Thursday, March 11, 2010
ஹிருதயம் கிழிய இதுவரை ஏற்றி வைத்த கசடுகளோடு ஒரு கலா பயணம்
உனக்கு தெரிந்தது தமிழ் வார்த்தைகள்
எனக்கு தெரிந்தது உள் வார்த்தைகள்..
அதற்கு மொழி கிடையாது
மொழியற்ற மொழி அது
மொழி பெயர்த்தால் தோற்க்கும் மொழி
சிறந்த மொழி உன்னது என்று முன்மொழியாதே
மொழிகள் தோற்க்கும் பல விடயங்களில்
மொழிகளுற்று வாழ பழகிடு
உள்ளுக்குள் வெடித்து விழுந்த வானம்
பிரபஞ்ச முடிவு தேடி பறக்கும் அவன்
விடைதெரியா இறைதேடல்
சுழற்றி வீசும் வார்த்தைகளில் மனமாட
உடை இடை வளைந்து குழைந்தாட
எண்ணத் தொடக்கத்தில் மறைந்து வாழும் இறை
எண்ணச் சிதறல்கள் பெறுக்கி எடுக்கும் நானை
வீரியமிழக்குது ஒரே இடத்தில் உட்கார்ந்த உடல்
ஞானம் பிறக்குது சிலருக்கு பைல்ஸ் வருகுது
உயிர்கொடுக்குது ஒரே இடத்தில் உட்கார்ந்த கோழி
வாழ்க்கை விந்தை கொடுத்து சிந்தை வளர்க்கிறது
பூமி பந்தை உதைத்து சூரியனிலிருந்து தள்ளியிருப்போம்
Itz செம்ம hot machi
விளங்காத வாழ்க்கை
மனமென்னும் புதிர்
ஒருநிலையில் வாழாத எண்ணம்
இருட்டில் கண்திறக்கும் பெருங்காமம்
கொட்டும் சர்பமென மாட்டும் வாழ்வு
பொழுதுபுலரும்படியே மாறும் மனம்
மனம் - துரத்தும் நாய்
நாயாய் துரத்தும் - மனம்
கனம் தோறும் - வேடிக்கை
குறையும் - மனம்
வனம் தேவையற்று
பெண் துறத்தும் மனம்
வாசனை சலிக்கா இரவுகள்
வியர்வையில் குளிக்கும் பின்னிரவுகள்
விடியல் தியானத்தில் முதுகில் இறங்கும் கோடுகள்
இரண்டும் ஒன்றா?
ஆகுநீர் அணைநீர்
செவுட்டில் அடிக்கும் இனி உன் கிண்டல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
நல்ல பயணம்தான் அஷோக்... ரொம்ப நாளா எழுதலயே ஏன்..?
//மொழிகள் தோற்க்கும் பல விடயங்களில்
மொழிகளுற்று வாழ பழகிடு//....உண்மைதான், அழகா எழுதி இருக்கிங்க!
என்ன சொல்ல .பதினோரு வோட் வந்தாச்சு .ஆனா நெஜம்மா எனக்கு மனசிலாகல
செவுட்டில் அடிக்கும் இனி உன் கிண்டல்கள் :)
ரொம்ப நேரமா படிச்சுட்டே இருக்கேங்க. எதுனாலன்னு தெரில. :(
கட்டு(டன்)டைப்புக் கவிதை.
சில கேள்விகள்:
கலா யாருங்க..??
//பூமி பந்தை உதைத்து சூரியனிலிருந்து தள்ளியிருப்போம்/// மார்ஸ் போனத்துக்கு வாழ்த்துக்கள். எப்ப வந்தீங்க?
==================
படிச்சு முடிச்சுட்டு இருமல் ஜாஸ்தியாகிடுச்சு.. :))
@thenammailakshmanan
முதன்மையாய் நானொரு வாசகன் எப்பொழுதாவது கிறுக்கவும் செய்வேன். :)) அதெல்லாம் இல்லங்க நண்பர்களோடு அரட்டையில் ஓடிவிடுகிறது நேரம் :)
@Priya
ப்ரியா.. முதல் வருகை.. நன்றிங்க :)
@Padma
இப்பதான் வந்து பாக்கறேன்.. மனசிலாகலயா... திரும்ப திரும்ப வாசியுங்கள்.. நானே அதான் செஞ்சிட்டுயிருக்கேன் :)
@Sivaji Sankar
ஏம்பா வேற எந்த வரியும் புடிக்கலயா... நன்றி சங்கர் :)
@விதூஷ்
கல்லாய்த்தற்கு நன்றி :P
உள்ளேன் அய்யா!
