ஓடி விளையாடு! - முதலில்
வயிறு நிறைய சோறிடு
என்றது பாப்பா!
கண்ணே கலைமானே!
கண்ணு மைனஸ் ஒண்ணு
கலைமான் கிண்டி ஜூல...
தோற்றுவிடுவோமென்று
தெரிந்தே போரிட்டான்
இராவணன்
இறைவனை எதிர்த்து
தோற்றது மனிதனா? கடவுளா?
நித்தம் போராடி
வாழ்க்கை ஓட்டும்
அன்றாடகாய்ச்சிகளாய்
என்னைப்போல்
பலபேர் பாரெங்கும் (பாரிலும்)
சேரவே முடியாத
ஏற்ற இறக்கங்களை கொண்ட
திருமணங்கள்
போராடி பேயாடி
பின் மாயும்
துணிந்து அறுத்துக்கொண்டாலும்
பிள்ளைகளின் வாசனை
சதா வந்து போகும்
வேதனையோடு நகர்தலே
வாழ்க்கையெனில்
இது தேவைதானா இறைவா...
‘தேவையென்றும்
தேவையில்லையென்றும்
எனக்கு ஏதுமில்லையென்றான்’
போடா பா_ என்றேன்.
நாள்ளொன்றாய்
சாராய நெருப்பினில்
திளைத்து ஊறி
எரிந்து போகும் உடல்கள்
எரிக்கும் வேளை காத்திருக்கும்
வரை கொண்டாட்டமே...
வியாதியில் வலியில்
துடிக்கும் போது குவாட்டரோடு
வந்து தோள் தூக்குபவரே
நண்பர்.. மற்றோர் துன்பர்
Scene 42 short no:142 Take 1
வலியில் கறைந்து செல்லும் மனது
உள்ளோடி உறையும் புகையின் படிமம்
Scene 42 short no:143 Take 2
உள்ளே புகையை போல படரும் வலிகள்
சாவை நோக்கி காத்திருக்கும் நான்
Cut
Take ok
24 comments:
தொடர்ச்சியா வித்யாசமான முயற்சிகள் அஷோக்...
வரிகள் ஆணி அடித்தாற்போல் மனதில் பதிகிறது.....
அஷோக்,சில வரிகள் மனதைக் குடைகின்றன.
//வேதனையோடு நகர்தலே
வாழ்க்கையெனில்
இது தேவைதானா இறைவா...
‘தேவையென்றும்
தேவையில்லையென்றும்
எனக்கு ஏதுமில்லையென்றான்’
போடா பா_ என்றேன்.//
படைத்தவன் படைத்துவிட்டு அவன் பாடு.எங்கள் பாட்டை நாங்களே பாடிக்கொண்டு.
இது ஹைக்கூ மாறியும் இருக்கு..இலக்கிய தமிழில் உங்களின் கருத்துக்களை சொன்னது போலவும் இருக்கிறது...வழக்கம் போல் நன்றாக இருக்கு..
அன்புடன்,
அம்மு.
/தோற்றுவிடுவோமென்று
தெரிந்தே போரிட்டான்
இராவணன்
இறைவனை எதிர்த்து//
வீரனுக்கழகு
போரிடல்.
அருமையா இருக்கு பாஸ்!!
kadaisila konjsam viththiyaasamaa irukku nanba
niingka cinema la irukkiingkala?
//வியாதியில் வலியில்
துடிக்கும் போது குவாட்டரோடு
வந்து தோள் தூக்குபவரே
நண்பர்.. மற்றோர் துன்பர்//
அது!............
நல்ல பதிவு நண்பா
//சேரவே முடியாத
ஏற்ற இறக்கங்களை கொண்ட
திருமணங்கள்//
யாதார்த்தமான உண்மை.. ஒரு சின்ன கருத்து. உங்க கவிதைகள்'ல புகைப்படங்களை இணைத்தால் இன்னும் அதன் வலிமை கூடும்.
