Saturday, May 23, 2009

நிலவு பார்த்தல் அல்லது நிலவு பாட்டு


வானத்தே பறக்கும்
ஒரு வட்ட நிலா
வென்மை தெறிக்க
ஆடி ஓடும் நிலா
பிள்ளையில்லாமல் நான்
பார்க்கும் சுகந்த நிலா
மைக்ரோ ஓவனில்
வைத்து சுட்ட நிலா
கல்யாண அப்பளம்
போல் பொறித்த நிலா
எத்தனை முறை பார்த்தும்
சலிக்காத நிலா
பால்யத்தின் குல்பியை
ஞாபகபடுத்தும் நிலா
இரவு தூக்கத்தை திருடி
விடியல் ஆதவனை
மறைத்த நிலா


(ஜென் கவிதைகளை எழுத உட்கார்ந்து... சுமாரான பாடல் தான் வந்தது...பின்ன சட்டில இருக்கறதுதானே அகப்பைல வரும்)

7 comments:

கலையரசன் said...

அகப்பைல நல்லாதானே வந்திருக்கு..
அப்படியே, வாங்க நம்ம பக்கம்.
www.kalakalkalai.blogspot.com

sakthi said...

பால்யத்தின் குல்பியை
ஞாபகபடுத்தும் நிலா
இரவு தூக்கத்தை திருடி
விடியல் ஆதவனை
மறைத்த நிலா

அழகு

Ashok D said...

Kalai & Sakthi
Welcome to our studios

யாத்ரா said...

நல்லா இருக்குங்க.

Ashok D said...

வாப்பா.. யாத்ரா பின்நவினத்துவ கவிதைகளா பின்றீங்க...

பிரவின்ஸ்கா said...

ரொம்ப நல்லா இருக்கு

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

Ashok D said...

நன்றி பிரவி