
நீ பேசி முடித்தபின்னும்
நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தேன் உன்னிடம்
இரவுகளின் வெளிச்சத்தில் மூழ்கி புரண்டு கொண்டிருந்தேன்
அடித்த மூன்று லார்ஜ்களும் பேச தொடங்கும்
முன்பே காணாமல் போயிருந்தன
எப்போது தூங்கினேனென்று தெரியவில்லை
கனவு வராத ஆழ்ந்த தூக்கம் - சொற்பமான பொழுதில்
சட்டென விடிந்தது - ஒருவேளை கருவானம்
வீழ்கையில் தூங்க ஆரம்பித்தேனோ..?
இனி வேலை வேலை என அலுவல்கள்
உன் நினைவுகளை விழுங்கி செல்லும்
மறுபடியும் இரவு வருகையில் உன் நினைவு வரும்
நீங்காத இதம்தரும் பொழுதுகள்
இயங்க வைப்பதும் இயக்கிவைப்பதும் காதல்தான்
புதிதாய் மனம் மலர
புத்துணர்வாய் உடல் மலர
காதல்
அல்லது
தவம்
தேவைதானோ என் அன்பே?
எல்லாம் கொடுத்த உனக்கான
பூச்செண்டு!
25 comments:
//இயங்க வைப்பதும் இயக்கிவைப்பதும் காதல்தான்//
சொன்னா யார் நம்புறா!
//இயங்க வைப்பதும் இயக்கிவைப்பதும் காதல்தான்
புதிதாய் மனம் மலர
புத்துணர்வாய் உடல் மலர
காதல் //
true lines. love can make and distroy. super
பூச்செண்டு கிடைத்தது,மகன்ஸ்.(எல்லாம் கொடுத்த உனக்கான
பூச்செண்டு...)
பார்ம்க்கு வந்துகிட்டிருக்கீங்க...
//காதல்
அல்லது
தவம்
தேவைதானோ என் அன்பே?//
ஆம் அன்பே,
எல்லாம் கொடுத்த என் பூச்செண்டே. :-)
ம்ம்ம்....!
அஷோக் அழகாயிருக்கு ரோஸ் !
காதல்
அல்லது
தவம்
தேவைதானோ என் அன்பே?
சந்தேகம் உண்டா?
அப்படி போடு....
//கனவு வராத ஆழ்ந்த தூக்கம் - சொற்பமான பொழுதில்
சட்டென விடிந்தது - ஒருவேளை கருவானம்
வீழ்கையில் தூங்க ஆரம்பித்தேனோ..?
மறுபடியும் இரவு வருகையில் உன் நினைவு வரும்
நீங்காத இதம்தரும் பொழுதுகள்
இயங்க வைப்பதும் இயக்கிவைப்பதும் காதல்தான்//
அருமையான கவிதை... அழகான இயல்பான வார்த்தை பிரயோகம்.... அழகு...
ஆனால் அங்கே "மூன்று லார்ஜ் அடித்தும்" என்ற வார்த்தையை தவிர்த்திருக்கலாமோ என்பது என் தாழ்மையான கருத்து....
பூச்செண்டு மணக்கிறது...
இயங்க வைப்பதும் இயக்கிவைப்பதும் காதல்தான்//
:) நல்ல காதல் இயக்கம்..
வால்பையன் said...
//இயங்க வைப்பதும் இயக்கிவைப்பதும் காதல்தான்//
சொன்னா யார் நம்புறா!//
நான் நம்புறேன்..... உண்மைத்தான்
<<>>
தவம் பற்றி தெரியாது. காதல் அத்தகைய டானிக் தான்! :)
@வால்
சொன்னாதான் வர்றீங்க
@மதுரை சரவணன்
loveவ வெச்சி (மனித)காலத்தையே ஓட்டிடலாம்ங்க :)
@சித்தப்ஸ்
கவிதயே.. மாத்திபுட்டீங்களே... அதான் எங்க சித்த்பஸ் :)
சித்தப்ஸ்... I love you
@ஹேமா
கடை கடையா ஏறிப்பார்த்து வாங்கியது ஹேமா :)
@பத்மா
No more சந்தேகங்கண்ணா :)
@ராசராசசோழன்
நன்றிங்க சோழரே :)
@காய்த்ரி
நன்றிங்க.. இனிமேல் அதுமாதிரி விஷயெங்களை தவிர்க்க பார்க்கிறேன்...