@வசந்த்
வித்யாசமா இருக்கா வசந்த்? இது மாதிரியெல்லாம் சொல்லி மனச தேத்துங்க்கப்பா..
@ஹேமா
வாங்க ஹேமா கடவுள புடிச்சு வதை முகாம்ல போட்டுடலாம் :)
@ அம்மு
காதகொண்டாங்க ஒரு உண்மைய சொல்லனும் ‘இலக்கியம்’ன்னு சொல்லறாங்கல அத இனிமேல் தான் படிக்கனும் :) அன்புக்கு நன்றிங்க அம்மு.
@ கேபிள் சங்கர்
நச்ன்னு இரண்டு வார்த்தைகள்ல சொல்லிட்டீங்க. வர வர இலக்கியவாதியா ஆகிட்டு வரீங்க ஜாக்கிரதை
@ கலையரசன்
அதல்லாம் சும்மா அடிச்சுவிடறது கலை. நன்றி கலையரசன்.
@ மண்குதிரை
கடசில கொஞ்சம் வித்தியாசமா இருந்துச்சா... கடைசி வரிகள்ல கலக்கறதுக்கு நான் என்ன மண்குதிரையா? இல்ல பாராவா?
சினிமால நான் இல்லப்பா. I am self employed.
வருகைக்கு நன்றி நண்பனே...
@ வால்பையன்
எழுதும்போதே நினச்சேன் இவ்வரிகள் வாலுக்கு பிடிக்குமேன்னு. நிருபிச்சிட்டீங்க.
அப்புறம் இதுக்கு எதிர்கவுஜ போடமுடியாதே..பவ்பவ்..
(ஏன்னா இது கவுஜயே இல்லன்னு மக்கள் சொல்லுவது காதுல உழுது மக்கா)
@ வெண்ணிற இரவுகள்
ரொம்ப நன்றி நண்பா
@ கவிதை காதலன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கவிதைக்காதலன்
தேவதையின்
வரமிட்டிருக்கின்றேன்
உங்கள்
கரமிட்டுச்செல்லுங்கள்..
//சேரவே முடியாத
ஏற்ற இறக்கங்களை கொண்ட
திருமணங்கள்
போராடி பேயாடி
பின் மாயும்//
கலவி முடித்து வெறுத்த உடலாய்.
//துணிந்து அறுத்துக்கொண்டாலும்
பிள்ளைகளின் வாசனை
சதா வந்து போகும்//
நிதர்சனமான வரிகள்...
//வலியில் கறைந்து செல்லும் மனது
உள்ளோடி உறையும் புகையின் படிமம்//
அழகான வரிகள்...
ஒவ்வொரு பத்தியும் அருமை....
நண்பரே...தாங்கள் தமிழ்மணத்தில் இணையவில்லையா?...இணைத்துக்கொள்ளலாமே....
@ க.பாலாஜி
//கலவி முடித்து வெறுத்த உடலாய்//
நல்லா முடிச்சியிருக்கீங்க கவிஞரே.
நன்றி க.பாலாஜி வருகைக்கும் பகிர்தலுக்கும்.
உன்மத்த நிலை பற்றி நாம இப்ப தான் பேசிட்டு இருந்தோம், இங்கே உங்க கவிதை, ரொம்ப நல்லா இருக்குங்க அசோக்
@ யாத்ரா
ரொம்ப நன்றி நண்பனே
அடிச்சு கலக்குறீங்க அசோக்!புதுசா இருக்கு அசோக்.
// கடைசி வரிகள்ல கலக்கறதுக்கு
நான் என்ன மண்குதிரையா?
இல்ல பாராவா?//
மண்குதிரை சரி.
மற்றது பயமா இருக்கு அசோக்!
@ பாரா
வாங்க சார், எங்க ஆளையேக்கானொம்ன்னு நெனச்சேன், ஆலுவல் அதிகமோ?
நச் வரிகள். எதார்த்தம்.
@ விக்னேஷ்வரி
:)
Post a Comment