Sunday, December 25, 2011

ஏசுவே எந்தன் கர்த்தாவே



சொல்லிக்கொள்ளாமல்
ஞானஸ்தானம்
வாங்கினாள்
சகோதரி

முன்னம் சொல்லியிருந்தாள்....
ஆனால் அது
இன்றென பகரவில்லை

யேசுவே எந்தன் கர்த்தாவே
உனக்கு ஸோஸ்த்திரம்
நல்லவேளை நீங்கள்
எங்க சொந்தக்காராக இருக்கவில்லை
இல்லையெனில் எப்படி என் தங்கை
உன்னை நேசிப்பால்

கலியுக கர்ணன் கிருத்துவத்தையே ஏற்றிருப்பான்
துரியோதனை விடுத்து
சமய சங்(கி/கொ)லிகள் பாடாய் படுத்துகிறது

காசுகாக மாறுகிறார்கள்
என அச்சு பிச்சென
எல்லா இந்திய சாதியும் சொல்லுகிறது
ஆப்பிரிக்காவிலும் இப்படி சொல்லக்கூடும்...
என்ன செய்ய
ஏசுவே எந்தன் கர்த்தாவே என்னை ஆதரி

- இயேசு: என் கிருபை உனக்குப் போதும் – 2கொரி.12:9

10 comments:

இராஜராஜேஸ்வரி said...

யேசுவே எந்தன் கர்த்தாவே
உனக்கு ஸோஸ்த்திரம்

ஹேமா said...

இயேசுவே மதம் மாறும் அவர்களை மன்னியுங்கள்.பெற்றவர்களை மாற்றுவதும் பிறந்த மதத்தை மாற்றுவதும் ஒன்றென்று உணரவையுங்கள்.நல்லவரோ கெட்டவரோ அம்மா நம் அம்மாதான்.அம்மாவை மாற்றமுடிவதில்லையே !

Ashok D said...

@இராஜராஜேஸ்வரிஜி
ஸோஸ்த்திரம் :)

@ஹேமாஜி
முதல்ல மாறியது mummy தான்.. அப்ப நானும் மாறனம்ன்னு உணர்த்தியதற்கு நன்னி :)

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

Robin said...

//பெற்றவர்களை மாற்றுவதும் பிறந்த மதத்தை மாற்றுவதும் ஒன்றென்று உணரவையுங்கள்//

பிறந்த மதமா - அப்படீன்னா என்ன?
அம்மணி, மத நம்பிக்கைகள் அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஏன் தாய்க்கு ஒரு நம்பிக்கையும் மகனுக்கு வேறு நம்பிக்கையும் இருக்கக்கூடாதா?
தாய் நாட்டைவிட்டு வேறு நாட்டுக்கு செல்வதும் பெற்றவர்களை மாற்றுவதும் ஒன்றுதான் என்றால் எவ்வளவு முட்டாள்தனமாக இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது நீங்கள் சொல்வதும். மனைவி சர்ச்சுக்கும் கணவன் கோயிலுக்கும் செல்லும் குடும்பங்களைக்கூட பார்த்துள்ளேன்.

Ashok D said...

@Robin
ஹேமா சில விஷயங்களில் ‘குழந்தை’ அதனால் விட்ருவோம் :) நன்றி வரவுக்கு

Shakthiprabha (Prabha Sridhar) said...

அஷோக், நலமா?

எனக்கு பிடித்தமான உங்கள் எழுத்துக்கு என்னாலான
ஒரு சிறு அங்கீகாரமாக, liebster விருதை உங்களுக்கு
அளிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். தொடர்ந்து நிறைய
எழுதுங்கள்.

விருது வழங்கிய சுட்டி கீழே:
http://minminipoochchigal.blogspot.in/2012/02/liebster.html

Ashok D said...

@Shakthiprabha
நன்றி :) நலமா

Ashok D said...

என்றும் இனியவன்
நன்றி

இரவுப்பறவை said...

நீண்ட இடைவெளி... நலமா? தாங்களும் எழுதுவதை குறைத்து விட்டீர்களா? :(