Saturday, May 15, 2010

அகவலோசை கவிதைகள்




ஞானம்
யோசித்து பார்க்கையில்
எளிதில் கைகூடுவதாகவும்
எளிதில் கைகூடாததாகவும்
ஒரே நேரத்தில் தோன்றுவது



ஏன் இப்படி வீணாய்
சுற்றி வருகிறது
கடிகாரத்தில் முள்




மனதில் எழுதி பாதுகாக்காமல்
விட்ட கவிதையொன்று
அழுதுக்கொண்டே
பின் தொடர்ந்தது
குழந்தையைபோல



பள்ளியும் கல்லூரியும்
கற்றுக்கொடுத்தது
கற்றுக்கொள்ளல் வகுப்பறைகளில்
இல்லையென்பதை!



வாழ்வின் அரசியலை
எளிதாய் கடக்க
உதவுகிறது
ஞானம்

45 comments:

எம்.எம்.அப்துல்லா said...

:)

ஹேமா said...

//ஞானம்
யோசித்து பார்க்கையில்
எளிதில் கைகூடுவதாகவும்
எளிதில் கைகூடாததாகவும்
ஒரே நேரத்தில் தோன்றுவது

மனதில் எழுதி பாதுகாக்காமல்
விட்ட கவிதையொன்று
அழுதுக்கொண்டே
பின் தொடர்ந்தது
குழந்தையைபோல//

இந்த இரண்டும் பிடிச்சிருக்கு அஷோக்.அடிக்கடி என் இயல் வாழ்க்கையில் எப்போதுமே அனுபவிப்பேன்.அதையே நீங்க சொன்ன மாதிரி இருக்கு.

ஜெட்லி... said...

ஞானம் வந்திருச்சி அண்ணே.....

vasu balaji said...

ஆஹா!

பா.ராஜாராம் said...

யப்பா...ஞானம்! (ஞானத்தில் தொடங்கி, ஞானத்தில் முடிவு)

பார்முக்கு வந்தாச்சு போல.. :-)

அருமை மகன்ஸ்!

ரொம்ப நெருக்கமாக உணர்ந்தது, இது.

//மனதில் எழுதி பாதுகாக்காமல்
விட்ட கவிதையொன்று
அழுதுக்கொண்டே
பின் தொடர்ந்தது
குழந்தையைபோல//

Ashok D said...

M.M.அப்துல்லா
:)

Ashok D said...

@ஹேமா
அதெப்படி இருவர் மனதும் பல விஷயங்களில் ஒத்துபோகிறதோ எனக்கே தெரியவில்லை..

சில விஷயங்களில் நேரதிர் :)

Ashok D said...

@ஜெட்லி
ஞானமே அது பொய்டா வெறும் காற்றடித்த பய்யடா :))

Ashok D said...

@ வானம்பாடிகள்
நன்றி சார் உங்கள் முதல் வருகைக்கு...

ஹேமா அழுதுனு இருந்தியே வானம்பாடிகள் உனக்கு கமெண்டு போடறதில்லைன்னு... பாத்தியா பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆஹா..க்கு இதெல்லாம் ஓவருன்னு நீ சொல்லற mind voice கேக்குது ஹேமா

Ashok D said...

@சித்தப்ஸ்
நான் நல்லாதான் எழுதுவேன்.. மக்களுக்கு புரியனுமேன்னு சாதரணமா எழுதிட்டு போறது :)

Thenammai Lakshmanan said...

மனதில் எழுதி பாதுகாக்காமல்
விட்ட கவிதையொன்று
அழுதுக்கொண்டே
பின் தொடர்ந்தது
குழந்தையைபோல//

அட இது ரொம்ப அழகு அஷோக் :))

க ரா said...

அருமைங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அழகான வரிகள்

Jerry Eshananda said...

யப்பா...ஞானம் ........என்னப்பா ..ஆச்சு?

Ashok D said...

@தேனம்மை நன்றிங்க

@ராமசாமி கண்ணண்
வாங்க, முதல் வருகை :)

@அப்படிங்களா.. நன்றி T.V.R சார் :)

@ஜெரி
நல்ல ரேட் வந்தது வித்துட்டேங்க :))

நேசமித்ரன் said...

//யோசித்து பார்க்கையில்
எளிதில் கைகூடுவதாகவும்
எளிதில் கைகூடாததாகவும்
சுற்றி வருகிறது
கடிகாரத்தில் முள்//

நல்லா இருக்குங்க அசோக்

@ வானம்பாடிகள்
நன்றி சார் உங்கள் முதல் வருகைக்கு...

