Monday, January 11, 2010

கேபிளை மூக்கில் குத்தவேண்டும், புத்தக கண்காட்சி மற்றும் நித்தியானந்தர்









(D.R.Ashok,பலாபட்டறை ஷங்கர்,வண்ணத்துபூச்சியார்சூர்யா(மெய்ஞானமூடில்), மீன்துள்ளியான், ஜாக்கிசேகர்,அப்துல்லா,காவேரி கணேஷ்,புலவர் புலி, சங்கர், தண்டோரா,மயில்ராவணன், எறும்பு ராஜகோபால்(அடுத்தபடத்தில் ஜாக்கியின் இடத்தை பிடிப்பவர்.. யூத்து..என் டர்ர்ர்ரு கவிஞர்..கேபிள் சங்கர்)
மேலும் பதிவர்களின் போட்டோ லிங்க, கேபிள் சங்கர், ஜாக்கி சேகர்.

9-1-10 வழக்கம் போல் லேட்டாக 7.55pmக்கு டிக்கெட் counter இடத்திற்கு சென்றேன். 5 ரூபாய் இல்லாத காரணத்தால் counter இடத்திலே நின்றுயிருந்தேன். பிறகு ஒருவர் பத்துரூபாய் நீட்டி ஒரு டிக்கெட் கேட்க சில்லறையில்லையென்றனர். அவர் இரண்டு டிக்கெட் எடுக்க ஒன்று இலவசமாக என்னிடம் கொடுத்தார் அந்த முகம் தெரியா அன்பருக்கு நன்றி. வாழ்க்கையில் இலவசமாக கிடைத்த முதல் பொருள். 8.10க்கு எல்லோரும் வெளியேறிக்கொண்டுயிருக்கும் போது ஞான் உள்நுழைய வழக்கம் போல் ஜொள்ளிலிட்டுக்கொண்டேதான். தண்டோரா.. கிழக்குன்னா எல்லோருக்கும் தெரியும்ன்னார். ஆனா நான் கேட்ட சில பல பேர்களுக்கு தெரியவில்லை.. அப்புறம் இரு மூரு போன்களுக்கு முறையே 420 அப்புறம் 402 என்று வழிகாட்ட நண்பர்களை சென்றடைந்தேன். வழக்கம்போல சற்று கல்லாய்த்துக்கொண்டு வெளியே வந்தோம். லக்கியும் அதிஷாவும் கலந்துக்கொள்ளாமல் ப்ரவுஷரில் மூழ்கியிருந்தார்கள் நிமிர்ந்துகூட பார்க்காமல்.(காரணம் பதிவு டைப் செய்து கொண்டிருக்கும்போதுதான் தெரிந்ததுக்கொண்டேன்). கேபிள் ’அந்த ஆளு’ என்று என் இஷ்ட எழுத்தாளரை பற்றி கூறினார். அடுத்தமுறை குவார்ட்டர் வாங்கிகொடுத்து மூக்கில் குத்தவேண்டும் என்று மனதில் குறித்துக்கொண்டேன். அவர் கையிலிருந்ததோ காலம் தப்பிய ஒரு இயந்திர புத்தகம். அவரது மார்டனஸ்ட் மற்றும் வெஸ்ட்ர்னிஸ்ட்டு ஒழுத்தாளரின் புத்தகம் அட ராமா. தண்டோராவின் கையிலிருந்த மூன்று நகுலன் புத்தகத்திற்கு குறி வைத்தேன். ரொம்ப உஷாரவே இருந்து தொலைத்தார். இனி படித்து தொலைவார்.
நண்பர்களை குடிக்க அழைத்தேன். யாரும் வரவில்லை என்பது ஆச்சரியம். (என்ன இலக்கியவாதி இவங்க) கடைசியில் ஆட்டோ ஓட்டுனரோடு சரக்கடித்து அன்றைய நாளை முடித்துவைத்தேன். ஆட்டோ 300 சரக்கு 167 = Rs.467.(மொத்தசெலவு)

வீட்டுக்கு வந்த பிறகு இன்னும் படிக்காமல் அடுக்கி வைத்துயிருக்கும் புத்தகங்கள் எனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது சித்தப்பு புக் ரிலிஸ் போது வாங்கிய கூடுதல் நாலு புத்தகங்களும் சேர்த்து. சித்தப்பு உங்க புத்தகம் படிச்சிட்டேன்.

