
அவள் மடியின்
இதம் இல்லையெனில்
பிடி மரணம் என
காலன் சொல்லியிருப்பான்
அவளைத்தேடி துவங்குகையில்
வெண்பனியில் உறைந்திருக்கும்
அன்பின் நதியை சென்றடைந்தேன்
அவள் உடன் சென்றுவிட
மனம் துடித்தாலும்
தடுத்துக்கொண்டே இருக்கின்றன
உடன் சுற்றங்கள்
தனிமைபோர்வையில்
வழிந்துக்கொண்டிருக்கும்
எங்கள் உடல்கொண்ட மனங்களுக்கு
வார்த்தைகளே போதுமாய் இருக்கின்றன
மனச்சுமைகளை அடித்து நொறுக்க
செல்லமாய் சிணுங்கிக்கொள்ள
அன்புகொள்ள கட்டியிருக்கிக்கொள்ள
நினைவுக்கனவுகளில்
21 comments:
அசோக்,
நீங்கள் ஏன் எனது புகைப்படம் குறித்தான கேள்வியையும், அதையொட்டி உங்கள் படம் பெரிதாக உள்ளது என்றும் தொடர்ந்து ஏன் சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.
ஒரு வேளை என்னைப் பெரிய அளவில் பார்ப்பதே உங்களது கேள்வி மற்றும், உங்களின் புகைப்படம் குறித்தான ஒப்பீடுகளின் மறைபொருளாக இருப்பின்.....
இதோ எனது படங்களின் சுட்டிகள்.
2005 இல் இருந்து உள்ளது என்று நினைகிறேன்.
http://balloonmama.net
உரையாடலுக்கு நன்றி !
அட...காதல் கவிதை.
நல்லாயிருக்கே !
நல்லாயிருக்குண்ணா வரிகள்...
//காதல் கிறுக்கு//
உங்களுக்கு பிடிச்சுருக்கு போல....
கல்வெட்டு.. அது வால் ப்ளாகில் நடந்த உரையாடலின்(உங்கள் பின்னூட்டத்துன்) நீட்சியே(பதிலே).. சும்மா ஒரு ஜாலிகே..
//ஒரு வேளை என்னைப் பெரிய அளவில் பார்ப்பதே உங்களது கேள்வி//
மற்றபடி யாரையும் பெரிய ஆள் என ஞான் நினைப்பதே இல்லை. நானே பெரிய ஆள் என்ற ஈகோ எனக்குண்டு :)
நன்றி!
நல்லா இருக்கு நண்பா
தட்டச்சுப் பிழையை சரி பாருங்கள்
@ஹேமா
//அட...காதல் கவிதை.
நல்லாயிருக்கே !//
அப்ப இது கவிதைன்னு சொல்லிட்டீங்க.. நன்றி ஹேமா ;)
@பிரியமுடன் வசந்த
தாங்ஸ்ங்ணா :)
@ஜெட்லி
அப்டிங்கலாணா? :))
@மண்குதிரை
நல்லாயிருக்குதா நன்றி நண்பரே
சரிபண்ணிட்டேன்... (மொதல்ல இந்த கஙசன’வ கத்துக்கணும்)
ரொம்ப நல்லா இருக்கண்ணா..
//காளன்///
இது சரியான ஸ்பெல்லிங்தானா
மருமகள் பொங்கலுக்கு ஊருக்கு போயாச்சாக்கும்...விடுங்க மகனே சந்தோசமாய் இருந்துட்டு வரட்டும்.கூடுதலாய் ஒரு "கால்" வாங்கினால் போகுது...
:-)
ரொம்ப பிடிச்சிருக்கு அசோக்.
பிளாக் மெயில்ன்னு ஒரு கவிதை வருது பின்னால..அது கிட்ட தட்ட இதேதான். மெயிலில் அனுப்பி தாரேன்..
hats off மக்கா!
@கமலேஷ்
முதல்ல காலன் தான் போட்டேன் மண்குதிரை சொன்னவுடனே mistakes correct பண்ணும்போது correctu mistaka ஆகிடுச்சு... ஹிஹி(ஆமா ’காலன்’ correctuங்லாண்ணா
@சித்தப்பு
கால்க்கு மேல சாப்பிடமாட்டேன் சித்தப்ஸ். (இது என் தோழியின் வேண்டுகோளுக்காக எழுதியது) சும்மா நேயர் விருப்பம்.
//அவளைத்தேடி துவங்குகையில்
வெண்பனியில் உறைந்திருக்கும்
அன்பின் நதியை சென்றடைந்தேன்
அவள் உடன் சென்றுவிட
மனம் துடித்தாலும்//
நல்லா இருக்கு அஷோக் உங்க காதல் கிறுக்கு
>>>வெண்பனியில் உறைந்திருக்கும்
அன்பின் நதி<<<
பல அர்த்தங்களையும் காட்சிகளையும் உணர்வுகளையும் என்னுள் ஏற்படுத்தியது.
>>>தனிமைபோர்வையில்
வழிந்துக்கொண்டிருக்கும்
எங்கள் உடல்கொண்ட மனங்களுக்கு
வார்த்தைகளே போதுமாய் இருக்கின்றன<<<
ஆம்! வார்த்தைகள் ஒரு தீராத விளையாட்டு. அது மற்ற கவலைகளை எல்லாம் தின்று புது புது மாயை சதுரங்கங்களை கட்டவிழ்க்கிறது.
@thenammailakshmanan
நல்லாயிருக்குன்றீங்க.. நான் ரொம்ப சாதாரணமாதான் எழுதியிருந்தேன்.. பித்த நிலையை தொடவேயில்லை :)
@சாய்ராம்
ஆழமான ரசனை, நன்றி சாய்ராம் :)
கவிதை நல்லா இருக்குங்க.....
நன்றி இரவு பறவை :)
அருமையாக இருக்கிறது, காதல் கவிதை.
@V.Radhakrishnan
ரொம்ப நன்றீங்க!
கவிதை நல்லாயிருக்குங்க.
@சி.கருணாகரசு
நன்றிங்க :)
கவிதை மிகவும் சிறப்பாக இருக்கிறது.
@நன்றிங்க வி.ராதாகிருஷ்ணன்
Post a Comment