ஹேமா அழுதுனு இருந்தியே வானம்பாடிகள் உனக்கு கமெண்டு போடறதில்லைன்னு... பாத்தியா பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆஹா..க்கு இதெல்லாம் ஓவருன்னு நீ சொல்லற mind voice கேக்குது ஹேமா

//
@சித்தப்ஸ்
நான் நல்லாதான் எழுதுவேன்.. மக்களுக்கு புரியனுமேன்னு சாதரணமா எழுதிட்டு போறது :)//

எழுதுங்க தலைவரே ! இப்பவும் நல்லாதான் இருக்கு ... அப்பவும் அப்படிதான் இருக்கும்

இந்த நாள் போனா மறுபடி வராது !
இல்லையா ....

பொன்னி நதியளவு போன இரத்தம் போன பின்னே ......

கண்ணதாசன் வரி வாசிச்சிருப்பீங்கதானே !

:)

anujanya said...

முதல் இரண்டு பிடித்திருக்கிறது அசோக்.

//பள்ளியும் கல்லூரியும்
கற்றுக்கொடுத்தது
கற்றுக்கொள்ளல் வகுப்பறைகளில்
இல்லையென்பதை //

இதில் இரண்டாம் வரியை 'கற்றுக் கொடுக்காதது' என்று மாற்றினாலும் வசீகரமாகத் தோன்றியது. சும்மா ஒரு மொழி விளையாட்டுக்கு :)

அனுஜன்யா

Ashok D said...

//எழுதுங்க தலைவரே ! இப்பவும் நல்லாதான் இருக்கு ...//
நன்றிங்க.. நேசன் :) எழுதிருவோம்

பத்மா said...

அசோக் லேட்டா படிக்கறேன் .பட் எல்லாம் சூப்பர் அண்ணன் .ஊர்லேந்து வந்து உங்க கவிதை மட்டும் படிச்சுட்டு ...தூங்க போறேன் .ஆனா சிந்தனையை கிளப்பிவிட்டது .ரொம்ப நல்லா இருக்கு .அடிக்கடி எழுதுங்கண்ணா

Ashok D said...

அனுஜன்யா அவர்களின் விஜயத்தினால் காண்டு தீர்ந்து தன்யனானேன் பிரபு...

மொத்தமே 15 மினிட்ஸ்ல வந்தது இக்கவிதைகள்(!).. எனக்கும் மொத 2 பிடித்தமானவை...

கல்லூரி பள்ளி வயதிலே நாம் உறைந்து போயிருக்கிறோம் என்பது புரிகிறது.. (நான் முன்பு ஒரு முறை உங்கள் பிளாக் cmtல் கூறியுள்ளேன்)

அன்புடன்
அஷோக்
நன்றி தல

Ashok D said...

@padma
சரிங்கக்கா :)

பிரவின்ஸ்கா said...

// மனதில் எழுதி பாதுகாக்காமல்
விட்ட கவிதையொன்று
அழுதுக்கொண்டே
பின் தொடர்ந்தது
குழந்தையைபோல //

அருமை

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க நண்பரே...கவிதையின் முதல் வரிகள் மிகவும் வசீகரமாக ஆரம்பிக்கிறது...

க.பாலாசி said...

//மனதில் எழுதி பாதுகாக்காமல்
விட்ட கவிதையொன்று
அழுதுக்கொண்டே
பின் தொடர்ந்தது
குழந்தையைபோல//

உண்மதானுங்க... விடமாட்டுதுங்க...

//கற்றுக்கொள்ளல் வகுப்பறைகளில்
இல்லையென்பதை!//

அட.... இதுவும்தான்....

நல்ல....நல்ல......

Ashok D said...

@பிரவின்ஸ்கா
நன்றி :)

@கமலேஷ்
இனி முழுவதும் வசீகரமாய் எழுத முயலுகிறேன் கமலேஷ் ;)

@க.பாலாசி
நன்றி பாலாசி :)

ஹேமா said...

அஷோக்...வில்லன் வில்லன் சரில்ல !அண்ணா பாருங்க.உங்க மகனைக் கண்டிச்சு வையுங்க.

பேசறப்போ....நிறையப்பேர் இருந்தாலும் வானம்பாடிகள் ஐயா பேர் டக்குன்னு வந்திச்சு.ஐயா மன்னிச்சுக்கோங்க.

Ashok D said...

