
நீ பேசி முடித்தபின்னும்
நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தேன் உன்னிடம்
இரவுகளின் வெளிச்சத்தில் மூழ்கி புரண்டு கொண்டிருந்தேன்
அடித்த மூன்று லார்ஜ்களும் பேச தொடங்கும்
முன்பே காணாமல் போயிருந்தன
எப்போது தூங்கினேனென்று தெரியவில்லை
கனவு வராத ஆழ்ந்த தூக்கம் - சொற்பமான பொழுதில்
சட்டென விடிந்தது - ஒருவேளை கருவானம்
வீழ்கையில் தூங்க ஆரம்பித்தேனோ..?
இனி வேலை வேலை என அலுவல்கள்
உன் நினைவுகளை விழுங்கி செல்லும்
மறுபடியும் இரவு வருகையில் உன் நினைவு வரும்
நீங்காத இதம்தரும் பொழுதுகள்
இயங்க வைப்பதும் இயக்கிவைப்பதும் காதல்தான்
புதிதாய் மனம் மலர
புத்துணர்வாய் உடல் மலர
காதல்
அல்லது
தவம்
தேவைதானோ என் அன்பே?
எல்லாம் கொடுத்த உனக்கான
பூச்செண்டு!