பித்துப் பிடித்து அத்துவானக் காட்டில்
கதறி அழுகிறேன்
பின் மிகுந்த ஓலமிட்டு
காடதிரச் சிரிக்கிறேன்
கையில் பெரிய கோடரி கொண்டு
பெரு மரங்களை வெட்டிச் சாய்க்கிறேன்
யானையின் தும்பிக்கை பிடித்து
தூக்கித் தரையிலடித்துக் கொன்று
என் ஓநாய் பற்களால் பசியாறி
தந்த ஆயுதம் செய்து
குன்றிலமர்கிறேன்
வேட்கை மிகுந்து
காதருகே சீறி வந்த மலைப் பாம்பின்
கழுத்தை பிடித்துச் சுருக்கிட்டு
தடித்த மரக்கிளையில்
ஊஞ்சல் கட்டி
கண்ணயரக் காத்திருக்கிறேன்
நானே காடாக
காடே நானாக
நிலவை ருசிக்க
யத்தனிக்கையில்
நட்சத்திரங்களிலிருந்து
கொட்டும் இரத்த மழை
(உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை)
Subscribe to:
Post Comments (Atom)
61 comments:
/// நானே காடாக
காடே நானாக ///
:)
கவிதைக்கு பரிசு இருக்குன்னா அதுக்குன்னு ஒரு கவிதை எழுதுவீரா நீரு?
அருமை மகனே!
போட்டு தாளிச்சுபுட்டிகளே அப்பனை?அசோக்கு,கொசோக்கு.
கிர்ர்ரர்ர்ர் வாழ்த்துக்கள் மகனே!
அருமையான morbid கவிதை ... ரசித்தேன் ... வெற்றி பெற வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் தல!
morbid கவிதைகள் போல மேலோட்டமாக தெரிந்தாலும் அப்படி ஒன்றும் (சிரமப்)படுத்தவில்லை
நான் முன்னாடியே சொல்லிட்டேன், ரொம்ப நல்ல கவிதை அசோக், வாழ்த்துகள்
உங்கள் உறுபசி போட்டியில் பங்கேற்கும் எனக்கு பயபசியை உண்டு பண்ணிவிட்டது பாஸ்.
கவிதை ரொம்ப சூப்பர்.வாழ்த்துக்கள் டாக்டர்!!!
அசோக்கு.. எல்லோரும் ஏதோ பிட்டை பத்தி பேசுறாங்களே ஆனா எதையும் காணோம்?:)
good one...
வாழ்த்துகள்!!
அருமையான கவிதை நண்பா
ரொம்ப நல்லா இருக்கு
வாழ்த்துக்கள்
/அருமையான morbid கவிதை //
அப்படின்னா என்னா?இதெல்லாம் பண்றியே..உன்னால சரவணபவன்ல் சாப்பிட்டுட்டு காசு கொடுக்காம வரமுடியுமா?
/ பூங்குன்றன்.வே said...
உங்கள் உறுபசி போட்டியில் பங்கேற்கும் எனக்கு பயபசியை உண்டு பண்ணிவிட்டது பாஸ்.
கவிதை ரொம்ப சூப்பர்.வாழ்த்துக்கள் டாக்டர்!!!//
இதுக்கெல்லாம் உடனே மறுப்பு தெரிவிக்கறதிலையா? என்ன கொடுமை டி.ஆர் அஷோக் இது??
நான் டாக்டர் இல்லங்க... நான் ஒரு self employed..
ஒரு விதத்தில் doctor in all subjects ஹிஹிஹி.. திருப்தியா தண்டோரா ஜி
@ கேசவன்.கு
நன்றி கேசவன், எனக்கும் பிடித்தது அது.
@ பா.ராஜாராம்
சித்தப்ஸ், அது இரண்டு மாதத்திற்கு முன் என் குறிப்புகளில் எழுதிவைத்தது just like that எடுத்து தூசிதட்டினேன், நன்றி உங்களின் கிச்ச்ச்ச்ச் வாழ்த்துகளுக்கு
@ நந்தா
நன்றி நந்தா.. ரொம்ப சந்தோஷம் நீங்க வந்ததிற்கு
@ வால்பையன்
நன்றி அருண்
@ என்.விநாயகமுருகன்
அதிகம் படுத்தக்கூடாது என்றுதான் என்னுடைய எண்ணமும்.
@யாத்ரா
நண்பா உன்னை நம்பி கலத்துல இறங்கியிருக்கேன்.. பாப்போம்
@ பூங்குன்றன்.வே
யாத்ரா, மண்குதிரை, பாரா, நேசமி, நந், அனுஜ என்று பெரிய லிஸ்டே இருக்குங்க. நம்ம ஒரு 100குள்ள வர்றதே ஆச்சரியம்தான். அப்புறம் நான் Dr. இல்லைங்க.. பாருங்க தண்டோரா எவ்வளவு டென்ஷன் ஆகிட்டாரு.
