Friday, February 18, 2011

நெருக்கமான பின்பு படிக்க




இரவின் தூக்கத்தில்
விழித்திருக்கிறது நெடிய வானம்
பிரித்து பார்க்கையில்
வாழ்விலில்லை சுகந்தம்

வனமான வாழ்வு
சொல்லும் நிறைவுறாத தேடல்
தேடல் என்பதும்
நிறைவுறாத வானம்

வாழ்வே ஒரு கொடும் கனவு
புணர்தலும்
புரிதலும்
செறிவுறாத
சாலை நோக்கி நகரும்
தேகம்...

உயிரெடுப்பதும்
உடல் சுருங்குவதும்
கானக்கிடைக்காத தங்கம்
தகரமும் தங்கமும்
உயிர் உடைத்த
EQUIVALENT

புரிதலும்
சிதறுதலும்
ஒன்றே

14 comments:

Kanchana Radhakrishnan said...

Nice

சந்தான சங்கர் said...

தகனத்திற்கு பின்னும்
துளிர்விட தூண்டும்
வாழ்வியல்..
புரியக்கிடைத்து
சிதறும் தேகம்.

அருமை நண்பரே.

ப்ரியமுடன் வசந்த் said...

//இரவின் தூக்கத்தில்
விழித்திருக்கிறது நெடிய வானம்
பிரித்து பார்க்கையில்
வாழ்விலில்லை சுகந்தம்//

மிகவும் ரசித்தேன்

இதற்குப்பிறகான வரிகளுக்கு செல்ல நேரம்பிடித்தது அஷோக்ண்ணா

அன்பை கொலை செய்து வாழ்ந்தால் இப்படித்தான் தோன்றுமாம் நீங்க யாருடைய அன்பை கொன்றீர்கள்?

ச.முத்துவேல் said...

Really Nice!

பத்மா said...

true

ஹேமா said...

அஷோக்கு...ரொம்ப நாளைக்கப்புறம் பதிவு பாத்து வந்தேன்.சந்தோஷமா இருக்கணும் !

Ashok D said...

@காஞ்சனா
நன்றிங்க

@ச சங்கர்
அட இதுவும் நல்லாயிருக்குங்க சங்கர்.. :)

@வசந்த்
இரண்டும் துருவங்களே :)

@ச.முத்துவேல்
தேங்ஸ்பா

@பத்மா
true marieதான் உங்களுக்கு பிடிக்குங்கலா.. சரிங்க

@ஹேமா
என் சுவிஸ் அக்கௌண்ட்ல ஒரு 200 கோடிய போட்டுங்க.. சந்தோஷம் தானா வந்துட போகுது :) (கூட சிபிஐயும் வருமே)

@D.R.Ashok
சீரியஸா எழுதிட்டு .. காமடி பண்ணற...?
பதில்: அது வேறு நிலை.. இது வேறு நிலை

க.பாலாசி said...

ரைட்டுங்ணா...

சாய் ராம் said...

/////////புரிதலும்
சிதறுதலும்
ஒன்றே///////

வனமும் வானமும் சேர்ந்திருக்கும் புள்ளியில் இருக்கிறது ஒரு சூட்சம கவிதை. அதன் நிறங்களில் மகிழ்ச்சி மட்டும் இல்லை.

Thenammai Lakshmanan said...

தங்கமும் தகரமும் ஒண்ணுதானே..:)) மெட்டல்ஸ்..

பா.ராஜாராம் said...

ஜிவ்வுன்னு ஒரு தத்துவ பயணம்!

நல்லாருக்கு மகன்ஸ். :-)

Ashok D said...

@க.பாலாசி
தேங்ஸ்ங்ணா :)

@சாய்ராம்
சரிதான் சாய் :)

@தேனம்மை
உட்டா கமாடிட்டுன்னு சொல்வீங்க போல.. எனக்கு உங்க லொள்ளு புடிச்சிருக்குஜி :)

@சித்தப்ஸ்
நன்றி தல :)

Unknown said...

அருமை.....!

Unknown said...

கானக்கிடைக்காத/காணக்கிடைக்காத ? கவிதை சூப்பரு.