@Hema
இன்னும் நிறைய பேர் இருக்காங்களா... சொல்லு ஹேமா எல்லார் பேரையும் போட்டுறேன்

//வில்லன் வில்லன் சரில்ல//
உனக்கு நல்லதுதான் செஞ்சியிருக்கேன்.. ஆனால் என்னை வில்லன்னு சொல்லற.. சித்தப்ஸ்கிட்ட போட்டு வேற கொடுக்கற.. இப்போ சொல்லு யாரு வில்லன்னு.. (வில்லின்னு) :)

VELU.G said...

//
கற்றுக்கொள்ளல் வகுப்பறைகளில்
இல்லையென்பதை!
//

ஆமாங்க அங்கே ஒன்னுமில்லைங்க

கவிதைகள் அருமை

vasu balaji said...

/@ வானம்பாடிகள்
நன்றி சார் உங்கள் முதல் வருகைக்கு.../

ஓஹோ. அவ்வளவு ஞாபக மறதியா. கொஞ்சம் பின்னாடி இடுகைல்லாம் பாருங்க சாமி. எத்தனை பின்னூட்டம் போட்டிருக்கேன்னு:))

ஈரோடு கதிர் said...

அடங்கொன்னியா

ஒரு கவிதைக்குப் பின்னால... பின்னூட்டத்துல இம்புட்டு பாலிடிக்ஸ் இருக்குதா...!!!???

நல்லா நடத்துங்கப்பு

சுவிஸ் டு சென்னை... வானம்பாடிக்கு ஒரு வட்டம் இருக்கும் போலயிருக்குதே

கலகலப்ரியா said...

//சுவிஸ் டு சென்னை... வானம்பாடிக்கு ஒரு வட்டம் இருக்கும் போலயிருக்குதே//

ஓய் கதிரு... பொத்தம் பொதுவா சொன்னா எப்பூடி... நாம எல்லாம் இருக்கோம்ல..

வானம்பாடி சாருக்கு இருக்கற மவுஸு தெரியாத மாதிரி பேச்ச பாரு..

Ashok D said...

புகுந்து பட்டைய கிளப்பிய நண்பர்களுக்கு நன்றி :)

கே. பி. ஜனா... said...

சுவையான கவிதைகள்!

Radhakrishnan said...

செப்பலோசையை விட அகவலோசை அருமைதான்.

பா.ராஜாராம் said...

ஒரு சிறுகதை.

வாசித்து பாருங்க மக்கா.

http://saravanakumarpages.blogspot.com/2010/05/blog-post_22.ஹ்த்ம்ல்

Ashok D said...

வருகைக்கு நன்றிகள்

@Velu.G

@ஈரோடு கதிர்

@கலகலப்பிரியா

@K.B.Janarthanan

@V.Radhakrishnan

விநாயக முருகன் said...

ஏன் இப்படி வீணாய்
சுற்றி வருகிறது
கடிகாரத்தில் முள்

டிஜிட்டல் கிளாக் வாங்குகண்ணாவ்

Sai Ram said...

சித்தனின் குறிப்புகளுக்கு முந்திய காலகட்டத்திற்கு வந்து விட்டீர்கள். அதாகபட்டது அடுத்தது நீங்க சித்தனின் குறிப்புகள் தான் எழுத போகிறீர்கள் என சொல்கிறேன்.

Ashok D said...

@N.விநாயகமுருகன்
கைகடிகாரமே கட்டுவதில்லை..:) நேரத்தில் நம்பிக்கையில்லை...

@சாய்ராம்
அதெல்லாம் எழுத ஒரு பெரிய கவிஞர் இருக்கிறார்...

நம்மக்குள்ள இருப்பது ஒரு ’அடங்காத சிறுவன்’.. அவ்வளவே :)

Ahamed irshad said...

நல்ல கவிதை.. அதிலும் கடைசி சூப்பர்...

மேடேஸ்வரன் said...

ரசித்தேன்...

Ashok D said...

@அஹமது இர்ஷாத்

@ மேடேஸ்வரன்

:)

மார்கண்டேயன் said...

கவிதை நன்றாக இருக்கிறது, இருப்பினும் 'கற்றுக்கொள்ளல்' சரியான பதமாய் தோன்றவில்லை, 'கற்றல்', 'கற்பது' என்றிருந்தால் நன்றாய் இருக்கும் என்பது என் எண்ணம் மட்டுமே . . .

Ashok D said...

@மார்க்கண்டேயன்
நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும் :)

goma said...

மனதில் எழுதி பாதுகாக்காமல்
விட்ட கவிதையொன்று
அழுதுக்கொண்டே
பின் தொடர்ந்தது
குழந்தையைபோல

இப்படித்தான் என் பின்னாலும் நிறைய குழந்தைகள் தொடர்ந்து வருகின்றன...