Wednesday, February 17, 2010
கண்டு கலந்து கற்க வா – காதல் - II
இரவின் நெடிய உறவுகளில்
உன் ஹிருதயம் மறைபொருளாய்
மறுநாள் தணியும் சுகம்
கனவில் நீகாண் உள்ளம் எனதாய்
உனது கனவில் வரும் நான்
உனைத்தானே பார்க்கிறேன்
என் கனவில் நீ வருவதை போல்
அதில் உன்னைதான் பார்க்கிறேன்
அப்படியென்றால் நிஜக்கனவு
கனவில்லை நிஜம்
கனவில் நிஜம்
தனித்தனி தீவுகளாயினும்
ஒரே பூமியில் தானே
எண்ண ஓட்டத்திற்கு
நெருக்கம் உண்டு
அரேபியதேசத்தில் மகனுக்கு
காய்ச்சல் என்றால்
கன்னியாகுமரியில் தாய்க்கும்
தகிக்கும் மனது
அது போலதான் நாம்
அது அன்பு – இது காதல்
இனி இரக்கம் என்பது
நமது வேட்டையில் இல்லை
இது காதல் கிறுக்கு
நீ என் காதல் சிறுக்கி
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
// நீ என் காதல் சிறுக்கி //
அது கிறுக்கி இல்லயா
கேபிள், பரிசலின் அனிமேஷைனை தூக்க வேண்டியதுதானே!
கடைசி வரி ’போடா பொறுக்கி’ என போட்டுயிருக்கலாமோ... :))
//அரேபியதேசத்தில் மகனுக்கு
காய்ச்சல் என்றால்
கன்னியாகுமரியில் தாய்க்கும்
தகிக்கும் மனது
அது போலதான் நாம்
அது அன்பு – இது காதல்//
அருமை.....
கண்டு கலந்துட்டோம் .. எழுத்துக்கள் //தனியும் // தணியும்... ///ஒட்டத்திற்கு /// ஓட்டத்திற்கு
மன்னிக்கவும்
இது திருத்தம் இல்லை அன்பு வருத்தம்
//இனி இரக்கம் என்பது
நமது வேட்டையில் இல்லை
இது காதல் கிறுக்கு//
வரிகள் அழகாகவும் ஆழமாகவும் இருக்கிறது..
//
அரேபியதேசத்தில் மகனுக்கு
காய்ச்சல் என்றால்
கன்னியாகுமரியில் தாய்க்கும்
தகிக்கும் மனது//
அருமை
@பேநாமூடி
கவிதையில் வரும் பெண் கிறுக்கியா என்பது கவிதையில் வரும் காதலனைதான் கேட்கவேண்டும் :)
@தண்டோரா
கேபிள்ல தூக்கமுடியாது... பரிசல ட்ரை பண்ணாலாம்
@டேய் அஷோக் இங்கயும் வந்துட்டியா
@அகல்விளக்கு
:)
@றமேஸ்
அன்பிற்கு :)
@Sangkavi
நன்றி :)
@உழவன்
:)
//அது அன்பு – இது காதல்//
இது அருமை..
என்னங்க கமென்ட்டுல நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதில் சொல்றீங்க..கலைஞரை ரொம்ப பிடிக்குமோ :)
எக்ஸ்கியூஸ் மீ.. அசோக் சார் இருக்காரா???
@வெற்றி
நம்ம எல்லாரும் கலைஞர்கள்தானேப்பா
ரொம்ப நல்லா இருக்குங்க...
///கடைசி வரி ’போடா பொறுக்கி’ என போட்டுயிருக்கலாமோ///
ஒரு முடிவோட காலத்துல இரங்கி இறங்கி இருக்கீங்க போல...நடத்துங்க...
வில்லன் எப்போ ஹீரோவா மாறினார் !
//அது அன்பு – இது காதல்
//
ரெண்டும் ஒன்னுதான் தல. நம்மதான் பிரிச்சிப் பாத்துட்டிருக்கோம்
தீராத விளையாட்டு பிள்ளை, டாக்டர் எம்.பி.பி.எஸ்
வாழ்க....
//அரேபியதேசத்தில் மகனுக்கு
காய்ச்சல் என்றால்
கன்னியாகுமரியில் தாய்க்கும்
தகிக்கும் மனது
அது போலதான் நாம்
அது அன்பு – இது காதல்//
அருமை அஷோக்
நல்லா இருக்குங்க டாக்டர்..:) தமிழ் திருவள்ளூர் ஸ்லாங் கொஞ்சம் புரிய கஷ்டமாயிருச்சி..:)
@அன்புடன் மணிகண்டன்
அவரு வேறோரு கவிதைக்காக யாரா சுடலாம்ன்னு யோசிட்டுயிருக்கார் மணி :)
@கமலேஷ்
ஹிஹி :)
@ஹேமா
கொஞ்சம் அடங்கு, தலைவர் எப்பவும் ஹீரோதான் ;)
@புலவன் புலிகேஸி
புலவரே தமிழில் அன்பு, காதல், பாசம், பரிவு, கருனைன்னு நெறிய வார்த்தை கீதுபா. இப்ப தங்கச்சிகிட்டயிருக்கர அன்புக்கும் டாவோட இருக்கற அன்புக்கும் அர்த்தம் வேற. அந்த வேற வேற உணர்வுக்கு வேறுவேறு பெயர் கொடுப்பதுதான் தமிளு. இங்க்லிபீச்சுல எல்லாத்துக்கும் லவ் இன்றுவானுங்க சுலுவா. நன்றி புலி :))
@ஜெட்லி
க்ரெக்டா நம்மள கண்டுகுனாப்பா...ரொம்போ தாங்க்ஸ்பா
@தேனம்மை
:)
@ஷங்கர்
தமிழ் திருவள்ளுவர்... ம்ம்ம்... கலாய்க்கறதுக்கு ஒரு அளவே இல்லையா.. :))
KANAVILUM KAATHAL ARUMAI.
@மதுரை சரவணன்
நன்றிங்க :)
நல்ல கவிதை....
@நன்றி மஞ்சுர் :)
//அரேபியதேசத்தில் மகனுக்கு
காய்ச்சல் என்றால்
கன்னியாகுமரியில் தாய்க்கும்
தகிக்கும் மனது//
அஷோக்..ம்...ம்..ம்...சூப்பர்
@T.V.R
:)
Post a Comment