிறேன்.. அலங்காரம் செய்யாமல் விட்ட கவிதையிது (நேரமின்மைதான்) :)
மப்புலேயே கவிதையும் எழுதிட்டிங்களா???
மெய் ஞானம் - ரவுண்டு???
நல்ல புராணமா இருக்கே அஷோக் யாரோடது
@சி.கருணாகரசு
இல்லைங்க :)
@சாய்ராம்
:))
@தேனம்மை
ஒரு சராசரியினுடையது :)
அன்பு அசோக்,
ரொம்ப அழகான, ஆர்ப்பாட்டமான ஆரம்ப வரிகள் கவிதைக்குள் இழுத்து விடுகிறது...
போக போக கொஞ்சம் தொய்ந்தமாதிரி இருக்கிறது, அதன் வேகம்...
கொஞ்சம் நகாசு வேலையில் அதிகம் ஜொலிக்கும், என்று எனக்குத் தோன்றுகிறது.
அன்புடன்
ராகவன்
@ராகவன்
உண்மைதான் சார். அது எடிட் பண்ணமா தோனன உடனே முந்திரிகொட்ட மாதிரி உடனே போட்டுட்டேன். இனி கவனமாயிருக்கேன். கமலேஷும் குறிப்பிட்டு சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் முதல் வரவுக்கு என் நன்றிகள்.
இந்த ஐவரையுமே படித்து இருக்கிறேன் ஜெரி நல்ல பகிர்வு அஷோக்கின் மீன் குழம்பு கவிதையும் இட்லி கவிதையும் படித்துப் பாருங்கள் மயங்கி விடுவீர்கள்
துபாய் ராஜாவின் என்னவளே பாலகுமாரின் உரையாடல் போட்டிக்கான அப்பா கவிதை கமலேஷின் இலக்கணக் கனவு கருணாரசுவை இப்பதான் படிக்கிறேன் அவருடைய செல்லமே இந்த ஐந்தும் நான் விருப்பிப் படித்தவை ஜெரி ரொம்ப நன்றி என் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் நிஜமாவே சிங்கங்கள்தான்.....congrats ASHOK
கவிதை நல்லாயிருக்கு!!!
ஓம் நம சிவாய..
@தேனம்மை
மிகவும் நன்றிங்க.. வாழ்த்துகளுக்கு
@தேவன்மாயம்
அது என்ன மூனு ஆச்சரியகுறி... டவுட்டே வேண்டாங்க.. கவித சுமாரயிருக்கு :)))
@மனிகண்டன்
அன்பே சிவம் :)
பெரிய ஆளு சார் நீங்க
முதல் ரவுண்டு முடித்தவுடன் மெய்ஞானம் வந்துவிட்டது
நமக்கு எல்லாம் மூன்றாவதில்தான்
@விநாயகமுருகன்
சரக்கு அடிக்காம இருக்கும் போதுதான் மப்பாயிருக்கு.. ஒரு ரவுண்டு போனவுடன் தெளிவு வந்திடுது..விநய் :)
ஹா ஹா, எப்படியெல்லாம் ஒன்றுடன் ஒன்றை தொடர்பு படுத்திவிட இயலும் என்பதை அழகாக காட்டும் கவிதை.
@V.Radhakrishnan
அட.. ஆமாங்கண்ணா... :)
கலக்கல் மிகவும் அருமை . வாழ்த்துக்கள்.
@நன்றி சங்கர்
Post a Comment