அட்டனன்ஸ்ல ப்ரசண்ட் போட்டுடேன் முத்துவேல் :)
ஐ மீன் இத வெச்சின்னு சொன்னது இந்த கவிதை வெச்சி..:)
முதன்மையாய் நானொரு வாசகன் //
மிக்க நன்றி..! இத வெச்சி எதுனா எழுதும்போது உங்களுக்கு ஒரு டைட்டில் கார்ட் உண்டு..:)
சுஜாதா கவிதை எழுதுனமாதிரி இருக்கு....
@பலாபட்டறை
very happy to welcome to our studios :)
@க.பாலாசி
நான் பிரமீளவிட சூப்பரா எழுதறன்னு சொல்லறாங்க நீங்க சுஜாதாவொட ஒப்பிடுகிறீங்களே... எப்பூடி... :)))
@சித்தப்ஸ்
நல்லாயிருக்கு...சுமாராயிருக்கு.. அப்டின்னு ஏதாச்சும் சொல்லிட்டு போலாமுள்ள..ஹல்லோ சித்தப்பு.. உங்கள தான்...
:-)))
மொழியில் தொடங்கி எப்படியோ போய் எங்கோ முடிந்தது.. ஆனா நல்லா இருக்கு.
இன்னும் கொஞ்ச நாள்ல வெண்பா, ஆசிரியப்பா எல்லாம் எழுத ஆரம்பிச்சிடுவீங்க போல... :)
@T.V.R
வாங்க :)
@மஞ்சூர் ராசா
மனதின் ஓட்டம் அப்படி, நன்றி :)
@Sariam
//இன்னும் கொஞ்ச நாள்ல வெண்பா, ஆசிரியப்பா எல்லாம் எழுத ஆரம்பிச்சிடுவீங்க போல... :)//
இரக்சியமா ஒன்னும் சொல்லட்டுமா... அதெல்லாம் எனக்கு எழுத தெரியாது..சாய் :)
//விளங்காத வாழ்க்கை
மனமென்னும் புதிர்
ஒருநிலையில் வாழாத எண்ணம்
இருட்டில் கண்திறக்கும் பெருங்காமம்
கொட்டும் சர்பமென மாட்டும் வாழ்வு
பொழுதுபுலரும்படியே மாறும் மனம்
//
தற்சமய அதிமுக்கியமாகி விட்ட உலக நிகழ்வின் அலசலா அண்ணா?
வார்த்தை கோர்ப்பு இலேகிசம்...
@vasanth
அது மனித மனத்தின் அலசலே :)
கலக்கல் நண்பரே !
அருமையான சிந்தனை !
மீண்டும் வருவான் பனித்துளி
@நன்றி சங்கர்! :)
நல்லா இருக்குங்க...
என்ன சொல்ல .....ரொம்ப...முதன்மையாய் கிண்டல்கள்...திரும்ப திரும்ப .....எனக்கு மனசிலாகல.
கலக்கல் பயணம் தான் தோற்க்கும்,எதுனால பூமி பந்தை ஏதாச்சும் சொல்லிட்டு முடிச்சுட்டு எப்படியோ போய் எங்கோ இரக்சியமா வெண்பா, ஆசிரியப்பா எல்லாம் எழுதனும்
கொட்டும் சர்பமென அழகா எழுதி கிழிய வெச்சி ரொம்ப அழகா எழுதி இருக்கிங்க!
@இறவு பறவை
நன்றி :)
@Anony
Dear Anomy.. மனதின் பேயாட்டமே நமது கவிதைகளுக்கான கருபொருள்.. மேலே Descriptionla படிக்கலயா.. படிச்சிட்டு திலைத்தலே கவிதைக்களுக்கான வேலை...
(அப்புறம் எழுதன எனக்கே புரியல.. உங்களுக்கு எப்படி புரியபோகுது :P)
@ஹேமா
15 நாட்கள் கழித்துவந்து கன்னாபின்னான்னு பாராட்டபோகும் தோழி ஹேமாக்கு நன்றி :)
அருமை நண்பா.. அற்புத வாசிப்பானுபவம்.
@நர்சிம்
கவிதைக்கு முதல் வரவு, நன்றி நண்பா :)
அன்பு அசோக்,
முதன் முறையாக உங்கள் பதிவில் கால் இல்லை கை அதுவும் இல்லை கண் வைக்கிறேன்.
