Thursday, May 5, 2011

பதிவர்களும் சில மேட்டர்களும்
இலக்கியவாதிகள்: comments are closed, இவர்கள் டீவியில் தலை காட்டுவார்கள்... அப்புறம் டீவியையே விமர்சிப்பார்கள். டீவியை பார்த்ததே இல்லையென சத்தியம் செய்வார்கள். உலகின் தலை சிறந்த கவிதையென்று ஒரு பெரிய சிறுகதையை கொடுத்து கான்சல் பண்ணுவார்கள். நான் அவர சொல்லல.. சும்மா பொதுவாதான் சொன்னேன். யாருக்கும் கமெண்ட் இட மாட்டார்கள்.

அடுத்த நிலை இலக்கியவாதிகள்: இவர்களின் comments box ஓப்பனில் இருக்கும் ஆனால் இவர்கள் தப்பி தவறி கூட மற்றவர்களுக்கு கமெண்ட் போட மாட்டாங்க... (அ சொல்லல)

பதிவர்களில் பிரபலம்: இவர்கள் ரொம்ப occasionalla மத்தவளுக்கு கமெண்டிடுவார்கள். அதுவும் - ஸ்மைலி ஆங் சூப்பர் - இத்தியாதிகள்.... 6 மாதத்திற்கு ஒரு முறை கமெண்டிடுவார்கள்.(நர்சிம்ம சொல்லல)

ரொம்ப பிரபல பதிவர்கள்: இவர்களும் யாருக்கும் கமெண்ட் போட மாட்டார்கள்.. தெருவில் நாம மரியாதைக்கு பேச முற்பட்டால் பெரிய லாடு லபக்கு தாஸ்ஸாட்டும் கிளம்பிவிடுவார்கள்... சில பிரபலங்கள் மதிச்சு பேசுவாங்கப்பா(அது அதிஷா தான்)

தைய்யா தக்கா பதிவர்கள்: இவர்கள் ஒரு குருப்பா அலைவார்கள்.. ஏமாந்த எவனாவது சாதரணமா எதாவது சொன்னாலும் ஊதிபெரிசு படுத்துவார்கள்... இவங்க குருப்பல பெரிய லெவல்ல கோல்மால் நடந்த பிறகு... I humbly request ன்னு பம்மாத்துவார்கள்.

புதிதாய் பிரபலமாகும் பதிவர்கள்: இவர்கள் ப்ளாக்ல கமெண்டு போட மாட்டார்கள்... ஆனால் சேட்டிங்கிள் வந்து பிச்சிட்டிங்க பிசஞ்ட்டீங்கனு பகருவார்கள்... கமெண்டு போட டைம்மில்ல என்பார்கள்.


ரவுடி பதிவர்கள்:
கடவுள் என்பன் யார்?. அவன் என்ன எங்க வூட்ல மாவாட்டினா, களை பறித்தானா என்று சவுண்டுவுடுவார்கள்.. அப்புறம் ஹோட்டல் வெச்சிட்டு செட்டில் ஆகிடுவாங்க... யார் அந்த வால் பதிவர்ன்னு கேக்ககூடாது.

மிகவும் பிஸியான பதிவர்கள்: எப்போதும் பிஸியா டீவிட்டர், பேஸ்புக், பஸ் என்று எப்போதும் பிஸியா இருப்பாங்க... அடிக்கடி போட்டோவ மாத்துவாங்க... கவித எழுதுவாங்க..(வாசு தண்டோரா என நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல.)

சுவையான பதிவர்கள்: ரொம்ப பிரமாதமா எழுதகூடியவங்க ஆனால் பாருங்க எழுதாமல் பண்ண வைச்சுடுது இயற்கை. அதுலயும் R.P.ராஜநாயஹமெல்லாம் தொடர்ந்து எழுதியிருந்தால் பெரிய இலக்கியவாதிங்க பிளாக்கே ஆட்டம் கண்டுபோயிருக்கும். இதுல லேடிஸ் காலேஜ் வாசல்ல போய் நிக்கற நேரத்தல ஒரு பதிவு எழுதலாம் இருந்தாலும் நேரமில்லைன்னு பதிவு எழுதறது இல்ல இந்த ஆஞ்சனேயா... சே சே அது அனுஜன்யா இல்லங்க. பட்டர்பிளை சூர்யாவின் உலக சினிமா காத்து வாங்குதுங்க. சுவையான பதிவர்கள் லிஸ்ட்ல என் பேர சேர்க்க சொல்லி நீங்கல்லாம் கத்தறது கதறது எல்லாம் எனக்கு கேக்குதுங்க. விடுங்க எனக்கு தற்புகழ்ச்சியெல்லாம் புடிக்காது.