மறுநாள்(10.01.09) மாலை நான்கு மணிக்கு நேரம்(மிகவும் அரிதாக 20 வருடங்களுக்கு ஒருமுறை) கிடைத்தது நேராக போன இடம் நித்தியானந்தரின் நிகழ்வுக்கு. ஓஷோ, ஜேகே, மஹாபெரியவர், விசிறி சாமியார் என்று சந்திக்க நினைத்தவர்களை ஒருவரைகூட பார்ததில்லை. இவரை பார்த்தது சந்தோஷமே. நித்தியானந்தரின் பேச்சு நன்றாகயிருந்தது. நடுநடுவே ஜோக் அடிச்சார்.(ஓஷோவின் நியாபகம் வராமல் இல்லை) ஏதோ ஒரு நல்ல உணர்வு இருந்தது. வரும்போது குடிக்க தோன்றவில்லை(அது முன் தீர்மானித்ததுதான்).(டாஸ்மாக் சாத்திவிட்டான் என்பது வேறுவிஷயம்) இரவு 3.30 மணிக்கு(அதிகாலை) தான் தூக்கமே வந்தது. நாளைல இருந்தது regulara செய்ய வேண்டியதை ரெகுலரா செய்யவேண்டும் என்ற வாழ்வின் தத்துவம் புரிந்தது. 16 வருட சரக்கு வாழ்க்கையில் ஒரு நாள் குடிக்காமலிருந்தது ஆச்சரியமே. அதுவே இந்த பதிவேழுத(உங்களை கொல்ல) தோன்றிய அறிய விஷயமும் கூட. வாங்கிய புத்தகம் பெயர் ’ஜீவன் முக்தி’. தள்ளுபடி விலை 150 அசல் ரூ.300. கழுத்து மாலை Rs.100(தட்ஸ் டூமச்)

பின்குறிப்பு: இரு நாள் சாயந்திரமும் பிஸியாக! இருந்ததால் சாட்டிங்கில் வரமுடியவில்லை என்று தோழிகளுக்கு(தோழர்களுக்கு: அது ரொம்ப முக்கியம்) தெரிவித்துக்கொள்கிறேன்.

30 comments:

சங்கர் said...

தலைவரே, நிச்சயமா இது இலக்கியம் தான், எதுக்காக லேபிள்ல அந்த கேள்விக்குறி?

Paleo God said...

பட்டர்ஃப்ளை சூர்யா, மீன்துள்ளியான்,:

மெய்ஞான மூடா..சரிதான்.
::))
ஆட்டோ பத்திரமா வீடு போச்சா..??:)

சந்தித்ததில் மகிழ்ச்ச்ய்

Paleo God said...

சங்கர் said...
தலைவரே, நிச்சயமா இது இலக்கியம் தான், எதுக்காக லேபிள்ல அந்த கேள்விக்குறி?//

பாருங்க இத விட வேறென்ன வேண்டும்..::)

சந்தித்ததில் மகிழ்ச்சி ஜி ::))

butterfly Surya said...

யோவ் டாக்டரு, என் பெயரையே மாத்தீடீங்களே..??

நீங்களே ஒரு நடமாடும் இலக்கியம்..

Rajan said...

//நித்தியானந்தரின் பேச்சு நன்றாகயிருந்தது. நடுநடுவே ஜோக் அடிச்சார்.//

குண்டலினி எழுப்பலையா தலைவா ?

கலையரசன் said...

பாஸ் நல்லா கண்ணை விரிச்சு பாத்தீங்களா?? அது ப்ரவுச்ர்ஸ்தானா? இல்ல.. சரோஜாதேவி புத்தகமா???

இப்படிக்கு,
இன்னொரு பெரு மொக்கை.

மீன்துள்ளியான் said...

சந்தித்ததில் மகிழ்ச்சி .. எங்க உங்க என்டர்ர்ர்ரர் கவிதைகள்

Jerry Eshananda said...

ரசித்தேன்.

Ashok D said...

@சங்கர்
இலக்கியமா.. எங்க எங்க... என்னப்பா பயமுறுத்திறீங்க.. :)

@ஷங்கர்
உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியே :)

@Butterfly surya
கிட்டத்தட்ட மூணு சங்கர் இருந்ததனால, அதுவும் கேபிள் மூக்கல குத்தனும்னே நெனச்சிட்டுயிருந்ததனாலதான், மற்றபடி surya நாடறிஞ்ச பேராச்சே ;)

Ashok D said...

எனக்கு மைனஸ் ஒட்டா... யாருப்பா அந்த அதிர்ஷ்ட்டக்காரன்?

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

ஹேமா said...

இரண்டு ஓட்டும் போட்டு நீங்க எழுதினதெல்லாம் வாசிச்சிட்டேன்.
எல்லாரையும் பாத்திட்டேன்.

ஜெட்லி... said...

டாக்டர் அண்ணே உங்களை பார்க்கணும் உங்க கவிதையை
பத்தி பேசுனும்னு ரொம்ப ஆவலா இருந்தேன்....நான்
கொஞ்சம் சீக்கரமே கிளம்பி விட்டேன்...நீங்க வழக்கம்
போல் லேட்ஆக வந்துடிங்க............

Ashok D said...

