Sunday, April 25, 2010

இதய கூட்டுக்குள்ளிருந்து கலைத்து போட்ட வார்த்தைகள்




இதய கூட்டுக்குள்ளிருந்து கலைத்து போட்ட வார்த்தைகள்
இயந்திரத்தனமாய் வாழ்க்கை மாறுகையில்
கவிதை மறைகிறது வேறுமனம் வெறுமையாய்
சில்லரைகளின் முன் அய்யராவது ஆச்சாரியாவது
அபஸ்வரங்கள் மட்டுமல்ல கவிமனமும் காணாமல்தான் போகிறது
அதை உடைத்து வந்து உட்கார்ந்தாலும் வாழவின்
ஆதாரதேவைகள் அடித்து ஓடவைக்கிறது
இறைவா! அடுத்த ஜென்மத்திலாவது ஆரம்பத்திலேயே
எல்லாவற்றையும் கொடுத்துவிடு
சொகுசாய் உட்கார்ந்துக்கொண்டு
ஏழைகளை பற்றியும் ஏகாதிபத்தியத்தையும்
Atleast மாடியில் வடாம் போட்டதையும்
சியல்லோ காரை விற்றுவிட்டதையும்
பற்றியாவது எழுதி தொலைக்கிறேன்


காதலியும் மனைவியும்
பொய் சொன்னேன் நம்பினாள்
ஒருநாள் உண்மையை சொன்னேன்..
’ஏய்! நீ பொய் சொல்ற’ என்றாள் காதலி

செத்து தொலைக்கிறேன் என்றேன்
’மொதல்ல இன்சுரன்ஸ் போடு’ என்றாள் மனைவி

காதலியையும் மனைவியையும் சமாளிக்க
இருவரையும் அன்பே என்றே அழையுங்கள்
அப்போதுதான் பெயர்மாற்றி
உளறி மாட்டிக்கொள்ளமாட்டீர்.


ரிலாக்ஸ் ப்ளிஸ்
இராகவேந்திரர் ஷிரிடி ரமணர்
இப்ப ஜக்கி - யாரை வேண்டினால்?
துரத்தி வரும் இந்த தெரு நாயிடமிருந்து தப்பிப்பது!

தெளிவு என்பது
குழப்பங்களின் முடிவா?
குழப்பங்களின் தொடக்கமா?

24 comments:

AkashSankar said...

அருமையான பதிவு.... முக்கியமாக காதலியும் மனைவியும் பதிவு மிக அருமை....

Dr.Rudhran said...

காசு தேடும்போது மட்டுமல்ல, கிடைத்த பின்னரும் கவிமானம் காணாது போய்விடுவதுண்டு.
நன்றாக வந்திருக்கிறது, வாழ்த்துக்கள்.

Santhappanசாந்தப்பன் said...

அட்டகாசம்!

அருமை!


பைரவரை வேண்ட வேண்டும்!

மதுரை சரவணன் said...

நல்ல ஆலோசனை ... அன்பே..வாழ்த்துக்கள்

Prasanna said...

சூப்பர் :)

பத்மா said...

தெளிவு என்பது
குழப்பங்களின் முடிவா?
குழப்பங்களின் தொடக்கமா?

think பண்ண ஆரம்பிச்சுடீங்க
:))

பா.ராஜாராம் said...

வாங்க மகன்ஸ்.. :-)

பேரன் சற்று வளர்ந்துட்டான் போல.விவேகானந்தர் போஸ்,சூப்பர்டா பேராண்டி! :-))

கவிதை குறித்துதானே?

டச் விட்டுப் போனது தெரிகிறது...

மீண்டும் கவிதையில் பார்க்கிறேனே..இது போதும்.

சந்தோசம். :-)

welcome back! :-)

அகநாழிகை said...

:)
முதல் கவிதை பிடித்திருக்கிறது.

ஹேமா said...

நானும் சொல்ல நினச்சேன்.லோகி வளர்ந்திருக்கார்.குழப்படி முகத்தில அப்பிடியே தெரிது !

அஷோக் நிறைய யோசிக்கிறீங்கபோல.வயிறு காய்ஞ்ச்சலும் இல்லையேன்னு ஏக்கத்தில கவிதை வரும்.வயிறு நிறைஞ்சாலும் சந்தோஷத்தில
...என்னைப்போல எல்லாருக்கும் நிறையணும்ன்னு ஏக்கத்தோடகூட கவிதை வருமே !

இரண்டாவது கவிதை....
கவனமாத்தான் இருக்கவேணும்.

தயவு செய்து தங்கள் வீட்டுத் தொலைபேசி இலக்கத்தைத் தருவீர்களா தோழரே !

குழம்பிக்கிட்டே இருந்தா ...
எப்போதான் தெளியிறது !

Ashok D said...

@shankar
:)

@Dr.ருத்ரன்
:) நன்றி சார், ஜெயகாந்தன் மீட்டீங்ன்னா என்னையும் கூப்பிடுங்க ...

Sai Ram said...

தெளிவு என்பது, 'தெளிவு என்பது இல்லை,' என தெளிந்து போவதில் தொடங்குகிறது.

க.பாலாசி said...

//சொகுசாய் உட்கார்ந்துக்கொண்டு
ஏழைகளை பற்றியும் ஏகாதிபத்தியத்தையும்
Atleast மாடியில் வடாம் போட்டதையும்
சியல்லோ காரை விற்றுவிட்டதையும்
பற்றியாவது எழுதி தொலைக்கிறேன்//

அட... அருமையான கோபம்...