சில கவிஞர்கள் பதிவு எழுதிட்டு கமெண்டு போடலன்னா உதைப்பேன்னு மிரட்டுவாங்க... அவங்க பேரா...? அட அவங்க என் நண்பருங்க.. அதனால உட்டுருவோம் அவங்க பேர.

போரடிச்சுடுச்சு...அட எனக்குதாங்க.. பிறகு வேறேதாவது தலைப்புல பாக்கலாம்.. பை.

23 comments:

பத்மா said...

:):)

D.R.Ashok said...

அடப்பாவிகளா... இதுவரைக்கும் hitstats blog visits 67 ன்னு காட்டுது.. அதுல ஒருத்தர் ம்ட்டும் கமெண்டா... அஷோக்கு நீ ஜாஸ்தி ஒர்க் பண்ணும் போல...

D.R.Ashok said...

ப்ளாக்கர்களின் குணங்களை பின்னூட்டங்களிலும் கூறலாம் நண்பர்களே.. keep flowing...

Nesan said...

பிளாக்கரிள் விளாசும் வித்தை அரசியல் இன்னும் புரியாமல் புதியவர்கள் படும்பாடு சொல்லி மாளாது என்றாளும் பிரபல்யங்கள் கடைக்கண் காட்டினால் மற்றவர்களும் வெளிவருவார்கள்!
இதை நாஞ்சில் மனோ!, நிரூபன் சரியாகச் செய்கிறார்கள்!
உங்களைப் போல் உள்குத்துப் பதிவு போடனும் விரைவில்!

Prabu M said...

:-)

இவ்ளோ மேட்டர் இருக்கா!

D.R.Ashok said...

@பத்மா
நன்றிங்ணா... :)

@Nesan
இதுல உள்குத்து இல்லன்னு சொன்னா நீங்க நம்பவாபோறீங்க... அது just ’நகை’ச்சுவை பதிவு... ’நகை’ அட்சய திருதிக்குதான்பா ;)

@Prabu M
இன்னும் எவ்வளவோ இருக்கு... ஆனா நேரம்தான் இல்ல பிரபு :)

யுவகிருஷ்ணா said...

ரொம்ப மொக்கைங்க :-(

நர்சிம் போட்டோவை குறிப்பா போட்டதுக்கு காரணம், ஹிட்ஸ் தேத்துறதுக்கோன்னு சந்தேகம் வருது...

D.R.Ashok said...

hits தேத்தறதுக்கு நர்சிம் படம் போடுவாங்களா... இல்ல நமிதா படம் போடுவாங்களா... சரியா சொல்லுங்க லக்கி

ஏம்பா நர்சிம் போட்டோவெல்லாம் போட்ருக்கனே வந்து கமெண்டு போடக்கூடாதா?

பா.ராஜாராம் said...

இதில் பா. ராஜாராம் என்பவன் எங்கிருக்கிறான் பரம பிதா? # இதில் அவன் இல்லை# சொல்லாட்டி கொண்டே புடுவேன்

D.R.Ashok said...

@சித்தப்ஸ்
நீங்க பதிவர் இல்ல.. அதுக்கும் மேல
பரம பிதானே வெச்சுக்கலாம் :)

(பிதான்னா சித்தப்ஸ் தானே)

D.R.Ashok said...

@கேவிஆர்

காணாமல் போன ப்ளாகை காத்து ரட்சித்ததற்கு நன்றி :)

வால்பையன் said...

இந்தா வந்துகிட்டே இருக்கேன்!

வால்பையன் said...

இரவானா கச்சேரிக்கு பிறகு மட்டுமே ஞாபகம் வந்து போன் செய்யும் பதிவர்களை என்னான்னு சொல்றது தல!

D.R.Ashok said...

@வால்

அந்த பிரபல கவிஞர(டாக்டர் MBBS) சொல்லறீங்கLaa ;)

ஹேமா said...

அட...அஷோக்கு இப்பத்தானே பாக்கிறேன்.அலசி அலசி பதிவு போட்டிருக்கீங்க.வளர்ச்சி தெரியுது !

இராஜராஜேஸ்வரி said...

அருமையா அலசி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

D.R.Ashok said...

நன்றி ஹேமா, இராஜராஜேஷ்வரி

Anonymous said...

how to add particular label feed only in google reader

https://docs.google.com/document/d/167ezQpRodFd6Mlsf6u5GqC3w56Sl6_DUJzoRGPVuNJE/edit?hl=en_US

please forward this to others...d..

அம்பாளடியாள் said...

வணக்கம் நான் இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதன்முறையாக
வந்துள்ளேன் .தரமான ஆக்கங்களை வெளியிட்டுவரும் தங்களுக்கு
எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
நன்றி பகிர்வுக்கு.....

D.R.Ashok said...

நன்றி d & அம்பாளடியாள் :)

Poornima said...

I agree :-)

D.R.Ashok said...

@Poornima
:)

Anonymous said...

romba nalaruku nanba!