@ கேபிள்ஜி
பிட்டுயெல்லாம் பானு தியேட்டர்ல தான் போடுவாங்க ஜி.. :)
@ Karthikeyan G
Thank u young man
@ மண்குதிரை
நிஜமாவா, ரொம்ப நன்றி நண்பா
@தண்டோரா
ஜி.. சரவணா opp உள்ள Mappillai vurundhuல தான் சாப்பிடுவேன். நமக்கு பிடித்தது செட்டிநாடு உணவுவகைகள்
அஷோக் வாழ்த்துக்கள் வெற்றிக்கு.
உங்கள் உணர்வைப் பிழிந்தெடுத்து கடைசிப் பந்தியில் இரத்தாமாய்ச் சிந்திவிட்டீர்கள்.
அதே வலி.
நீயா... நீயா... நீயா... நீயேதானா...?
நடக்கட்டும் நடக்கட்டும்.
நல்லாயிருக்கு. இதை நான் எதிர்பார்க்கலை.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
@ அகநாழிகை பொன்.வாசுதேவன்
இப்பவாவது வழிதெரிஞ்சதே.. நீங்கள் வந்து வாழ்த்து சொன்னது எனக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா.
நீங்களா நீங்களா.. ஆமாம் இது கனவில்ல..
ஆழமான கரு. :)
எத்தனை பேருக்கு எப்படி எப்படியெல்லாம் புரிந்ததோ! "அவரவர் மனநிலைக்கு ஏற்றவாறு வடிவெடுக்கும் கவிதை சிறந்த கவிதையாம்"
வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் :)
@ ஹேமா
வாழ்த்துகளுக்கு நன்றி ஹேமா
@ Sakthiprabha
புரிதலுக்கும் & வா நன்றி ப்ரபா :)
//அகநாழிகை said...
நீயா... நீயா... நீயா... நீயேதானா...?
நடக்கட்டும் நடக்கட்டும்.
நல்லாயிருக்கு. இதை நான் எதிர்பார்க்கலை.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
//
அதேதான். ருத்ர தாண்டவம் ஆடியிருக்கு வரிகள்.
-வித்யா
@வித்யா
நன்றி விதூஷ். உங்கள் கவிதையையும் இன்று தான் படித்தேன்.. nundhaவை ரிப்பீட் போட்டுகுங்க :P
அருமைங்க....
என் மனக்காடுகளில் தந்தமில்லா களிறும்
ரத்தம் தோய்ந்த நட்சத்திரங்களுமாய்
என்னவோ பேசிக்கொண்டிருக்கிறது உங்கள் கவிதை..
@இரவுப்பறவை
நிறைவாய் உள்ளது, நன்றி இரவுப்பறவை.
சுயவதை குறித்த வரிகளின் உக்கிரம்
வென்றெடுக்கட்டும் வெற்றிக் கனி
வெற்றி பெற வாழ்த்துகள் நண்பரே.
நானே காடாக
காடே நானாக//
அறிதலில் காதல்
அறியாதிருந்தால்
வருமோ!
இத்தகு உறுபசி..
அருமைங்க...
வாழ்த்துக்கள்.
@நேசமித்ரன்
//வென்றெடுக்கட்டும் வெற்றிக் கனி//
உள் அடுக்குகளில் ஆசை துளிர்விடுகிறது, எதிர்பார்க்க மனசு யத்தனிக்கிறது. நன்றி நண்பரே!
@நிலாரசிகன்
நன்றி கவிதை நண்பரே
@சந்தான சங்கர்
நன்றிங்க உங்கள் பாராட்டிற்கும் வாழ்த்துகளுக்கும்.
வெற்றி பெற வாழ்த்த்க்கள்
@உழவன்
வாழ்த்துக்கு நன்றிங்க :)
எனக்கு கிடைத்த புக்கர் பரிசு:
anujanya
to me
show details Dec 9 (21 hours ago)
அசோக்,
உங்க கவிதை இப்பதான் படித்தேன். Simply oustanding. Spell bound. இப்படி எழுதக் கூடியவரா நீங்கள்? அப்புறம் என்னய்யா மரண மொக்கை போட்டு கிட்டு? மொக்கை போடக் கூடாதுன்னு சொல்லல. எனக்கும் பிடிக்கும். ஆனா, நிறைய டைம் நல்ல கவிதைக்கும் செலவழியுங்கள் என்கிறேன். பரிசு கிடைக்கட்டும். கிடைக்காமல் போகட்டும். I dont care. என்னைப் பொறுத்த வரை பிரமாதமான கவிதை.