@Raja Radhamanalan
ஏம்பா குண்டு எலி தெரியும் அது என்ன குண்டலினி ;)

@கலையரசன்
மேல இரண்டு மைனஸ் ஓட்டு விழுந்துயிருக்கே பாக்கலையா கலை

@மீன் துள்ளியான்
’எண்டர் கவிதைகள்’ என்ற பேர்ல எழுதறது கேபிள் சங்கரு :)

@ஜெரிஈசானந்தா
:)

Cable சங்கர் said...

என்னது நேத்து குடிக்கலையா..? அப்ப பார்ட்டி கொடு..:))

Cable சங்கர் said...

/குண்டலினி எழுப்பலையா தலைவா ?//

என்னது குண்டலினியா..? குண்டு மாலினியைத்தான் எழுப்பணும்..:))

Thenammai Lakshmanan said...

நல்லா புக் ஃபேர் எல்லாம் போயிட்டு சூப்பர் இடுகை எல்லாம் போடுறீங்க அஷோக்


ஹ்ம்ம்ம்ம்ம் எங்களால்தான் போக முடியல

thiyaa said...

நல்ல ரசனையாக இருக்கு

Rajan said...

//@Raja Radhamanalan
ஏம்பா குண்டு எலி தெரியும் அது என்ன குண்டலினி ;)
//

ஜெய மாலினி , ஹேமமாலினி போல இது ஒரு பிகர் தலைவா

Ashok D said...

@ulavu thiratti
திரட்டிக்கு தமிழர் திருநாள் வாழ்த்துகள்

@ஹேமா
அப்படியே மனியாடரா ஏதாவது அனும்ச்சி வைச்சிங்கன்னா... நீங்க ரொம்ப சமத்துதான் :))

@ஜெட்லி
உண்மையாவா.. ஒ I miss u man... அடுத்தவாட்டி சீக்கரம் வந்துர்றேன்... கவிதை எப்படியெல்லாம் இருக்க கூடாது என்பத கேபிள்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாம் ;)

Ashok D said...

@கேபிள்சங்கர்
வாங்க அதுக்கு தானே வெயிட் பண்ணிட்டுருக்கேன்..:)

@தேனம்மைலக்‌ஷமணன்
ஏங்க போகல... நல்லா திருவிழா மாதிரி இருந்துச்சே...

@தியாவின் பேனா
போங்க தியா ரொம்ப தான் புகழ்றீங்க :))

Ashok D said...

@ராஜன்
எனக்கு இரண்டு பேரையும் பிடிக்கும். அப்ப மூணாவதும் பிடிக்கும் :))

பா.ராஜாராம் said...

sorry மகனே..லேட்டாகி போச்சு.(நீங்க மட்டும் லேட்டாதானே போயிட்டு வந்திருக்கீங்க..)

தரமான பதிவு,பகிரல்( 16 வருட சரக்கு வாழ்க்கையில் ஒரு நாள் குடிக்காமலிருந்தது ஆச்சரியமே.)

:-))))

நல்லா இருங்கப்பா,நாசமா போரவன்களா!(வயிற்றெரிச்சல்..)

'கலக்கல்' ரிப்போர்ட் மகனே!

ஹேமா said...

ம்க்கும்...அதுக்குத்தான் ஓட்டுப் போட்டுட்டேனே !

ரெண்டே ரெண்டு போட்டோ பாத்ததுக்கு மணியோடர் கேக்கிற ஆள் நீங்கதான்.சித்தப்ஸ் உங்களை இப்போ சரியாக் கவனிக்கிறதேயில்ல !

அத்திரி said...

//அடுத்தமுறை குவார்ட்டர் வாங்கிகொடுத்து மூக்கில் குத்தவேண்டும் //

சொல்லக்கூடாது செஞ்சிரனும்.....

Ashok D said...

@சித்தப்ஸ்
//தரமான பதிவு,பகிரல்( 16 வருட சரக்கு வாழ்க்கையில் ஒரு நாள் குடிக்காமலிருந்தது ஆச்சரியமே.)//
எவ்வளவு பொறுப்பா இருக்கம் பாருங்க :)

@ஹேமா
//இரண்டு ஓட்டும் போட்டு நீங்க எழுதினதெல்லாம் வாசிச்சிட்டேன்.
எல்லாரையும் பாத்திட்டேன். அப்படியே மணியாடரும் அனுப்பிவெச்சிட்டேன்// இப்ப வாசிச்சு பாருங்க.. உங்க த்வனி அப்படியே பொருந்துது பாருங்க :)

@அத்திரி
நீங்களே செஞ்சிருங்க.. strongaதானே இருக்கிறீங்க

அன்புடன் நான் said...

பகிர்வுக்கு நன்றிங்க.....

தங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

Ashok D said...

@சி.கருணாகரசு
நன்றி, உங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துகள் :)

காளிராஜ் said...

ரசித்தேன்..

தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

Ashok D said...

@காளிராஜ்
நன்றி.. உங்களுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் :)