தன் மௌனமொழி உடைத்து சூன்யமாய்
ஆச்சரியம் பொங்க மூச்சின் மய்யம் மாற்றி
உறக்கத்தையும் கனவுகளையும் ஒன்றாக்கி
எப்பொழுதினிலும் அதனை உணர்ந்து
சுவாசம் உடல் மனம் இருப்பு தாண்டி
நினைவுகளில் நிறையும் தனிவெளி
இலக்கின்றி திரியும் மறைபொருளாய்
எதுவுமற்ற மறைந்த கேலிக்கூத்தாய்
எல்லாம் கலந்து விரியும் பிரபஞ்சமாய்
என்னுள் நீளும் தன்புணரும் சொரூபநிலை
இருத்தலின் பேரானந்தம்
சுரக்கும் ஆதாரம் என
மெல்ல திறக்கும் என்
ஊற்றின் கண்
Saturday, December 19, 2009
ஊற்றின் கண்
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
மகனே..
ஒரே ஜம்ப்பா இருக்கு...தரையில் இருந்து வானத்திற்கு.பேரானந்தமான அனுபவமாக இந்தது.வாசித்து நிறையும் போது.முழமையான நிறைவான வளர்ச்சி!
வாழ்த்துக்கள் அசோக்!
//நினைவுகளில் நிறையும் தனிவெளி
இலக்கின்றி திரியும் மறைபொருளாய்
எதுவுமற்ற மறைந்த கேலிக்கூத்தாய்//
அருமை!
ம்..நன்று அசோக்..
பிரிச்சு எதையும் பாராட்ட கூடாதுன்னு மொத்தமா நீங்க எழுதினதுக்கு பிடிங்க ஒரு பூங்கோத்து... SUPER.
புத்தக வெளியீட்டு விழா போயிட்டு வந்துட்டு ஒரு மாதிரியாதான்யா... இருக்கீரு!!
நல்லா இருக்குங்க
தொடரும் முடிவிலியான
வரி(லி)கள்.
என்னுள் நீளும் தன்புணரும் சொரூபநிலை
இருத்தலின் பேரானந்தம்
சுரக்கும் ஆதாரம் என
மெல்ல திறக்கும் என்
ஊற்றின் கண்
வரிகள் முழுவதையும் மிக தெளிவாக இணக்கமாக பினைந்து இருக்கிறீர்கள்...
வாழ்த்துக்கள்...
வர வர சரியில்ல...
ரொம்ப நல்லா எழுதுறீங்க அசோக்
தொடருங்கள்...
அசோக், நல்லா வந்திருக்கு. இரண்டு மூன்று முறை படிக்க வேண்டி இருந்தது. உங்கள் வீச்சு அதிகமாகி விட்டதும், என் புரிதல் குறுகுவதும் ஒரே சமயத்தில் நடப்பதாலும் இருக்கலாம் :)
அனுஜன்யா
மொத்தம் மூன்று பரிமாணங்களில் கற்பனை பண்ணினேன் எல்லாமே ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்திடுச்சு சார்...!
நச்சுன்னு எழுதியிருக்கீங்க...ரொம்ப லேட்டா வந்துட்டேனே.
கவிஞர் அசோக்...வாழ்க...வாழ்க...
ஆகா அருமை
vertical integration.. தியரியின் அடிப்படையில் எழுதபட்டதா? வர,வர உன் கிட்ட பேசவே பயமாயிருக்கு டொக்டர்!!!!!
@பா.ரா.
லயித்தற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சித்தப்ஸ் :)
@பூங்குன்றன்.வே
:)
@புலவன் புலிகேசி
:)
@பலாபட்டறை
Thankspa..
@கலையரசன்
எப்பவமே ஒரு மாதிரிதான்னு நண்பர்கள் சொல்லுவாங்க கலை :)))
@ஜொதி
நன்றிங்க
@ஹேமா
நன்னிங்க
@கமலேஷ்
:) :)
@அதிபிரதாபன்
:)
@மண்குதிரை
ரொம்ப நன்றி நண்பா
@ அனுஜன்யா
//உங்கள் வீச்சு அதிகமாகி விட்டதும், என் புரிதல் குறுகுவதும் ஒரே சமயத்தில் நடப்பதாலும் இருக்கலாம்:)//
மிகவும் ரசித்தேன் :)))) :P
@ப்ரியமுடன் வசந்த்
அப்படியா வசந்த் எங்கயோ போய்ட்டிங்க.. குட் :) Thankyou
@க.பாலாசி
எப்பவேன்னாலும் வரலாம் always welcome :) நன்றி பாலாசி
@தியாவின் பேனா
நன்றி தியா
@தண்டோரா
நன்றி ஜி :)
யாருப்பா அது ஒரு அப்பாவி கவிஞனுக்கு! மைனஸ் ஓட்டுயெல்லாம் போடறது.. சொல்லிட்டு போட்டீங்கன்னா சந்தோஷம். யூத்து நீங்க இல்லையே??? :)
நான் வளர்கிறேனே மம்மீ (யூத்து டயலாக்தான்)
fine Sir.. Naan oru + ottu pottutaen.. :)
@Karthikeyan.G
போடுங்க போட்டுட்டேயிருங்க :)
நன்றாக இருக்கிறது. ;)
:)
Post a Comment