Saturday, August 15, 2009

விசித்திர நொடிபொழுதுகள்

மேல் உதடுகளும்,
கீழ் உதடுகளிலும் ஆழ்ந்து
பல மணித்துளிகள்
சேர்ந்திருந்தபோதும்
மறுநாள்
மனம்
சேராமல்
போவதென்ன?


கிறுக்கு
கவிதைகளின் வால் பிடிக்க
அவள் என் தோள் பிடிக்க
காதல் பீடிக்க
சடுதியில் காமம் பீறிட
சட்டென துளிர்ந்த வெட்கம்
உள்ளுக்குள்ளே பூ பறிக்க
முகர்ந்தே கண்ணம் கரைக்க
சாத்தானும் கடவுளும்
பாதி பாதியாய் எங்களுள்
புகுந்து பட்டையை கிளப்ப
இதோடு நான் நிறுத்த
அடையுங்கள் ஆசுவாசம்

9 comments:

selventhiran said...

புகுந்து பட்டையை கிளப்ப
இதோடு நான் நிறுத்த
அடையுங்கள் ஆசுவாசம் // ஹா..ஹா ரசித்துச் சிரித்தேன் அசோக். அருமை!

Ashok D said...

To செல்வேந்திரன்
எழுதும் போது சீரியஸா இருக்ககேன்னு டக்கன்னு தோனுன வரிகள்...(மனசுயில்லாம தான் எழுதினேன்) அத அருமைன்னு சொல்லிட்டிங்க..anyway காமடிய கலக்கனும் போலயிருக்கு!

நன்றி செல்வேந்திரன்

மணிஜி said...

/புகுந்து பட்டையை கிளப்ப
இதோடு நான் நிறுத்த
அடையுங்கள் ஆசுவாசம் // ஹா..ஹா ரசித்துச் சிரித்தேன் அசோக். அருமை!//

செல்வாவை வழிமொழிகிறேன்

Ashok D said...

To தண்டோரா.. நீங்களுமா?? :)

நன்றி மனிஜி

வால்பையன் said...

//அடையுங்கள் ஆசுவாசம்//

ஆமாங்க!
இல்லைனா ரொம்ப கஷ்டமா போயிருக்கும்!

Ashok D said...

வாங்க வால்

Ashok D said...

@ Rasihai

:) Thanks

யாத்ரா said...

கவிதைகள் ரொம்ப நல்லா இருக்குங்க அசோக்.

Ashok D said...

@ யாத்ரா

ரொம்ப சந்தோஷம் கவிஞரே உங்கள் வருகைக்கு.