வாழ்த்துகள் அசோக்.
பிரியங்களுடன்
அனுஜன்யா
@அனுஜன்யா
குருவே சரணம்
//நானே காடாக
காடே நானாக//
உறுபசி அருமை அஷோக்
வெற்றியடைய வாழ்த்துக்கள்
@thenammailakshmanan
நன்றி.. உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்
நல்லா இருக்கு..! நண்பரே...!
எல்லா வார்த்தைகளுமே அருமை... ஒரு போட்டியின் மூலம் பலமான கவிதைகள் நிறைய கிடைத்திருக்கிறது ... வாழ்த்துக்கள் நண்பரே..
@Sakthi
நன்றி நண்பரே!
@ பலா பட்டறை
உண்மைதாங்க, அதுபோல பாராட்டுகளும் வந்து விழுவது மிகுழ்ந்த தந்துருஷ்டியை கொடுக்கிறது. நன்றி நண்பர்களே
நல்லா இருக்கு அஷோக்.
வாழ்த்துக்கள்!
வார்த்தைகளின் வீச்சு ஏதேதோ பேசுகிறது உள்மனசுக்குள். மிகவும் நன்று.
வெற்றி பெற வாழ்த்துக்கள் !
@கே.ரவிசங்கர்
நன்றி உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.
உறுபசி - ரொம்ப நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்
அருமை சார் வலிமிகுதியில்
வாழ்த்துக்கள் சார்
@அரவிந்தன்
//வார்த்தைகளின் வீச்சு ஏதேதோ பேசுகிறது உள்மனசுக்குள். மிகவும் நன்று. வெற்றி பெற வாழ்த்துக்கள்!//
நன்றி அரவிந்தன் உங்கள் உணர்தலுக்கும் வாழ்த்துகளுக்கும்.
@ S.A. நவாஸுதீன்
//உறுபசி - ரொம்ப நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்//
தொடரும் பாராட்டுகள் மகிழ்ச்சியை கொடுக்கிறது.நன்றி நவாஸ் உங்கள் முதல் வருக்கைக்கும் வாழ்த்துக்கும்.
@ பிரியமுடன்...வசந்த்
//அருமை சார் வலிமிகுதியில்
வாழ்த்துக்கள் சார்//
ரொம்ப நன்றி வசந்த்
அசோக்கு..!
கவிதை சூப்பரப்பூ..!
தண்டோரா..!
ஒரு பையனை வளர விடுங்கப்பா..! எட்டிப் பார்க்கும்போதே தலைல குட்டுனீங்கன்னா எப்படி..?
அவரைக் கேக்குறீங்களே.. டாஸ்மாக் கடைல சரக்கு வாங்கிட்டு காசு கொடுக்காம வர முடியுமா உங்களால..?
@ உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
//அசோக்கு..!
கவிதை சூப்பரப்பூ..!//
ரொம்ப நன்றி அண்ணே... நீங்க வந்து வாழ்த்தனதுக்கு சந்தோஷம்ண்ணே...
தண்டோராஜி அண்ணனுக்கு என்ன பதில்?
@தியாவின் பேனா
நன்றி தியா :)
அப்பப்பா.... பயமுறுத்துகிறது உங்கள் கவிதை... வாழ்த்துக்கள்.... (எல்லோரும் சொல்வது போல் அது என்ன morbid கவிதை..?)
@காயத்ரி
நன்றி காயத்ரி/காயு :)
வெற்றி பெற வாழ்த்துக்கள்
நாமே அதுவாய் அதுவே நாமாய் ஆகும் தருணம் நம்மை உணர்வோமா?இல்லை அதுவாய் மாறுவோமா?
வலி சுகம்
வாழ்த்துக்கள்
பத்மா
@நாவிஷ் செந்தில்குமார்
நன்றி செந்தில் :)
@பத்மா
அவரவர் பார்வையில் கவிதை தன்னை வடிவமைத்துசெல்வதே மகிழ்ச்சி, உங்கள் வாழ்த்துகளுக்கும்.
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்!
அன்புடன்
உழவன்
வாழ்த்துகள் சார் !
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் அசோக்!
-ப்ரியமுடன்
சேரல்
வாழ்த்துக்கள் அண்ணா...
உரு பசி என்றால் என்ன என்று இதுக்குதான் கேட்டேன்...ஞாபகம் இருக்கிறதா...
வெற்றி பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள் நண்பரே !
congrats ashok
போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!
கலக்கிட்டீங்க!!
வெற்றி பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
Post a Comment