//இருவரையும் அன்பே என்றே அழையுங்கள்
அப்போதுதான் பெயர்மாற்றி
உளறி மாட்டிக்கொள்ளமாட்டீர்.//

ஆகா.. கண்ண தெறந்திட்டீங்க...

கடைசியொன்று... ம்ம்ம்... க்ளாஸ்...

Ashok D said...

@sairam
right answer.. அடிச்சீங்க சிக்ஸர்

Ashok D said...

@பிள்ளையாண்டான்
வேண்டவேண்டுமா ஓட வேண்டுமா? :)

@மதுரசரவணன்
நல்ல ஆலோசனைங்களா? நன்றிங்க ;)

@பிரசன்னா
:)

@பத்மா
Hello think பண்ணவைக்கறோங்க :), சாய் பாருங்க கரெக்டா பதில் சொல்லியிருக்கிறார்

@சித்தப்ஸ்

//பேரன் சற்று வளர்ந்துட்டான் போல//
பேரன் வளர்ந்துட்டான் கைகால வெச்சிட்டு சும்மாஇருன்னு சொல்றது புரியுது சித்தப்ஸ்... ஆனா இந்த காதல் என்பத தடுக்கமுடியறதில்ல (சும்மா லொள்ளுதான் சித்தப்ஸ்)

//விவேகானந்தர் போஸ்,சூப்பர்டா பேராண்டி//
அவன் கைல லாங் சைஸ் பென்சில் வைச்சுருக்கான் கவனிக்கலயா.. அவன் ’வேட்டைக்காரனா’ :)))) சொல்லறான் (நானே அப்டிதான் சொல்லிட்டுயிருக்கிறன்)

//டச் விட்டுப் போனது தெரிகிறது//
இல்லன்னாலும் நாங்க சூப்பரா கவித எழுதிடுவேனாக்கும், சும்மா அடிச்சுவிடறதுதான் சித்தப்ஸ் :)))

@வாசு
//முதல் கவிதை பிடித்திருக்கிறது//
அப்ப நம்ம எழுதறது கவிதன்னு சொல்ல வர்றீங்க, ரொம்ப பெரிய மனசு வாசு உங்களுக்கு :)

@ஹேமா
//லோகி வளர்ந்திருக்கார்//
என்ன மரியாதை, நமக்கு தான் வரமாட்டேங்குது :(

//குழப்படி முகத்தில அப்பிடியே தெரிது //
கண்ணாடிய மாத்து ஹேமா, அவன் ஜாலியா தான் இருக்கான் :)

//வயிறு காய்ஞ்ச்சலும் இல்லையேன்னு ஏக்கத்தில கவிதை வரும்.வயிறு நிறைஞ்சாலும் சந்தோஷத்தில//

ஓ... அப்படியா ஹேமா.. சரிங்க

//தயவு செய்து தங்கள் வீட்டுத் தொலைபேசி இலக்கத்தைத் தருவீர்களா தோழரே !//
வேனும்னா அட்ரஸ் தர்றேனே டீட்டெய்லா ஒரு கடிதம் எழுதுங்களேன்... அப்பவாவது எனக்கு சுதந்திரம் கிடைக்குதான்னு பார்ப்போம்

//குழம்பிக்கிட்டே இருந்தா ...
எப்போதான் தெளியிறது //
பத்மா அக்காவுக்கு சொன்னது தான் உங்களுக்கும், நன்றிங்க ஹேமா

@க.பாலாசி
//அட... அருமையான கோபம்...//
அது கோபமா.. நாட்ல நடக்கறதுதானே

//ஆகா.. கண்ண தெறந்திட்டீங்க...//
நிறைய பேர் கண்ண தெறந்துட்டேன்னு நினைக்கறேன் :)))

//கடைசியொன்று... ம்ம்ம்... க்ளாஸ்...//
கவிதை ஆழந்து படித்து பின்னூட்டமிட்டதற்கு ரொம்ப நன்றி பாலாசி, இதையே தான் உங்ககிட்ட தொடர்ந்து நான் எதிர்பாக்கறன் :)

M.Rishan Shareef said...

நல்ல கவிதை. அழகான வரிகள் !

Ashok D said...

@ரிஷான்
நன்றி ரிஷான் :)

விநாயக முருகன் said...

காதலியையும் மனைவியையும் சமாளிக்க
இருவரையும் அன்பே என்றே அழையுங்கள்
அப்போதுதான் பெயர்மாற்றி
உளறி மாட்டிக்கொள்ளமாட்டீர்

மனைவி பெயரும் சின்ன வீடு பெயரும் ஒரே பெயராக இருந்தால் தூக்கத்தில் உளறினாலும் பிரச்சினை இருக்காது

Ashok D said...

@விநாயக்
டயர்டாகி தூங்கனா புலம்ப மாட்டோம் ;)

Radhakrishnan said...

முதல் கவிதையில் இருக்கும் ஏக்கம் இக்கரைக்கு அக்கரை பச்சை தான். அன்பே பொது வார்த்தை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அசோக்.,இடுகைகள் பார்த்து நாளாச்சு..வேலை அதிகமா?

Ashok D said...

@v.Radhakrishnan
:)

Ashok D said...

@T.V.R
கடுமையான வேலை பளுதான் சார்.. உங்களுக்காக ஒன்னு போட்டுட்டேன் :)

பிரவின்ஸ்கா said...

// இதய கூட்டுக்குள்ளிருந்து கலைத்து போட்ட வார்த்தைகள் //

நல்லாருக்கு .

Ashok D said...

பிரவின்ஸ்கா நன்றி :)