(actually கவிதையில் இருக்கும் அவன் நேர்மையாக தன்னை பதிந்து கொள்கிறான் அவன் காதலியிடம்)
அப்புறம் ஆணுக்கு பெண் என படுபவள் வாழ்க்கையென்றால், கேளிக்கை என்பது மதுவை சாரும். நன்றி உங்கள் ஆழ்ந்த பார்வைக்கு.
@Sivaji Shankar
நன்றி சிவாஜி சௌக்கியமா
@சி.கருணாகரசு
என்னங்க ஆளையே காணொம்.. ரொம்ப பிஸியா ?
@சாய்ராம்
தவமும் கத்துக்குங்க காதலவிட ரொம்ப ஈஸி ;)
இயங்க வைப்பதும் இயக்கிவைப்பதும் காதல்தான்
புதிதாய் மனம் மலர
புத்துணர்வாய் உடல் மலர
காதல்
அல்லது
தவம்
தேவைதானோ என் அன்பே?//
மனம் திறந்த வார்த்தைகள் அஷோக்... அருமை
மிகவும் நன்றாக இருக்கிறது தோழரே...
@மனம் திறந்த நன்றிகள்
தேனம்மை & கமலேஷ் :)
கமலேஷ் உடம்பு சுகமில்லை என அறிந்தேன்.. dont worry எல்லாம் சரியாகிவிடும்.. happy life :)
மனித குலம் தழைப்பதற்கான சூட்சுமக் கொடி - காதல். அதுக்கு ஆளாளுக்கு நல்லா தண்ணி ஊத்துறீங்க இது போன்ற கவிதைகளால் :) நல்லாயிருக்குங்க
//இயங்க வைப்பதும் இயக்கிவைப்பதும் காதல்தான்//
கடவுளுக்கு இணையாக காதலை உயர்த்தியிருப்பது அருமை...
நல்லாயிருக்குங்க..!
-
DREAMER
இதை அப்பிடியே விளம்பர கவிதையா எழுதி அனுப்பினா.."விஜய் மல்லையா "துட்டு கொடுப்பாரு.
@அரவிந்தன்
//சூட்சுமக் கொடி - காதல்//
அருமை அரவிந்த், நல்லாவே தண்ணீ ஊத்துவோம் :)
@Dreamer
கடவுளும் காதலும் ஒன்னுதானே? ;)
//இயங்க வைப்பதும் இயக்கிவைப்பதும் காதல்தான்///
நிதர்சனம்...
வரிகள் வலிமை... நல்லாயிருக்கு..
பிரமாதம்.
//இயங்க வைப்பதும் இயக்கிவைப்பதும் காதல்தான்
புதிதாய் மனம் மலர
புத்துணர்வாய் உடல் மலர
காதல்
அல்லது
தவம்
தேவைதானோ என் அன்பே?
எல்லாம் கொடுத்த உனக்கான
பூச்செண்டு!//
ஆமா... இந்த விசயம் வீட்டுக்காரம்மாவுக்கு தெரியுமா??
என்னமோ போங்க.... அசத்தல்.....
@பாலாசி
அவங்க வேற இவங்க வேற... என்னாவொன்னு இருவரில் ஒருவர் மட்டும் ப்ளாக் படிக்கறதுதான் நான் செஞ்ச புண்ணியம் ஹிஹி...
@ஜெரி
கவிதைக்கு துட்டு கொடுப்பாங்களா? ஓ விஜய் மல்லையா தமிழர் அல்லவே.. கொடுத்தாலும் கொடுப்பார்ன்னு தான் நினைக்கறன் :)
@நன்றி அஹமது இர்ஷாத்
first visit? :)
@வாங்க ராதாகிருஷ்ணன் :)
அருமை!
(மூன்றாவது கவிதையில் 'துரத்தும்' என்பது 'துறத்தும்' என்று வந்துள்ளது, கவனித்தீர்களா?)
@K.B.Janarthanan
நீங்கள் கவிதை மாத்தி கமெண்டுபோட்டீங்க கவனிச்சீங்களா.. :)
Post a Comment