மனசோடு ஒப்பிவிடுகிறது, உங்கள் கவிதைக்க்கான வடிவம். மணற்கடிகை மாதிரி அப்படி ஒரு கவர்ச்சி அதன் வடிவத்தில். இடைஇடையே மின்னி மறையும் நகையுணர்வு அழகு, உங்கள் பின்னூட்டங்களில் தெறிக்கும் இது போன்ற ஹூமர் சென்ஸ்...
இழைத்து இழைத்து செய்கிறீர்கள், உங்கள் காதல் கவிதைகளை, அதிலும் கண்டு கலந்து கற்க வா... இரண்டும் திரும்ப காதலிக்கச் சொல்கிறது. சில கவிதைகளில் தொடர்பு இல்லாமல் இருப்பதாக பட்டாலும் கயாஸ் தியரி போல ஏதோ தொடர்பு இருப்பதாகவும் படுகிறது.
உங்கள் அன்புக்கு பதிலாய் என் அன்பும், வாழ்த்தும்
ராகவன்
இரண்டாவ்து முறை வருகிறீர்கள்.
நன்றி ராகவன், வார்த்தைகளுக்கும் ஆழ்ந்த அவதானிப்புக்கும்
உலகில் ஒவ்வொன்றுக்கும் தொடர்பு இருக்கிறது... அதன் சூட்சமம்தான் எளிதில் பிடிபடுவதில்லை :)
மொழியில் "இருமல்" பயணம்தான் கன்னாபின்னான்னு அடிக்கும் ஒவ்வொன்றுக்கும் கயாஸ் தியரி ஓடிவிடுகிறது.
அற்புத அவதானிப்புக்கும் கவிதைகளில் தொடர்பு இருப்பதாகவும் படுகிறது. முதன்மையாய் எழுதலயே ஏன்..?
உண்மைதான், எனக்கு எழுத உள்ளேன் இனி ஏதாச்சும் சொல்லிட்டு கவிதைகளுக்கான கருபொருள்.. கண்டு கலந்து கற்க இழைத்து வருவான் ஜாஸ்தியாகி விட்ட அதிமுக்கியமாகி விட்ட நண்பர்களோடு
@அனானனி
நீங்க என்ன ஜ்யோவோட ப்ரெண்டா? ;)
நல்ல பதிவு ....
அருமையான் கவிதை...
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குங்க....பிடிச்சிருக்குங்க...
!!!உங்கள் தளத்திற்கு புதியவர் என்று நினைக்கிறேன்...
வசதி கிடைக்கும் போது நம்ம பக்கமும் வாங்க>>>
உங்க பயணம் என்னை எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது, ஏதேதோ பேசுகிறது. ரொம்ப நல்லா இருக்குங்க அசோக் :)
@vidivelli
முதல் வருகைக்கு கருத்துக்கும் நன்றி, கண்டிப்பா வர்றேன் :)
@அவனி அரவிந்தன்
அப்படியா, மிகவும் நன்றி அரவிந்தன்.. :)
நல்ல அருமையான கவிதை. முத்ன் முதலில் கால் இல்லை கை , கண் எடுது வைத்திருக்கேன். அப்படியே எனக்கும் இந்த வரி பிடித்ததினால் அதையே நானும் கட் & பேஸ்ட்.
வாங்க் அசோக் உங்க கவிதை நடையாய் வந்து போங்க. மீண்டும் வருகிறேன்.
@viji's kitchen
Thanksunga viji :)
//D.R.அஷோக் ... @ஹேமா
15 நாட்கள் கழித்துவந்து கன்னாபின்னான்னு பாராட்டபோகும் தோழி ஹேமாக்கு நன்றி //
அடக் கடவுளே இப்பத்தானே பாத்தேன்.இந்தக் கவிதைக்கு வேற கன்னாபின்னானு பாராட்டாம்.
எனக்குத்தான் உதைப்பாங்க.
உங்களுக்கில்ல அஷோக்.
அஷோக் ...கவிதை நேசனின் பாதிப்பாயிருக்குமோ !ஒவ்வொரு பந்தியிலும் பயணித்தலின் பாதை வெவ்வேறாய்.
தொடக்க பந்தியில்
ஒரு மொழியின் பெயர்ப்பு.
அடுத்து - அடுத்து -அடுத்து
மனம் - துரத்தும் நாய்
நாயாய் துரத்தும் - மனம்
கனம் தோறும் - வேடிக்கை
குறையும் - மனம்
வனம் தேவையற்று
இன்னும் அடுத்த பந்தியில் வியர்வையின் வித்தியாசம்.
என்றாலும் கவிதையின் வார்த்தைக் கோர்ப்புகள் அழகுதான் !
ஹேமா :)
Post a Comment